பக்கம் எண் :

62மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

இரண்டாம் களம்

இடம் : கன்னிமாடம்

காலம் : எற்பாடு

(மனோன்மணியும் வாணியும் கழல் விளையாடி இருக்க)

(ஆசிரியத் தாழிசை)

மனோன்மணி:(தோழியுடன் கழல் விளையாடிப் பாட)

  துணையறு மகளிர்மேற் சுடுகணை தூர்ப்பவன்
 அணைகில னரன்முன்னென் றாடாய் கழல்
 அணைந்துநீ றானானென் றாடாய் கழல்.     1
வாணி: நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண்
 ஆறா வடுவேயென் றாடாய் கழல்
 அழலாடுந் தேவர்க்கென் றாடாய் கழல்.     2

எற்பாடு = எல் + படுதல்; சூரியன் மறையும் நேரம்.

கணை - அம்பு. சுடுகணை - காமமாகிய அம்பு. சுடுகணை தூர்ப்பவன் - காமன்; மன்மதன். அரன் முன்- சிவ பெருமானுக்கு முன்னர். கழல்- கழல் விளையாட்டு; கழற்காய் கொண்டு மகளிர் விளையாடுவது. அணைந்து-சேர்ந்து, நீறு ஆனான்- சாம்ப லானான். (மன்மதனைச் சிவபெருமான் எரித்ததைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.)

என்னை - என்ன. வடு - தழும்பு. அழலாடுந் தேவர் - சிவபெருமான். ஏழையர் - பெண்கள். கடு - நஞ்சு. கடுவுண்ட கண்டர் - நீலகண்டர்; சிவபெருமான். (நஞ்சுண்ட வரலாற்றைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.)