| | செவ்விதின் எனைவிட நீவிரே தெரிவீர். |
| 130 | இக்குலம் அவர்க்கு மிக்கதோர் கடன்பா டுடையதென் றொருவரும் அயிர்ப்புறார். அதனால் தடையற அக்கடன் தவிர்க்கவும் நம்முளம் கலக்கிடும் அபாயம் விலக்கவும் ஒருமணம் எண்ணினேன். பண்ணுவேன் இசைவேல் நுமக்கும். |
| 135 | மணவினை முடிந்த மறுகணம் மணந்தோர் இருவரும் இவ்விடம் விடுத்துநம் முனிவரர் தாபதம் சென்று தங்குவர். இத்தகை ஆபதம் கருதியே அருட்கடல் அடிகள் தாமே வருந்திச் சமைத்துளார் அவ்விடம் |
| 140 | போமா றொருசிறு புரையறு சுருங்கை. அவ்வுழி இருவரும் அடைந்தபின், நம்மைக் கவ்விய கௌவையும் கவலையும் விடுதலால், வஞ்சியன் ஒருவனோ, எஞ்சலில் உலகெலாம் சேரினும் நம்முன் தீச்செறி பஞ்சே. |
| 145 | இதுவே என்னுளம். இதுவே நமது மதிகுலம் பிழைக்கும் மார்க்கமென் றடிகளும் அருளினர் ஆஞ்ஞை. ஆயினும் நுமது தெருளுறு சூழ்ச்சியும் தெரிந்திட விருப்பே. 1 |
| | (நேரிசை ஆசிரியப்பா) |
| | உரையீர் சகடரே உமதபிப் பிராயம். |
சகடன்: | 150 | அரசர் குலமன்று. ஆயினென்? சரி சரி! |
நாரா: | | (தனதுள்) |
| | மருகன் தப்பிய வருத்தம் போலும். |
அயிர்ப்புறார் - சந்தேகப்படமாட்டார். தாபதம் - தவம் செய்யுமிடம். ஆபதம் - ஆபத்து. புரையறு -குற்றம் இல்லாத. கவ்விய - பற்றிய. கௌவை - துன்பம். ஆஞ்ஞை - கட்டளை. தெருள்உறு - தெளிவுள்ள. சூழ்ச்சி - யோசனை.