| 136 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| | 60 | வேம்பார் ஜீவக வேந்தன் விடுத்த தூதியான். என்பே ரோதில் அவ் வழுதியின் மந்திரச் சிகாமணி தந்திரத் தலைவன். பொருந்தலர் துணுக்குறு மருந்திறற் சூழ்ச்சியன், குடிலேந் திரன்மகன்... | | புரு: | | (தனதுள்) மடையன் | |
| | | வந்ததென்? | | பல: | 65 | அப்பெரு வழுதி யொப்பறு மாநகர் நெல்லையிற் கண்டு புல்லார் ஈட்டமும் அரவின தரசும் வெருவி ஞெரேலெனப் பிறவிப் பௌவத் தெல்லையும் வறிதாம் ஆணவத் தாழ்ச்சியும் நாண அகழ்வலந் | | | 70 | தொட்டஞ் ஞானத் தொடர்பினு முரமாய்க் கட்டிய மதிற்கணங் காக்க விடயத்து எட்டி யழுத்தி இழுக்கும் புலன்களின் யந்திரப் படைகள் எண்ணில இயற்றி... |
வேம்புஆர் - வேப்பமாலையை யணிந்த, பொருந்தலர் - பகைவர். துணுக்குறும் - அஞ்சும், நடுங்கும். திறல் - வலி, வெற்றி. கண்டு-அமைத்து. புல்லார் - பகைவர். ஈட்டம் - கூட்டம். அரவினது அரசு - பாம்பரசனாகிய ஆதிசேஷன். வெருவி - அஞ்சி. பிறவிப் பௌவம் - பிறப்பாகிய கடல். உயிர்களின் கணக்கற்ற பிறப்பு களுக்குக் கடல் உவமை. ஆணவத்து ஆழ்ச்சி - ஆணவமலத்தின் ஆழம். அகழ்வலம் - பல முள்ள அகழி. தொட்டு - தோண்டி. உரம் - பலம். மதிற்கணம் - மதில்களின் கூட்டத்தை. விடயம் - விஷயம், அதாவது ஐம்புலன்களின் விஷயம். எட்டி - போய்ப் பிடித்து. புலன்களின் - ஐம்புலன்களைப்போல. யந்திரப் படை - இயந்திரப் பொறி முதலிய போர்க் கருவிகள். 65 முதல் 72 வரிகளில் கோட்டைக்கும் மனித உடம்பிற்கும் உவமை கூறப்படுகிறது. கோட்டையைச் சூழ்ந்துள்ள அகழி பிறவிக்கடல் போல அகலமும், உயிர்களின் ஆணவமலம் போன்று ஆழமும் உடையது; கோட்டைமதில்கள் உயிர்களின் அஞ்ஞானம் போன்று பலமுடையன ; மதில்சுவர்களின் மேல் வைக்கப்பட்டுள்ள போர்க் கருவிகள் ஐம்புலன்களைப் போல் அஞ்சத்தக்கன என்ற சைவ சித்தாந்த தத்துவங்கள் பொருத்திக் கூறப்படுகின்றன. |