| 118 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| | | ஆஞ்ச னேயனோ அறியேம்! | | நாரா: | | (தனதுள்) முழுப்பொய் | | | | வாஞ்சையாய் மன்னனிவ் வாயுரை முகமன் விடுப்பனோ விடமென? குடிப்பனே! | | சேவகன்: | | கொற்றவ! | | | 250 | நேற்று மாலையில் நின்றிரு வாணையிற் சென்றுழித் திருமுகம் நோக்கி யேதோ சிந்தனை செய்துதன் சித்த மகிழ்ச்சியால் தந்தன னெனக்கித் தரள மாலை. | | நாரா: | | (தனதுள்) எதுவோ பொல்லாங் கெண்ணினன் திண்ணம். | | ஜீவ: | 255 | பார்மின், பார்மின், நம்மிசை வைத்த ஆர்வமும் அன்பும். ஆ! ஆ! | | நாரா: | | (தனதுள்) யாதும் பேசா திருக்கி லேசுமே நம்மனம்; குறியாற் கூறுவம்; அறிகி லறிக. | | | (நாராயணன் செல்ல) | | 3-ம் பிரபு: | | சாட்சியு மோகண் காட்சியாம்! இதற்கும்! | | | 260 | அங்கைப் புண்ணுக் காடியும் வேண்டுமோ? எங்கு மில்லையே யிவன்போற் சுவாமி பத்தி பண்ணுநர். சுமித்திரை பயந்த புத்திரன், வீரவா கிவர்முதற் போற்றிய எத்திறத் தவரும் இறைவ! இவனுக் |
மலையாள அரசரிடம் பழகியவராகலின் இச் சொல்லை ஆள்கிறார். இவ்வாறே மலையாள நாட்டில் சிறப்பாக வழங்கும் சொற்கள் பல இந்நூலில் பயிலப்படுகின்றன. ஆஞ்சனேயன் - அனுமான். இராமனுக்கு ஆஞ்சனேயன் மெய்அடிமை பூண்டதுபோல, குடிலன் ஜீவக மன்னனுக்கு அடிமை பூண்டானோ என்பது கருத்து. திருமுகம் - கடிதம் தரள மாலை - முத்துமாலை, திண்ணம் - உறுதி. “அங்கைப் புண்ணுக்கு ஆடியும் வேண்டுமோ” - கைப் புண்ணுக்குக் கண்ணாடியும் வேண்டுமோ என்னும் பழமொழி. ஆடி - கண்ணாடி. சுவாமி பத்தி - எஜமானிடம் பக்தி. சுமித்திரை பயந்த புத்திரன் - சுமித்திரை பெற்ற பரதன். |