பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்115

  அன்புங் குடிமைப் பிறப்பும் அரசவாம்
பண்பும் அறிவும் பரவுநூ லுணர்வும்
தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும்
 175வாய்மையுஞ் சொல்லில் வழுவா வன்மையுந்
துணிவுங் காலமுங் களமுந் துணியுங்
குணமும் மந்திரத் தலைவர் துணைமையும்
உடையனே வினையாள் தூதனென் றோதினர்.
அன்ன தூதரை யனுப்பின் மன்னவ!
 180உன்ன தெண்ண முறுமே யுறுதி;
அன்றெனி லன்றே! அதனால்
வென்றிவை வேலாய் விடுவாய் தெரிந்தே.     10
ஜீவ: அத்திறம் முற்றும் ஒத்தவ னாய்நமக்
குரிமை பூண்டநின் அருமை மகன்பல
 185தேவனே யுள்ளான், மேவலர் பலர்பால்
முன்னம் பன்முறை தூதிலும் முயன்றுளான்,
அன்னவன் றன்னை அமைச்ச!
ஏவிடத் தயையா யிசைவாய் நீயே.     11
குடி: ஐய மதற்கென்? ஐய! என்னுடல்
 190ஆவியும் பொருளும் மேவிய சுற்றமும்
நினதே யன்றோ! உனதே வலுக்கியான்
இசையா தொழிவனோ! வசையறு புதல்வன்
பாலியன் மிகவும்; காரியம் பெரிது
ஜீவ: பெரிதென்? அங்கவன் பேசவேண் டியவெலாம்
 195விரிவா யெடுத்துநீ விளம்பி விடுக்கில்,
நலமா யுரைப்பன் நம்பல தேவன்.
வருத்தம் இவையெலாங் கருத்தி லுணராது
உரைத்தனர் முனிவர். உதிய னவைக்கே
யோசனை யின்றி நடேசனை யேவில்
  200நன்றாய் முடிப்பனிம் மன்றல்
என்றார். அவர்கருத் திருந்த வாறே!      12


அரசவாம் - அரசு + அவாம். அவாம் - அவாவும், விரும்பும், மேவலர் - பகைவர். ஏவிட - அனுப்ப. பாலியன் - இளைஞன். உதியன் - சேரன்.