| பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 283 |
| | | விட்டிடிக் கோட்டையாம் வெளிக்கட லோட்டம் மண்டிய பெருங்காற் றடங்கும் வரையும் அண்டையில் உளதோர் கைவழி அதனில் | | | 50 | ஒண்டிநீ ஒதுங்கி உன்தொல் நகராம் துவாத சாந்தத் துறைபோய் நிவாதமா நிலைபெற லேநெறி முறையே! 1 | | ஜீவ: | | என்குல முனிவ! இயம்பிய மாற்றம் நன்கே. உன்றன் நயப்பிற் கென்செய! | | | 55 | கழுமரக் கதையதைக் கண்டேன் இன்றே. பழுதுபாய் மரமெனப் பகர்ந்ததும் உண்மை! வழுவெனக் கண்டது மாற்றினன். அநேக வந்தனம் வந்தனம்! ஆயினும் ஒருசொல் சிந்தையிற் சேர்த்தெனைத் தெருட்டிட வேண்டும். | | | 60 | வேற்றுமை உருவாய் விளங்கிய காலம் காற்றினும் கடுகிய கடுநடை உடைய தன்றோ? அதிலகப் பட்டார் முந்திச் சென்றால் நின்றார்! சிறிதுசிந் தித்து நிற்பரேற் பெரிதும் பிற்பட் டொழிவர். | | | 65 | ஆதலால் அடிகாள் பூதலத் துயர்ந்த மேதையின் மிகுத்த மானிடர்க் கரசராய் வந்தவர், தந்தமக் குற்ற மதித்திறம் எட்டிய மட்டும் குற்றம் விடுத்துக் |
துவாதசாந்தம் - பன்னிரண்டின் முடிவு. புருவத்துக்குமேலே பன்னிரண்டு விரற் கிடையுள்ள இடம். இங்குத் துவாதசாந்தம் என்பதற்கு மதுரை மாநகரம் என்பது பொருள். பூலோக வடிவமாக இருக்கிற விராட் புருஷனுக்குத் துவாதசாந்த இடமாக இருக்கிற இடம் மதுரை என்று கூறுவர். நிவாதமா - உறைவிடமாக என்றும், (புயற்) காற்று இல்லாத இடமாக என்றும் இரு பொருள் கொள்ளலாம். நயப்பிற்கு - அன்பிற்கு அடி 55 - 56. முனிவர் பொதுவாகக் கூறிய கழுமர உவமையை, நாராயணன் கழுமரமேற உடன்பட்டதைச் சுட்டுகிறதாகவும், குடிலனைச் சுட்டிக் கூறிய பாய்மரம் நாராயணனைக் குறித்துக் கூறியதாகவும் அரசன் மயங்கிக் கூறும் சொற்கள். தெருட்டிட - தெளிவுபடுத்த. வேற்றுமை உருவாய் - மாறுபாடு உடையதாய். |