பக்கம் எண் :

326மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

3-ம் படை: இப்போ தன்றது; நகரா ரம்பம்
எப்போது அப்போ தேவரும் துயரம்
 35கருதிமுன் செய்தனன்.
முதற்படை: ஒருவரும் அறிந்திலம்!
   (முருகன் வா)
3-ம் படை: யாரது, முருகனோ? நாரணன் எங்கே?
முருகன்: நாரணன் அப்புறம் போயினான்; வருவன்.
3-ம் படை: பிழைத்தீர் இம்முறை.
முரு: பிழைத்திலம் என்றும்!
3-ம் படை: அத்திரைச் செய்தி அறிவாய். வைத்ததார்?
முரு: 40வைத்தது ஆராயினென்? வெந்தது வீடு!
  (இருவரும் நகைக்க)
2-ம் படை வாயினை மூடுமின். வந்தனன் மணமகன்.
முரு: ஈயோ வாயில் ஏறிட நாயே!
முதற்படை அரசனும் முனிவரும் அதோவரு கின்றர்!
  (ஜீவகன், சுந்தரமுனிவர், கருணாகரர், நிஷ்டாபரர்,
பலதேவன், நடராசன், நாராயணன் முதலியோர் வர)
ஜீவ: இருமின் இருமின்! நமர்காள் யாரும்!
  (ஜீவகன், முனிவர் முதலியோர் தத்தம் இடத்திருக்க)
 45கொலுவோ கொல்லிது! மணவறை! இருமின்.
பலதேவ ரேநும் பிதாவிது காறும்
வந்திலர் என்னை?
பலதே: மன்னவர் மன்ன!
   அந்தியிற் கண்டேன் அடியேன். அதன்பின்
ஒருவரும் கண்டிலர். தனிபோ யினராம்.


பிழைத்தீர் - உய்ந்தீர். பிழைத்திலம் - தவறு செய்தோமில்லை. வெந்தது வீடு - குடி கெட்டது. நமர்காள் - நம்மவர்களே.