சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| உடைய பிள்ளையார் | திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் . |
| உடையவர் | ஆன்மாக்களை அடிமையாக உடையவர் ; சுவாமி ; ஆன்மார்த்தலிங்கம் ; செல்வர் ; இராமானுசர் . |
| உடையவரசு | திருநாவுக்கரச நாயனார் . |
| உடையவன் | உரியவன் ; பொருளையுடையவன் ; கடவுள் ; செல்வன் ; தலைவன் . |
| உடையார் | செல்வர் ; சுவாமி ; சில வகுப்பார்களின் பட்டப் பெயர் இலங்கையில் ஒரு கிராம அலுவலர் . |
| உடையார்சாலை | கோயிலில் உள்ள அன்னசாலை . |
| உடையாள் | உமாதேவி ; உடைமையாகக் கொண்டவள் . |
| உடையாளி | கடவுள் |
| உடையான் | உடையவன் ; உரிமைக்காரன் ; அரசன் ; தலைவன் ; கடவுள் . |
| உடைவாரம் | மொத்த விளைவு , முழு விளைவு . |
| உடனிகழ்ச்சி | ஒருங்கு நடைபெறுதல் . |
| உடனிகழ்தல் | ஒருங்கு நடைபெறுதல் . |
| உடனிகழ்வான் | துணைவன் . |
| உடனிகழ்வு | காண்க : உடனிகழ்ச்சி . |
| உடனிலை | கூடி நிற்கை , கூடியிருத்தல் ; உடனிருந்த இருவரைப் பாடும் ஒரு புறத்துறை ; தம்முள் இயைந்து நிற்றல் ; வேற்றுநிலை இல்லாதது . |
| உடனிலைச் சிலேடை | ஒரு பாட்டு நேரே வரும் பொருளையன்றி வேறு ஒரு பொருளும் கொண்டு நிற்கும் அணி . |
| உடனிலைச் சொல் | காண்க : ஒப்புமைக் கூட்டம் . |
| உடனிலைமெய்ம்மயக்கம் | ர ,ழ என்பவை ஒழிந்த பதினாறு மெய்களுள் ஒவ்வொன்றும் தன்னுடன் தான் நின்று மயங்குகை . |
| உடனுக்குடன் | அப்போதைக்கப்போது . |
| உடனுறை | கூடி வாழ்தல் ; ஒரு நிலத்தில் உடனுறைகின்ற கருப்பொருளால் பிறிதுபொருள் பயப்ப மறைத்துக்கூறும் இறைச்சிப்பொருள் . |
| உடனுறைவு | ஒன்றாக வாழ்தல் ; புணர்ச்சி . |
| உடனே | தாமதமின்றி ; ஒருசேர ; முழுக்க . |
| உடனொத்தவன் | சமானமானவன் . |
| உடு | விண்மீன் ; அகழி ; அம்பு ; அம்புத்தலை ; அம்பினிறகு ; ஓடக்கோல் ; சீக்கிரிமரம் ; ஆடு . |
| உடுக்கு | ஒருவகைச் சிறு பறை ; இடைசுருங்கு பறை . |
| உடுக்கை | இடைசுருங்கு பறை ; சீலை ; உடுத்தல் . |
| உடுக்கோன் | விண்மீன்களுக்கு அரசனான சந்திரன் . |
| உடுகாட்டி | காண்க : பொன்னாங்காணி . |
| உடுண்டுகம் | வாகைமரம் . |
| உடுத்தாடை | சிற்றாடை . |
| உடுத்துதல் | ஆடையணிவித்தல் . |
| உடுப்பு | ஆடை ; அங்கி முதலியன . |
| உடுப்பை | காண்க : உசிலை . |
| உடுபதம் | வானம் , ஆகாயம் . |
| உடுபதி | காண்க : உடுக்கோன் ; மரமஞ்சள் . |
| உடுபம் | தெப்பம் . |
| உடுபன் | காண்க : உடுக்கோன் . |
| உடுபாதகம் | பனைமரம் . |
| உடும்பு | பல்லிவகையைச் சேர்ந்த ஊரும் ஓர் உயிரினம் பிளவுபட்ட நாக்குள்ள ஓர் உயிரினம் . |
| உடும்பு நாக்கன் | பொய்யன் , மாறுபடப் பேசுபவன் ; வஞ்சகன் . |
| உடுமடி | ஆடை . |
| உடுமாற்று | உடைமாற்றுகை ; நடைபாவாடை . |
| உடுமானம் | உடை ; நிலைமைக்குத் தகுந்த உடை . |
| உடுவம் | அம்பின் ஈர்க்கு . |
| உடுவேந்தன் | காண்க : உடுக்கோன் . |
| உடுவை | அகழி ; நீர்நிலை . |
| உடை | ஆடை ; செல்வம் ; உடைமை ; குடைவேல மரம் : சூரியன் மனைவி . |
| உடை | (வி) ஒடி , தகர் , உடை என்னும் ஏவல் . |
| உடைக்கல் | காவிக்கல் . |
| உடைகுளம் | இருபதாம் நட்சத்திரமாகிய பூராட நாள் ; மூளி ஏரி . |
| உடைகொல் | உடைமரம் : வேலமரம் . |
| உடைஞாண் | உடைமேல் தரிக்கும் கயிறு . |
| உடைநாண் | உடைமேல் தரிக்கும் கயிறு . |
| உடைத்தல் | தகர்த்தல் : அழித்தல் : வருத்துதல் : தோற்கச் செய்தல் : வெளிப்படுத்துதல் ; குட்டுதல் : பிளத்தல் : கரை உடைத்தல் : புண் கட்டியுடைதல் ; முறுக்கவிழத்தல் . |
| உடைதல் | தகர்தல் : உலைதல் : கெடுதல் : மலர்தல் : பிளத்தல் : முறுக்கவிழ்தல் : எளிமைப்படுதல் : புண்கட்டியுடைதல் : ஆறு முதலியன கரையுடைதல் : அவிழ்தல் ; தோற்றோடுதல் ; வெளிப்படுதல் . |
| உடைப்படை | நிலைப்படை . |
| உடைப்பு | உடைகை , உடைந்துவிடுதல் ; உடைந்த அறுவாய் , பிளப்பு . |
| உடைப்பெடுத்தல் | வெள்ளத்தாற் கரையழிதல் . |
| உடைப்பொருள் | உடைமைப் பொருள் , ஒருவருக்கு உடைத்தாகிய பொருள் . |
| உடைமணி | குழந்தைகளின் அரையணி ; மேகலை . |
| உடைமை | உடையனாகும் தன்மை ; உடைமைப் பொருள் ; செல்வம் ; அணிகலன் ; உரிமை ; உரியவை . |
| உடைய | ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு . |
| உடையநம்பி | சுந்தரமூர்த்தி நாயனார் . |
| உடன்பிறந்தாள் | கூடப்பிறந்தவள் . |
| உடன்பிறப்பு | கூடப்பிறக்கை , ஒரு வயிற்றில் பிறத்தல் சகோதரத்துவம் . |
| உடன்புணர்ப்பு | சமவாயம் , சம்பந்தம் , கூட்டம் . |
| உடன்போக்கு | கூடப்போதல் ; களவில் தலைவி தன் பெற்றோர் அறியாமல் தலைவனுடன் செல்லுதல் . |
| உடன்மாணாக்கன் | ஓர் ஆசிரியரிடம் ஒருவனோடு சேர்ந்து கற்பவன் . |
| உடன்வந்தி | கூடவே வருவது . |
| உடன்வயிற்றோர் | ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர் , உடன்பிறந்தவர் . |
| உடன்வயிறு | ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர் , உடன்பிறந்தவர் . |
| உடன்றல் | சினத்தல் ; போர் . |
| உடனடி | உடனே . |
| உடனாதல் | கூடிநிற்றல் . |
| உடனாளி | கூட்டாளி ; சொத்துள்ளவன் . |
|
|
|