| 120 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| நாரா: | | எனைவகை தேறியக் கண்ணும், வினைவகை | | | 280 | கோடிய மாந்தர் கோடியின் மேலாம். | | ஜீவ: | | எதற்குந் திருக்குறள் இடத்தரும்! விடுவிடு. விரும்பி யெவருந் தின்னுங் கரும்பு கைப்பதுன் வாய்க்குற் றம்மே. 16(அரசனும் சேவகர்களும் போக) | | நாரா: | | (தனிமொழி) ஐயோ! இதற்கென் செய்வன்! அரசன், | | | 285 | உறுதியா நம்பினன்; சிறிதும் பிறழான். வெளுத்த தெல்லாம் பாலெனும் மெய்ம்மை யுளத்தான்! களங்கம் ஓரான். குடிலனோ | | | சூதே யுருவாத் தோற்றினன். அவன்றான் ஓதுவ உன்னுவ செய்குவ யாவுந் | | | 290 | தன்னயங் கருதி யன்றி மன்னனைச் சற்று மெண்ணான். முற்றுஞ் சாலமா நல்லவன் போலவே நடிப்பான், பொல்லா வஞ்சகன். மன்ன னருகுளோர் அதனை நெஞ்சிலும் நினையார்; நினையினும் உரையார். | | | 295 | இறைவன் குறிப்பிற் கிசைய அறைவர் வடித்து வடித்த மாற்றொலி போன்றே. தடுத்த மெய்ம்மை சாற்றுவர் யாரே? என்னே யரசர் தன்மை! மன்னுயிர்க் காக்கவும் அழிவும் அவர் தங் கடைக்கண் | | | 300 | நோக்கி லுண்டாம் வல்லமை நோற்றுப் பெற்றார்; பெற்றவப் பெருமையின் பாரம், உற்றுநோக் குவரேல் உடல்நடுங் காரோ? கருப்போ தேனோ என்றவர் களிப்பது நெருப்பா றும்மயிர்ப் பாலமும் அன்றோ? |
கோடிய - கோணிய, வளைந்த. 279-280 அடி, “எனை வகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான், வேறாகு மாந்தர் பலர்” என்னும் திருக்குறளை உணர்த்துகிறது. 286 அடி, ‘வெளுத்ததெல்லாம் பால், கருத்ததெல்லாம் தண்ணீர்’ என்பது பழமொழி. களங்கம் - குற்றம். ஓரான் - உணர மாட்டான். உன்னுவ - நினைப்பவை. அறைவர் - பேசுவர். மாற்றொலி - எதிரொலி. கருப்பு - கரும்பு. |