ஜீவ: | 50 | இருமிரும் நீரும். எங்கே கினும்நம் காரிய மேயவர் கருத்தெப் பொழுதும். |
| | (நாராயணனை நோக்கி) |
| | பாரீர் அவர்படும் பாடு. |
நாரா: | | பார்ப்பேன்! சத்தியம் சயிக்குமேற் சாற்றிய படியே! |
ஜீவ: | | இத்தகை உழைப்போர் எப்புவ னமுமிலை. |
| 55 | எண்ணிநிச் சயித்த இத்தொழில் இனியாம் பண்ணற் கென்தடை? சுவாமி! அடிகள் தந்தநன் முகூர்த்தம் வந்ததோ? |
சுந்: | | வந்தது. |
| | (புருடோத்தமனும், குடிலனும் அருள்வரதன் முதலிய |
| | மெய்காப்பாளருடன் கற்படை வழி வர) |
புரு: | | (கற்படையில் அருள்வரதனை நோக்கி) |
| | நின்மின்! நின்மின்! பாதகன் பத்திரம்! என்பின் இருவர் வருக. |
| | (தனதுள்) |
| | இதுவென்? |
| 60 | இந்நிசி எத்தனை விளக்கு! ஏதோ! மன்னவை போலும்! மந்திரா லோசனை! இவர்சுந் தரரே! அவர்நட ராஜர்! இவர்களிங் குளரோ! எய்திய தெவ்வழி? இத்திரை எதற்கோ? அத்திரை எதற்கோ? |
| 65 | இத்தனை கோலா கலமென் சபைக்கு? மாலையும் கோலமும் காணின் மணவறை போலாம். அறிந்தினிப் போவதே நன்மை. மந்திரம் ஆயின் மற்றதும் அறிவோம். இந்தநல் திரைநமக் கெத்தனை உதவி!(திரைக்குப் பின் மறைந்து நிற்க) |
மந்திராலோசனை - இரகசிய ஆலோசனை.