| 288 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| சுந்தர: | | காட்டுதும் இன்றிரா கற்படை சேர்முறை. ஒருவர் ஒருபொருள் அறியில் இரகசியம்; இருவர் அறிந்திடிற் பரசியம் என்ப. கைக்கெட் டியதுதன் வாய்க்கெட் டுதற்குள் | | | 175 | வந்துறும் அந்தமில் பிரதிபந் தங்களே. | | | | (முனிவர் போக) | | ஜீவ: | | வந்தனம். வந்தனம். அடிகாள்! வந்தனம். (தனிமொழி) | | | | என்னே! என்னே! இந்நாள் இயன்றவை! கொன்னே கழிந்தன் றோரிமைக் கொட்டும். குகுநாள் மழையொடு மிகுகாற் றெறிந்த | | | 180 | பரவையின் பாடெலாம் பட்டதென் உளமே. இரவினில் வருபவை எவையெலாம் கொல்லோ? தாயே! தாயே! சார்வன சற்றும் ஆயேன், எங்ஙனம் பிரிந்துயிர் ஆற்றுவேன்? விடுக்குமா றெவனென் விளக்கே? உன்னைக் | | | 185 | கெடுக்குமா றெவனிக் கிளர்போ ரிடை? அது தடுக்குமா றெவனினி? சமழ்ப்பற் றுடலம் பொறுக்குமா றெவன்? இப் பொல்லா வல்லுயிர் துறக்குமா றெவனுனைத் துணையற விடுத்தே? அந்தோ! அந்தோ! என்றன் தலைவிதி! | | | 190 | நாற்புற நெருப்புறின் நளியும் தனது வாற்புற நஞ்சால் மாய்ந்திடும் என்ப. நரனலன்; நரேந்திரன்; நானது போற்சுதந் தரனலன் எனிலென் தலைவிதி கொடிதே! பிரிவென என்னுளம் கருதிடு முனமே |
172 - 173 அடி, ‘ஒருவர் அறியில் இரகசியம், இருவர் அறிந்தால் பரசியம்’ என்பது மலையாள நாட்டுப் பழமொழி. 174 - 175 அடிகள், ‘There is many a slip between the cup and the lip’ என்னும் ஆங்கிலப் பழமொழியைக் கூறுகின்றன. பிரதிபந்தங்கள் - தடைகள். குகுநாள் - அமாவாசை நாள், உவா நாள். பரவை - கடல். எவன் - எவ்விதம். சமழ்ப்பு - குற்றம், நாணம். நளி - தேள். |