பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்135

 45போரெவ ருடனே யாயினும் புரியிலவ்
ஆரவா ரத்தில் அயர்ப்போ மன்றி...
  

(சேவகன் வர)

சேவகன்: எழுதரு மேனி இறைவ! நின் வாயிலில்
வழுதியின் தூதுவன் வந்துகாக் கின்றான்
புரு: யாரவன்?
சேவ: பேர்பல தேவனென் றறைந்தான்
புரு:  (தனதுள்)
 50 சோரன்!
  (சேவகனை நோக்கி) வரச்சொல்.
  (தனதுள்) தூதேன்? எதற்கிக்
கயவனைக் கைதவன் அனுப்பினான்?
நயந்தீ துணர்ந்து நட்டிலன் போன்மே.     1
  

(பலதேவன் வர)

பலதேவன்: மங்கலம், மங்கலம்! மலய மன்னவ!
பொங்கலைப் புணரிசூழ் புவிபுகழ் சுமக்கத்
 55தன்தோள் தாரணி தாங்க எங்கும்
ஒன்னார் தலையோடு திகிரி யுருட்டிக்
குடங்கை யணையிற் குறும்பர் தூங்க
இடம்பார்த் தொதுங்குந் தடமுற் றத்து
மேம்படு திருநெல் வேலிவீற் றிருக்கும்


போர் -சண்டை. வழுதி - பாண்டியன். கயவன் - கீழ்மகன். கைதவன் - பாண்டியன். போன்ம் -போலும். மலைய மன்னவ - மலைய மலைக்கு அரசனே. மலயமலை பாண்டியனுக்கு உரியது. ஆனால், தூதுவன் சேரனை மலையமலைக் குரியவனாகக் கூறுகிறான்.

புணரி - கடல். புவி புகழ் சுமக்க - உலகம் பாண்டியனுடைய புகழைச் சுமக்க. தன்தோள் - பாண்டியனுடைய தோள். தாரணி தாங்க- பூமியைத் தாங்க; அதாவது அரசாட்சி செய்ய. ஒன்னார் - பகைவர். திகிரி - ஆணையாகிய சக்கரம். குடங்கை - உள்ளங்கை. குறும்பர் - குறுநில மன்னர், சிற்றரசர். தடமுற்றம் - பெரிய முற்றம்.