பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்329

2-ம் படை:  குடிலனை அறியுமே குவலயம் அனைத்தும்.
ஜீவ: அறிந்திடில் இறும்பூ தணையார் யாவர்?
மதியுளார் யாரவன் மதியதி சயித்திடார்?
நெஞ்சுளார் யாரவன் வன்திறற் கஞ்சார்?
 105யார்வையார் அவனிடத் தாரா ஆர்வம்?
உண்மைக் குறைவிடம்; திண்மைக் கணிகலம்.
சத்திய வித்து: பத்தியுன் மத்தன்.
ஆள்வினை தனக்காள்; கேள்விதன் கேள்வன்.
ஏன்மிக? நமர்காள்? இந்நடு நிசியிலும்
 110யானறி யாதுழைக் கின்றனன் எனக்கா.
நன்றே இங்கவன் இலாமையும் : அன்றேல்
தற்புகழ் கேட்க அற்பமும் இசையான்.
புரு: (தனதுள்)
  எத்தனை களங்கமில் சுத்தன்! கட்டம்!
ஜீவ: பற்பல பாக்கியம் படைத்துளர் பண்டுளோர்.
 115ஒப்பரும் அமைச்சனை இப்படி ஒருவரும்
முன்னுளோர் பெற்றிலர்; பின்னுளார் பெறுவதும்
ஐயமென் றுரைப்பேன். அன்னவன் புதல்வன்
மெய்ம்மையும், வாரமும் வீரவா சாரமும்,
பத்திசேர் புத்தியும், யுத்திசேர் ஊக்கமும்
 120உடையனாய் அடையவும் தற்பிர திமைபோல்,
இனியொரு தலைமுறை தனிசே வகஞ்செய
இங்குவீற் றிருந்திலன் ஆயின், எமர்காள்!
எங்குநீர் கண்டுளீர் இச்சிறு வயதிற்
பலதே வனைப்போற் பலிதமாம் சிறுதரு?
2-ம் படை: 125இலையிலை எங்கும்! இவர்போல் யாவர்!
ஜீவ: எனதர சுரிமையும் எனதர சியல்பும்
தமதார் உயிர்போல் தாம்நினைத் திதுவரை
எவ்வள வுழைத்துளார் இவ்விரு வருமெனச்


வன்திறல் - மிகுந்த வல்லமை. திண்மை - பலம், வலி ஆள்வினை - முயற்சி. வாரம் - அன்பு. அடையவும் - முழுவதும். பலிதம் - பலன் தருவது.