பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்67

வா: ஈதெலாம் உனக்குயார் ஓதுதற் கறிவர்!
 மாதர்க் குரியதிக் காதல்,
  85 என்பதொன் றறியும் மன்பதை யுலகே..     16
மனோ: மின்புரை யிடையாய்! என்கருத் துண்மையில்
 வனத்தி லெய்தி வற்கலை புனைந்து
 மனத்தை யடக்கி மாதவஞ் செயற்கே.
 சுந்தர முனிவன் சிந்துர அடியும்,
  90வாரிசம் போல மலர்ந்த வதனமும்,
 கருணை யலையெறிந் தொழுகுங் கண்ணும்,
 பரிவுடன் முகிழ்க்கு முறுவலும், பால்போல்
 நரைதரு தலையும், புரையறும் உரையும்,
 சாந்தமுந் தயையும் தங்கிய உடலும்,
  95மாந்தளிர் வாட்டு மேனி வாணி!
 எண்ணுந் தோறுங் குதித்து
 நண்ணும் என்னுளம் மன்னிய தவத்தே.     17
வா: சின்னாட் செலுமுனந் தேர்குவன் நீசொல்
 கட்டுரைத் திண்ணம். மட்டள வின்றிக்
 100காதல் கதுவுங் காலை
 ஓதுவை நீயே யுறுமதன் சுவையே.     18
மனோ: வேண்டுமேற் காண்டி. அவையெலாம் வீண், வீண்.
 காதலென் பதுவென்? பூதமோ? பேயோ?
 வெருட்டினால் நாய்போ லோடிடும்; வெருவில்
 105துரத்தும் குரைக்கும் தொடரும் வெகுதொலை.
 அடிக்கடி முனிவரிங் கணுகுவர். அஃதோ
 அடுத்தஅவ் வறையில் யாதோ சக்கரம்
 இருத்திடத் திறவுகோல் வாங்கினர். கண்டனை!
 படர்சுழி யோடு பாய்திரை காட்டும்


மின்புரை இடை - மின்னல் மகளிர் இடைக்கு உவமை. வற்கலை - மரவுரியாடை. சிந்துர அடி - சிவந்த பாதம். வாரிசம் - தாமரை. வதனம் - முகம். கருணை அலை - கருணையாகிய அலை. பரிவு - அன்பு. முகிழ்க்கும் - அரும்பும். புரையறும் - குற்றமற்ற. மாந்தளிர் வாட்டு மேனி - மாந்தளிர் மகளிரின் நிறத்திற்கு உவமை. கதுவு - கௌவு ; பற்று. வெருவில் - அஞ்சினால். இருத்திட - வைக்க.