உட்பட முதல் - உடன்பிறந்தான் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
உடம்பொடு புணர்தல் நூலுக்குரிய உத்திவகையுள் ஒன்று ; கூறும் இலக்கியத்திலேயே சொல்ல வேண்டியதொன்றை உய்த்துணர வைத்தல் .
உடர் உடல் .
உடல் உடம்பு ; மெய்யெழுத்து ; பிறவி ; உயிர்நிலை ; சாதனம் ; பொன் ; பொருள் ; ஆடையின் கரையொழிந்த பகுதி ; மாறுபாடு .
உடல்வாசகம் நடுச்செய்தி ; கடிதம் , உறுதிப்பத்திரம் முதலியவற்றின் முன்னுரையும் இறுதியுரையும் நீங்கிய பகுதி .
உடலந்தம் உடலின் அழிவு , இறப்பு .
உடலம் உடம்பு .
உடலவருத்தனை மெய்யாற் செய்யும் அபிநயம் .
உடலிலான் உருவில்லாத காமன் .
உடலுதல் சினத்தல் ; மாறுபடுதல் ; போர்புரிதல் ; ஆசையால் வருத்தமுறல் .
உடலுநர் பகைவர் .
உடலுருக்கி கணைச்சூடு .
உடலெடுத்தல் பிறத்தல் ; உடல் நன்றாகத்தேறுதல் ; உடல் கொழுத்தல் .
உடலெழுத்து மெய்யெழுத்து .
உடலோம்பல் உடம்பை நன்முறையில் வளர்த்தல் , உடலைப் போற்றுதல் .
உடற்கரித்தல் தோள்தட்டுதல் .
உடற்கருவி மெய்காப்பணி ; கவசம் .
உடற்காப்பு மெய்காப்பணி ; கவசம் .
உடற்காவல் மெய்காப்பணி ; கவசம் .
உடற்குறை உறுப்புக் குறை ; தலையற்ற உடல் , கவந்தம் .
உடற்கூறு உடலிலக்கணம் .
உடற்கொழுப்பு குடற்கொழுப்பேறுதல் ; உணவில் வெறுப்புண்டாக்கும் ஒருவகை நோய் .
உடற்சி கோபம் ; பெருஞ்சினத்தோடு பொருதல் ; பகைத்தல் .
உடற்றல் பெருஞ்சினம் .
உடற்றுதல் வருத்துதல் ; சினமூட்டுதல் ; போரிடுதல் ; கெடுத்தல் ; செலுத்துதல் .
உடறுதல் சினத்தல் .
உடன் ஒக்க , ஒருசேர , அப்பொழுதே ; மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபு .
உடன்கட்டையேறுதல் இறந்த கணவனுடன் மனைவியும் ஈமத்தீயில் புகுந்து இறத்தல் .
உடன்கற்றல் ஒருவருடன் கற்றல் ; ஒரு சாலையில் ஒருங்கு கற்றல் ; ஒரு வகுப்பில் ஒருங்கு கற்றல் .
உடன்கூட்டத்ததிகாரி சோழர் காலத்து ஊர்ச்சபைத் தலைவன் .
உடனகூட்டாளி கூட்டுப்பங்காளி ; ஒத்தநிலையுடையவன் .
உடன்கூட்டு ஒன்றுகூட்டு ; பங்காளியாயிருத்தல் .
உடன்கையில் உடனே .
உடன்சேர்வு ஒன்றனோடு சேர்வது ; அனுபந்தம் , பின்னிணைப்பு .
உடன்பங்கு சரிபங்கு ; கூட்டுப்பங்கு .
உடன்படல் காண்க : உடன்படுதல் , நூல் மதங்கள் ஏழனுள் ஒன்று .
உடன்படிக்கை ஒப்பந்தம் , சம்மதப் பத்திரம் ; உறுதிப்பாடு .
உடன்படுத்துதல் இணக்குதல் .
உடன்படுதல் இசைதல் , சம்மதித்தல் .
உடன்பாட்டுவினை விதிவினை
உடன்பாடு மனப்பொருத்தம் ; இசைவு .
உடன்பாடுவான் பக்கப்பாட்டுக்காரன் .
உடன்பிறந்தான் கூடப்பிறந்தவன் .
உட்பட உள்ளாக .
உட்படி தராசில் இடும் படிக்கல் எவ்வளவு குறைகின்றது என்பதை அறிய இடும் சிறு படிக்கல் முதலியன .
உட்படுத்தல் அகப்படுத்தல் , உள்ளாகச் செய்தல் ; உடன்படுத்தல் .
உட்படுதல் உள்ளாதல் ; கீழாதல் ; அகப்படுதல் ; உடன்படுதல் ; சேர்தல் .
உட்பந்தி அகப்பந்தி , விருந்தில் தலைவரிசை .
உட்பலம் அக வலிமை ; அவை : படைவலிமை , பொருள்வலிமை , துணைவலிமை , உடல் வலிமை , அகவலிமை , மூலப்படை என்பன .
உட்பற்று அகப்பற்று .
உட்புகுதல் உள்ளே நுழைதல் ; ஆழ்ந்து நோக்குதல் .
உட்புரவு அரசாங்கத்தைச் சாராத அறப்புறம் .
உட்புரை உட்டுளை ; உள்மடிப்பு ; அந்தரங்கம் .
உட்பூசை மானச பூசை , உள்ளத்தே தியான முறையில் செய்யப்படும் வழிபாடு .
உட்பொருள் உண்மைக் கருத்து ; மறைபொருள் .
உடக்கரித்தல் காண்க : உடற்கரித்தல் .
உடக்கு திருகாணிச் சுரையின் உட்சுற்று ; உடல் ; உள்ளீடின்மை .
உடக்குதல் செலுத்தல் ; நாணிற் செறிதல் ; எய்தல் ; உள்ளீடின்றி இருத்தல் .
உடக்கெடுத்துப்போதல் உடம்பு மிக மெலிதல் .
உடங்கு பக்கம் ; ஒத்து ; ஒருபடியாக ; சேர ; உடனே .
உடசம் இலைக்குடில் ; வீடு ; வெட்பாலை .
உடந்தை கூட்டுறவு ; சேர்க்கை ; துணை ; உறவு .
உடப்பு துறட்டுமுள்ளிச்செடி ; துறட்டுமுள் .
உடம் இலை ; புல் ; விடியற்காலம் ; வேலமரம் .
உடம்படல் உடன்படல் .
உடம்படிக்கை உடன்படிக்கை ; பொருத்தச்சீட்டு .
உடம்படுதல் சம்மதப்படுதல் , மனம் ஒத்தல் .
உடம்படுமெய் நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள இரண்டு உயிர்களைச் சேர்க்கும் மெய்களாகிய ய் , வ் .
உடம்பாடு ஒற்றுமை ; சம்மதம் ; மனப் பொருத்தம் .
உடம்பிடி வேலாயுதம் .
உடம்பு உடல் , உயிர்நிலை ; மெய்யெழுத்து ; ஆண் அல்லது பெண்ணின் குறி .
உடம்புக்கீடு கவசம் .
உடம்புரட்டல் உடலிலிருந்து அழுக்கைத் திரட்டியெடுத்தல் ; குழந்தை புரளுகை .
உடம்புரட்டுதல் உடலிலிருந்து அழுக்கைத் திரட்டியெடுத்தல் ; குழந்தை புரளுகை .
உடம்பெடுத்தல் பிறத்தல் ; செயலுடையனாதல் .
உடம்பை கலங்கல் நீர் .