| 282 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| | | சிறுபசி தாங்காச் சிறுமையர் பற்பலர்; | | | 20 | அறவழி இதுவென அறியாக் கயவர்; பிறர்பொருள் வௌவியும் பிறவுயிர் கவர்ந்தும் அலையும் தீமையர் அநேகர், அகப்படின் மலைவற மரணமும் வெருவார் மான. கலக்கமொன் றின்றிக் கழுவே றிடுதல் | | | 25 | புலப்படக் கண்டுளாய் இலக்கமின் முறையே. துரத்திடும் துயர்க்கணம் வருத்திடும் காலை மரித்தலோ அவையெலாம் சகித்தலோ தகுதி? தன்னுயிர் ஈவர் தக்கோர் சார்ந்த மன்னுயிர் காத்திடு மார்க்கமற் றஃதேல். | | | 30 | வார்கடல் முகட்டில், மாநிதி வழிஞர் ஆர்கலன், அலையெறி புயல்கால் ஆதியாற் சேர்திசை திரிந்து தியங்குமேல், மீகான் களமும் காலமும் கருதித் தனக்குறு தளர்வுபா ராட்டுதல் தவிர்த்து, சாய்ந்து,மற் | | | 35 | றெதிருறு காற்றிற் கிசைவுற வதிந்து, தன்றிசை செல்லத் தக்ககால் வரும்வரை சென்றொரு கரைசேர்ந் தொன்றுவ னல்லால், உவப்புறு நிதிகெட உழையுளார் களும்பரி தவித்திட மரக்கலம் துறப்பனோ சாற்றாய். | | | 40 | தக்கோர் செயலெலாம் தமக்கா அலவே! முக்கியம் புகழோ தக்கவுன் கடமையோ? அதனால் ஜீவக! அகற்றந் நினைப்பு. மதிகுலம் வந்த மதிவலோர் பலரும் செலாவழி நின்திமில் செலுத்தினை; தீங்காய் | | | 45 | உலாவிய சுழல்காற் றோடொரு சுழியிடைப் பட்டனை; நம்பிய பாய்மரம் பழுது. |
கயவர் - இழிந்த குணமுள்ளவர். மான - போல, ஒப்ப. இலக்கமில் -கணக்கற்ற. துயர்க்கணம் -துன்பமாகிய கூட்டம். (கணம் - கூட்டம்.) வார்கடல் முகட்டில் - பரந்த கடகலங்குமானால். மீகான் - மிகாமன், கப்பலோட்டி. கால் - காற்று. திமில் - மரக்கலம், படகு. சுழல்காற்று -(இங்கு) பகைவர். சுழி - ஆபத்து. பாய்மரம் -அமைச்சனாகிய குடிலன். |