பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்63

மனோ:   இருளில் தனித்துறை யேழையர் தங்கள் மேற்
பொருதலோ வீரமென் றாடாய் கழல்
போயெரிந் தான்பண்டென் றாடாய் கழல்.     3
வா:   எரிந்தன னாயிலென் என்றென்றுந் தம்முடல்
கரிந்தது பதியென் றாடாய் கழல்
கடுவுண்ட கண்டர்க்கென் றாடாய் கழல்.     4
மனோ:   தெருவில் பலிகொண்டு திரிதரும் அம்பலத்
தொருவர்க் குடைந்தானென் றாடாய் கழல்
உருவங் கரந்தானென் றாடாய் கழல்.     5
வா:   உருவங் கரந்தாலென் ஓர்மல ரம்பினால்
அரையுரு வானாரென் றாடாய் கழல்
அந்நட ராஜரென் றாடாய் கழல்.     6

(பெருமூச்செறிய)

(நேரிசை ஆசிரியப்பா)

மனோ:   (சிரித்து)

ஏதடி வாணி! ஓதிய பாட்டில்
ஒருபெய ரொளித்தனை பெருமூச் செறிந்து?
நன்று! நன்று! நின் நாணம்.
மன்றலு மானது போலும்வார் குழலே!      1

வா: 5 ஏதம் மாநீ சூது நினைத்தனை?
ஒருபொரு ளும்யான் கருதினே னல்லேன்.
இச்சகத் தெவரே பாடினும்,
உச்சத் தொனியில் உயிர்ப்பெழல் இயல்பே.     2

பலி கொண்டு - பிச்சை ஏற்று. அம்பலத்தொருவர் -திருச்சிற்றம் பலத்தில் எழுந்தருளிய சிவபெருமான். உடைந்தான்- தோற்றான். கரந்தான் - மறைந்தான். நடராஜர் - வாணியின் காதலன் பெயர். மன்றல் - திருமணம். வார்குழல் - நீண்ட கூந்தலையுடையவள். இச்சகம் - இந்த உலகம். உயிர்ப்பு - மூச்சு.