பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 61 |
| 145 | மங்கிய அங்கி வலமாய்ப் பொங்கிப் புங்கவர் மகிழ்ச்சியைப் பொறித்தது முதலா முனிவர் யாவரும் மணியென மொழியில் தங்கள் தலைமிசைக் கொள்வர் தரணியில் எங்குள தவட்கொப் பியம்புதற் கென்றே. | 4-ம் ந: | 150 | ஒக்கும்! ஒக்கும்! இக்குங் கைக்கு மென்னும் இன்மொழிக் கன்னிக் கெங்கே ஒப்புள துரைக்க! ஓ! ஓ! முனிவர் அவ்வழி யேகுநர் போலும். இவ்வழி வம்மின் காண்குதும் இனிதே. | | | (நகரவாசிகள் போக) | முதல் அங்கம் : முதற் களம் முற்றிற்று |
புங்கவர் - உயர்ந்தவர். இக்கு - இக்ஷு; கரும்பு. |