நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள் | 51 |
காபாலி: | ஆமாம்; அதுதான் சரி. அப்படியே செய்கிறேன். (பிடுங்கப் பார்க்கிறான்) | பௌ. பிக்கு: | எட்டிநில். காபாலிகத் திருட்டுப்பயலே. |
(கையால் விலக்கித் தள்ளி காலினால் உதைக்கிறான்) காபாலி: | விழுந்துவிட்டேனே | தேவ: | தேவடியாள் மகனே! உன்னை உயிரோடு விடுகிறேனா பார்! |
(ஓடிப்போய் பிக்குவின் தலையைப் பிடிக்கிறாள். பிக்குவுக்கு மொட்டைத் தலையாகையால் அவனைப் பிடிக்கமுடியாமல் அவளும் கீழே விழுகிறாள்). பௌ. பிக்கு: | (தனக்குள்) பிக்குகள் தலைமயிரை மழித்துவிட வேண்டும் என்று கட்டளையிட்ட புத்தபகவான் திரிகாலஞானி. (உரக்க) எழுந்திரு அம்மணி, எழுந்திரு. (தேவசோமையைக் கைகொடுத்துத் தூக்கி விடுகிறான்). | காபாலி: | பாருங்கள் மகேசுவரர்களே! பாருங்கள். சந்நியாசி என்று சொல்லிக்கொள்ளும் இந்த நாகசேனன்--போக்கிரிப்பயல், என் மனைவியின் கையைப் பிடித்து பாணிக்கிரகணம்16 செய்கிறான். | பௌ. பிக்கு: | இல்லை. சகோதரா! அப்படிச் சொல்லாதே. துன்பத்தில் விழுந்தவர்களைக் கைதூக்கிவிட வேண்டும் என்பது எங்கள் மதக்கட்டளையாகும். | காபாலி: | இதுவும் உங்கள் சர்வஜ்ஞன் (புத்தன்) கட்டளையா? முதலில் விழுந்தவன் நான் அல்லவா? நல்லது. இருக்கட்டும். இப்போ, உன்னுடைய மண்டை ஓடு என் கை கபாலபாத்திரமாகப் போகிறது. |
(எழுந்து சென்று பிக்குவைத் தாக்குகிறான்) பௌ. பிக்கு: | ஓகோ! துக்கம். அநித்தியம்.17 | காபாலி: | பாருங்கள், மகேசுவரர்களே! பாருங்கள்! சந்நியாசி வேடம் பூண்ட இந்தப் போக்கிரிப்பயல் என்னுடைய |
|