ஜீவ: | | குலந்தேர் வதுநற் குணந்தேர் வதுவே. பெயரால் என்னை? பேயனிவ் வஞ்சியான் பெயரால் அரசன்! செயலாற் புலையன்! |
2-ம் படை | | செய! செய! சரிசரி! தெளிந்தோம்! தெளிந்தோம்! |
நாரா: | | மனிதரால் ஆவதொன் றில்லை. மன்னவா! இனியெலாம் ஈசன திச்சை. |
சக: | | சரி! சரி! |
யாவ: | | சம்மதம்! சம்மதம்! சர்வசம் மதமே! |
ஜீவ: | | வாராய்! நாரணா! ஆனால் அப்புறம் |
| 160 | சென்றுநம் மனோன்மணிச் செல்வியை யழைத்து மன்றல் திரைப்பின் வரச்செய். |
| | (நாராயணன் போக)
யார்க்கும் |
| | சம்மதம் எனிலிச் சடங்கினை முடிப்போம். வம்மின்! இனியிது மங்கல மணவறை. கவலை அகற்றுமின் கட்டுடன்! பனிநீர்த் |
| 165 | திவலை சிதறுமின்! சிரிமின்! களிமின்! இன்றுநாம் வென்றோம் என்றே எண்ணுமின்! இனிநாம் வெல்லற் கென்தடை? தினமணி வருமுன் ஏகுவம் அரைநா ழிகைத்தொழில்! ஆற்றுவம் அரும்போர் கூற்றுமே அஞ்ச. |
| 170 | நாளைநல் வேளை: நம்மணி பிறந்தநாள். பாரீர்! பதினா றாண்டுமிந் நாளில் ஓரோர் மங்கல விசேடம்! |
சக: | | ஓ! ஓ! சரி! சரி! ஒவ்வொரு வருடமும் அதிசயம்! |
| | (நாராயணன் திரும்பிவர. மனோன்மணி, வாணி முதலிய தோழியருடன் திரைப்பின் வந்து நிற்க) |
தினமணி - சூரியன். நம்மணி - மனோன்மணி.