மனோ: | | மறையேல்! மறையேல்! பிறைபழி நுதலாய்! |
| 10 | திங்கள் கண்டு பொங்கிய கடலெனச் செம்புனல் பரக்கச் செந்தா மரைபோற் சிவந்தவுன் கபோல நுவன்று, நின்மனக் களவெலாம் வெளியாக் கக்கிய பின்னர் ஏதுநீ யொளிக்குதல்? இயம்பாய் |
| 15 | காதலன் நேற்றுனக் கோதிய தெனக்கே. 3 |
வா: | | ஐயோ கொடுமை! அம்ம! அதிசயம்! எருதீன் றெனுமுனம் என்னகன் றென்று திரிபவ ரொப்பநீ செப்பினை! நான் கண் டேநாள் நாலைந் தாமே. 4 |
மனோ: | 20 | ஏதடி! நுமது காதல் கழிந்ததோ? காணா தொருபோ திரேமெனுங் கட்டுரை வீணா யினதோ? பிழைத்தவர் யாவர்? காதள வோடிய கண்ணாய்! ஓதுவாய் என்பா லுரைக்கற் பாற்றே. 5 |
வா: | 25 | எதனையான் இயம்புகோ! என்றலை விதியே. (கண்ணீர் சிந்தி) வா; விளை யாடுவோம் வாராய். யார்முறை யாடுதல்? வார்குழற் றிருவே! 6 |
மனோ: | | ஏனிது! ஏனிது வாணீ! எட்பூ ஏசிய நாசியாய்! இயம்புக. |
| 30 | மனத்திடை யடக்கலை! வழங்குதி வகுத்தே. 7 |
கபோலம் - கன்னம். நுவன்று - சொல்லி; வெளிப்படுத்தி. இயம்பு - b சால்லு. ‘எருது ஈன்றது என்றால் என்ன கன்று. என்பதுபோல’ என்பது பழமொழி. ‘ எருது ஈன்றது என்றால் தொழுவத்திலே கட்டு’ என்றும் கூறுவர். ‘காள பெற்றென்னு கேட்டு கயறெடுத்து’ என்பது மலையாளப் பழமொழி.
பிழைத்தவர் - பிழை செய்தவர். எட்பூ - எள்ளின் பூவை. ஏசிய - இழித்துக் கூறிய. நாசி - மூக்கு. எள்ளின் பூவை மகளிரின் மூக்குக்கு உவமை கூறுவது மரபு.