பக்கம் எண் :

66மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

 55 பேய்கொண் டனையோ? பித்தே றினையோ
 நீயென் நினைத்தனை? நிகரில் குடிலன்
 தன் மக னாகிச் சாலவும் வலியனாய்
 மன்னனுக் கினியனாய் மன்பல தேவனும்
 உன்னுளங் கவர்ந்த ஒருவனும் ஒப்போ?
 60 பேய்கொண் டனையோ? பேதாய்!
 வேய்கொள் தோளி விளம்பா யெனக்கே.     11
வா: அறியா யொன்றும், அம்ம! அரிவையர்
 நிறையழி காதல் நேருந் தன்மை
 ஒன்றுங் கருதி யன்றவ ருள்ளஞ்
 65 சென்று பாய்ந்து சேருதல். திரியுங்
 காற்றும் பெட்புங் காரணம் இன்மையில்
 ஆற்றவும் ஒக்குமென் றறைவர்.
 மாற்றமென்? நீயே மதிமனோன் மணியே!      12
மனோ: புதுமைநீ புகன்றது. பூவைமார் காதல்
 70 இதுவே யாமெனில் இகழ்தற் பாற்றே!
 காதல் கொள்ளுதற் கேதுவும் இலையாம்!
 தானறி யாப்பே யாட்டந் தானாம்!
 ஆயினும் அமைந்துநீ ஆய்ந்துணர்ந் தோதுதி.
 உண்டோ இவர்தமில் ஒப்பு?
 75 கண்டோ எனுமொழிக் காரிகை யணங்கே!      13
வா: ஒப்புயா னெப்படிச் செப்புவன்? அம்ம!
 என்னுளம் போயிறந் ததுவே
 மன்னிய ஒருவன் வடிவுடன் பண்டே.     14
மனோ: பித்தே பிதற்றினை. எத்திற மாயினுந்
 80 தாந்த முளத்தைத் தடைசெயில் எங்ஙனம்,
 காந்தள் காட்டுங் கையாய்!
 தவிர்ந்தது சாடி யோடிடும் வகையே?.     15


வேய் - மூங்கில்; கணுவுடைய மூங்கிலை மகளிர் தோளுக்கு உவமை கூறுவது மரபு. பெட்பு - அன்பு; ஆசை.

கண்டு-கற்கண்டு. காரிகை அணங்கு - தெய்வமகள் போன்ற அழகுள்ள பெண். காந்தள் காட்டும் கை - காந்தள்பூ கைக்கு உவமை.