உடைவாள் முதல் - உணப்பாடு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
உண்ணாக்கு உள்நாக்கு ; அண்ணத்துள்ள சிறுநாக்கு ; அண்ணம் , மேல்வாய் .
உண்ணாட்டம் ஆராய்ச்சி ; உட்கருத்து .
உண்ணாமுலை பாலுண்ணாத முலை ; திருவண்ணாமலையில் கோயில்கொண்டிருக்கும் உமை .
உண்ணாவிரதம் பட்டினிநோன்பு .
உண்ணாழிகை கோயிலுள் இறைவன் திருமேனியுள்ள இடம் , கருவறை .
உண்ணாழிகையார் கோயில் கருவறையில் வீற்றிருக்கும் கடவுள் .
உண்ணாழிகையுடையார் கருவறையில் பணிபுரிவோர் .
உண்ணாழிகை வாரியம் கோயில் மேற்பார்வைக் குழு
உண்ணி விலங்குகளின் உடலில் இருப்பதொரு பூச்சிவகை ; பாலுண்ணி ; உண்பவன் .
உண்ணியப்பம் உருண்டை வடிவான இனிப்புப் பணியாரவகை .
உண்ணீர் குடிக்கும் நீர் .
உண்ணீர்க்கொக்கு ஒருவகைக் கொக்கு .
உண்ணுதல் உணவு உட்கொள்ளுதல் ; பொருந்துதல் ; நுகருதல் ; அனுபவித்தல் ; இசைவாதல் .
உண்ணோக்கல் சிந்தித்தல் ; தியானித்தல் .
உண்பலி பிச்சை .
உண்மடம் அறிவின்மை ; உணவு கொள்ளும் இடம் ; உள்ளிடத்து மடம் .
உண்மடை உள்வாய்க்கால் ; அடி மதகின் திறப்பு ; கோயிற்குள்ளிடும் படையல் .
உண்மலம் மனமாசு , மனக்குற்றம் .
உண்மாசு மனமாசு , மனக்குற்றம் .
உண்மிடறு அணல் , உட்கண்டம் .
உண்முகம் மனத்தால் உட்புறம் நோக்கும் நோக்கு .
உண்முடிச்சு உட்கள்ளம் , உள்ளாகச் செய்யும் வஞ்சகம் .
உண்மூக்கு மூக்கின் உட்புறத்தின் மேற்பாகம் .
உண்மூலம் உட்பக்கமாக உண்டாகும் மூலநோய் .
உண்மை உள்ளது ; இயல்பு ; உள்ள தன்மை ; மெய்ம்மை ; நேர்மை ; ஊழ் .
உண்மைஞானம் மெய்யுணர்வு , மெய்யான அறிவு தத்துவஞானம்
உண்மைத்துரோகம் நம்பிக்கைத் துரோகம் ; பொய் .
உண்மைப்படுத்துதல் மெய்ப்பித்தல் .
உண்மைப்படுதல் மெய்யாதல் ; உறுதியாதல் .
உண்மைப்பிடி உறுதியான கொள்கைப்பற்று .
உண்மைப்பொருள் கடவுள் ; சரியான விளக்கம் ; மறுக்க இயலாதபடியுள்ள பொருள் .
உண்மையறிவு மெய்யான அறிவு ; தத்துவஞானம் ; ஊழால் உளதாகிய அறிவு .
உண்மை வழக்கு உள்வழக்கு ; உள்ளதை உள்ளது என்கை .
உண உணவு .
உணக்கம் உலர்ந்த தன்மை , வாட்டம் .
உணக்கு உலர்ந்த தன்மை , வாட்டம் .
உணக்குதல் உலர்த்துதல் ; வாட்டுதல் ; கெடுத்தல் .
உணக்குப்பொருள் காய்கறிகளின் வற்றல் .
உணங்கல் உலர்ந்த பொருள் ; உலர்த்திய தவசம் ; வற்றலிறைச்சி ; உணவு ; உலர்ந்த பூ .
உணங்குதல் உலர்தல் ; மெலிதல் ; காய்தல் ; வாடல் ; சிந்தை மெலிதல் ; செயலறுதல் .
உணத்துதல் உலர்த்தல் , காயவிடுதல் ; வற்றுவித்தல் .
உணப்பாடு உண்ணப்படுகை .
உடைவாள் இடைக்கச்சில் செருகும் குறுவாள் .
உடைவு தகர்கை ; உடைப்பு ; கேடு ; தளர்வு ; தோற்றோடுகை ; மனநெகிழ்ச்சி ; களவு .
உடைவேல் குடைவேல மரம் .
உண்கண் மை தீட்டிய கண் .
உண்கலம் உணவு கொள்ளும் பாண்டம் , உண்ணும் ஏனம் .
உண்கலன் உணவு கொள்ளும் பாண்டம் , உண்ணும் ஏனம் .
உண்டறுத்தல் புசித்துச் செரிப்பித்துக் கொள்ளுதல் ; அனுபவித்து முடித்தல் ; நன்றி மறத்தல் ; ஈடுசெய்து தீர்த்தல் .
உண்டாக்குதல் படைத்தல் ; தோன்றச் செய்தல் ; விளைவித்தல் ; வளர்த்தல் .
உண்டாக காலம் பெற ; கருத்தரிக்க ; மிகுதியாக .
உண்டாட்டம் விளையாட்டு .
உண்டாட்டு கள்ளுண்டு களித்து விளையாடல் ; கள்ளுண்டு மகிழ்தலைத் தெரிவிக்கும் புறத்துறை ; பெருங்காப்பியவுறுப்புள் ஒன்று ; பலர் கூடியுண்ணும் விழா , மகளிர் விளையாட்டு வகை .
உண்டாத்தா கள்ளிமரம் .
உண்டாதல் விளைதல் ; செல்வச் செழிப்பாதல் ; உளதாதல் ; நிலையாதல் ; கருக்கொள்ளுதல் .
உண்டாயிருத்தல் சூல்கொண்டிருத்தல் .
உண்டானவன் செல்வமுள்ளவன் .
உண்டி உணவு ; சோறு ; இரை ; பறவை ; விலங்கு ; இவற்றின் உணவு ; உண்டிச் சீட்டு ; கருவூலம் ; மாற்றுச்சீட்டு ; காணிக்கைப் பெட்டி ; கோயிலுக்குக் கொடுக்கும் பணம் ; நுகர்ச்சி ; கொட்டைக்கரந்தை .
உண்டிகை காணிக்கைக் கலம் ; மாற்றுச் சீட்டு .
உண்டியல் காணிக்கைக் கலம் ; மாற்றுச் சீட்டு .
உண்டியற்புரட்டு பணமோசம் .
உண்டு உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச் சொல் ; ஓர் உவம உருபு ; அற்பத்தைக் குறிக்கும் சொல் ; ஊன்றுகோல் .
உண்டுகம் பெருவாகை மரம் .
உண்டுபடுத்துதல் உண்டாக்குதல் ; படைத்தல் ; கட்டிவிடுதல் .
உண்டுபடுதல் உண்டாதல் ; தோன்றுதல் ; வளர்தல் .
உண்டுபண்ணுதல் உண்டாக்குதல்
உண்டுருட்டி முன்னோர் தேடிவைத்த பொருள்களைத் தின்றழிப்பவன் .
உண்டுறையணங்கு நீர் உண்ணுந் துறையிலுள்ள தெய்வப்பெண் .
உண்டை உருண்டை ; திரட்சி ; திரணடவடிவுள்ளது ; வில்லுண்டை ; கவளம் ; சூது கருவி ; சிற்றுண்டி ; குறுக்கிழை ; படைவகுப்பு ; கூட்டம் ; ஒருவகைச் சருக்கரை ; கஞ்சாவுண்டை .
உண்டைக்கட்டி கோயிலில் தரும் சோற்று உருண்டை .
உண்டைநூல் நூலுருண்டை ; நெசவின் குறுக்கிழை .
உண்டைவிடுதல் குத்துதல் .
உண்டைவில் சுண்டுவில் , காயந்த களிமண் உருண்டையை வைத்துத் தெறிக்கும் சிறு வில் ,
உண்ணம் வெப்பம் , உடைமரம் .
உண்ணா உள்நாக்கு ; அண்ணத்துள்ள சிறுநாக்கு ; அண்ணம் , மேல்வாய் .