52 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 19 |
| கபால பாத்திரத்தைத் திருடிக்கொண்டதும் அல்லாமல் கூப்பாடுபோட்டு ஓலமிடுகிறான். நல்லது, நானும் ஓலமிடுகிறேன். ஐயகோ! பிராமணர்களுக்கு ஆபத்து, பிராமணர்களுக்கு ஆபத்து. |
(இக் கூப்பாட்டைக் கேட்டு ஒரு பாசுபதன் வருகிறான்.) பாசுபதன்: | ஓய்! சத்தியசோமரே! எதற்காகக் கூப்பாடு போடுகிறீர்? | காபாலி: | ஓ! பப்ருகல்பரே! பாரும். துறவி என்று சொல்லிக் கொள்ளும் இந்தப் போக்கிரிப்பயல், நாகசேனன், என்னுடைய கபாலபாத்திரத்தைத் திருடிக் கொண்டு கொடுக்க மாட்டேன் என்கிறான். | பாசுபதன்: | (தனக்குள்) நல்ல அழகி! புல்லைக்காட்டிப் பசுவைக் கொண்டுபோவதுபோல, இந்தச் சந்நியாசி--அம்பட்டத்தாசி மகன்--தன் இடுப்பில் செருகியுள்ள காசைக்காட்டி இவளை அடித்துக்கொண்டுபோகப் பார்க்கிறான். இருக்கட்டும். இவனுக்குச் சார்பாகப் பேசி, காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டுபோன கதைப்படி செய்கிறேன். (உரக்க) நல்லது நாகசேனரே! இவர் சொல்லுவது உண்மை தானா? | பௌ. பிக்கு: | ஐயா, தாங்கள் அதை நம்புகிறீரா? பிறர் பொருளை, அதற்குரியவர் கொடுத்தாலன்றி, எடுக்கக் கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. பொய்பேசக் கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. காம விழைவு கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. உயிரைக் கொல்லக் கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. குறித்த காலந்தவறி உணவு கொள்ளக் கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. தர்மம் சரணங் கச்சாமீ.18 | பாசுபதன்: | என்ன, சத்தியசோமரே! இது அவர்கள் சமயக் கட்டளை. இதற்கு நீர் என்ன சொல்லுகிறீர்? | காபாலி: | பொய்பேசக் கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. |
|