328 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
ஜீவ: | 70 | என்குலம் காக்க எனவருள் பழுத்துக் கங்கணம் கட்டிய கருணா நிதிகாள்! மனத்திறந் தாழ்ந்த மதிமந் திரிகாள்! எனக்கென உயிர்வாழ் என்படை வீரர்காள்! ஒருமொழி கூறிட அனுமதி தருமின். | | 75 | ஆடையின் சிறப்பெலாம் அணிவோர் சிறப்பே; பாடையின் சிறப்பெலாம் பயில்வோர் சிறப்பே; எள்ளரும் மதிகுலச் சிறப்பெலாம், எமர்காள்! கள்ளமில் நும்முனோர் காப்பின் சிறப்பே. ஆதலில் உமக்குப சாரம்யான் ஓதுதல். | | 80 | மெய்க்குயிர் கைக்குநா விளம்புதல் மானும். ஈண்டுகாத் திடுவல்யான் எனக்கடன் பூண்டதும் மதிகுல மருந்தாய் வாய்த்தஎன் சிறுமி விதைபடும் ஆலென விளங்கினள். அவளைக் காத்திடும் உபாயம் கண்டிட இச்சபை | | 85 | சேர்த்தனன் என்பது தெரிவீர் நீவீர். இன்றுநாம் பட்டதோர் இழுக்கிவ் வைகறை பொன்றியோ வென்றோ போக்குவம் திண்ணம். ஒருகுலத் தொருவன் ஒருமரத் தோரிலை. அப்படி அன்றுநம் கற்பகச் சிறுகனி! | | 90 | தப்பிடின் மதிகுலப் பெயரே தவறும். அரியவிச் சந்தியைப் பெரிதும் கருதுமின். இருந்திடச் சிறியள்: அபாயம்! தனியே பிரிந்திடப் பெரியள்: பிழை!அஃ தன்றியும் குலமுடி வெண்ணிக் குலையுநம் உளத்திற் | | 95 | கிலையத னாலோர் இயல்சமா தானம். ஆதலில் அரியதற் காலத் தியல்பை யாதென நீவிர் ஆய்ந்தியான் இப்போ தோதிடும் உபாயத் தாலுறு நன்மையும் தீமையும் நன்றாய்த் தெரிந்து செப்புமின்! | | 100 | குடிலனை அறியார் யாரிக் கொற்றவை? |
மனத்திறம் - மனவலிமை. எள்ளரும் - இகழ்தல் இல்லாத, குற்றமற்ற, மானும் - ஒக்கும், ஆல் - ஆலமரம். பொன்றியோ - உயிர் விட்டோ. சந்தி - காலம், நிலைமை. கொற்றவை - அரசசபை. |