1-ம் ந : | 120 | ஆம்! ஆம்! அவன்முகம் ஏமா றினதே. விரசமா யரசனும் வியர்த்தனன் கண்டேன். |
2-ம் ந: | | முனிவரங் கோதிய தென்னை? முற்றும் துனிபடு நெருக்கிற் கேட்டிலன். |
3-ம் ந: | | யாதோ - ‘மனோன்மணி’எனப்பெயர் வழங்கினர். அறிவைகொல்? |
4-ம் ந: | 125 | வாழ்த்தினர் போலும், மற்றென்? பாழ்த்தஇத் |
2-ம் ந: | | |
| | தந்தையிற் பரிவுளர் மனோன்மணி தன்மேல் |
3-ம் ந: | | ஐயமற் றதற்கென்? யார்பரி வுறார்கள்? வையகத் தவள்போல் மங்கைய ருளரோ? அன்பே யுயிரா அழகே யாக்கையா |
| 130 | மன்பே ருலகுசெய் மாதவம் அதனான் மலைமகள் கருணையுங் கலைமக ளுணர்வுங் கமலையி னெழிலும் அமையவோ ருருவாய்ப் பாண்டியன் தொல்குல மாகிய பாற்கடல் கீண்டெழு மதியென ஈண்டவ தரித்த |
| 135 | மனோன்மணி யன்னையை வாழ்த்தார் யாரே? |
2-ம் ந: | | அன்றியும் முனிகட் கவள்மேல் வாஞ்சை இன்றுமற் றன்றே, இமையவர்க் காக முன்னொரு வெள்வி முயன்றுழி வன்னி தவசிகள் தனித்தனி யவிசு சொரிந்துந் |
| 140 | தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து மன்னனுங் குடிலனுந் துன்னிய யாவரும் வெய்துயிர்த் திருக்க, விளையாட்டாக மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி நெய்பெய் போழ்தில் நெடுஞ்சுழி சுழித்து |
விரசமாய் - சுவையில்லாமல்; விருப்பமில்லாமல். துனி - வெறுப்பு. கீண்டு - கிழித்து, துன்னிய - நெருங்கியிருந்த, அவிசு - ஓமத்தீயில் சொரியும் நெய்.