சொல்
|
அருஞ்சொற்பொருள் |
உத்தரம் | மறுமொழி ; எதிர்மொழி ; விடை ; எதிர்வாதம் ; பின்நிகழ்வது ; மேற்பட்டது ; உயர்ச்சி ; வடக்கு ; வடவைத் தீ , ஊழித் தீ ; உத்தராயனம் ; பன்னிரண்டாம் நட்சத்திரம் , அருந்ததி . |
உத்தரமீமாஞ்சை | ஒரு வித்தை ; பிரம சூத்திரம் முதலிய நூல்கள் . |
உத்தரமீன் | வடமீன் ; அருந்ததி . |
உத்தரவாணி | கண்டங்கத்தரி . |
உத்தரவாதம் | உறுதி ; எதிர்வாதம் ; பொறுப்பு ; ஈடு , பிணை . |
உத்தரவாதி | பதில் சொல்வோன் ; பொறுப்பாளி ; பிணையாளி ; எதிரி . |
உத்தரவு | அனுமதி ; விடுதலை ; கட்டளை ; விடை ; தெய்வக் கட்டளை ; மறுமொழி ; தெய்வ சம்மதம் . |
உத்தரவு கொடுத்தல் | போகச் சொல்லல் ; விடைதரல் ; அனுமதியளித்தல் ; கட்டளை கொடுத்தல் ; ஏவல் . |
உத்தரவுத் சீட்டு | அனுமதிப் பத்திரம் , நுழைவுச்சீட்டு ; அதிகாரப் பத்திரம் . |
உத்தரவேதம் | வேதத்திற்கு மேற்பட்ட வேதமாகிய திருக்குறள் . |
உத்தராசங்கம் | காண்க : உத்தரி(ரீ)யம் . |
உத்தராடம் | இருபத்தொன்றாம் நட்சத்திரம் . |
உத்தராதி | வடக்கு ; வடநாட்டான் . |
உத்தராபதம் | வடநாடு . |
உத்தராபோசனம் | உணவின் முடிவில் மந்திர பூர்வமாக நீர் உட்கொள்ளுதல் . |
உணர்வெழுத்து | குறியினால் உணரப்படும் ஒருவகை எழுத்து . |
உணராமை | அறியாமை ; நெகிழாமை ; மயக்கம் . |
உணரார் | அறியார் ; மூடர் . |
உணல் | உண்ணல் |
உணவின்பிண்டம் | உடம்பு . |
உணவு | சோறு ; உணவுப்பொருள் ; மழை . |
உணா | உணவு ; சோறு . |
உணை | மெலிவு ; உள்மெலிவு . |
உணைதல் | நைதல் , மெலிதல் . |
உணைவு | நைதல் , மெலிதல் . |
உத்கிருட்டம் | சிறந்தது , மேன்மையானது . |
உத்கீதம் | ஓங்காரம் ; சாமவேதம் பாடுதல் . |
உத்கோசம் | பெருமுழக்கம் ; காணிக்கை ; சினம் ; இலஞ்சம் . |
உத்தஞ்சம் | செவிப்பூண் ; சூட்டுமாலை . |
உத்தண்டம் | அச்சம் விளைவிப்பது ; கொடுமை ; வீரம் ; மகத்துவம் ; துணிவு ; வலிமை ; இறுமாப்பு ; அதிகாரம் ; கொடை . |
உத்தண்டமணி | பொன் மணியாலாய கழுத்தணி ; மாதர் கழுத்தணி வகைகளுள் ஒன்று . |
உத்தண்டமாலை | பொன் மணியாலாய கழுத்தணி ; மாதர் கழுத்தணி வகைகளுள் ஒன்று . |
உத்தண்டால் | பொன் மணியாலாய கழுத்தணி ; மாதர் கழுத்தணி வகைகளுள் ஒன்று . |
உத்தம் | கொட்டை முந்திரிகை ; சாமவேதம் ; புகழுரை ; பித்தேறுகை . |
உத்தம்பிரி | கொத்துமல்லி ; உயர்சாதிக் குதிரை . |
உத்தமதாளி | வேலிப்பருத்தி . |
உத்தமதானம் | நல்வழியில் சேர்த்த பொருளைத் தக்கார்க்கு வழங்குகை ; பாக்கு வெற்றிலைகளைத் தானமாகக் கொடுக்கை . |
உத்தமதானி | கோயிலில் வைக்கும் ஒருவகை விளக்கு . |
உத்தமபட்சம் | முதல் தரம் . |
உத்தமபலம் | முந்திரிகைப் பழம் , கொட்டை முந்திரி . |
உத்தமபாத்திரம் | தானம் பெறுவதற்குரிய பெரியோர் . |
உத்தமபுருடன் | உயர்ந்த குறிகளுடையவன் ; நன்னெறி நடப்போன் ; நற்குணமுடையவன் ; கடவுள் . |
உத்தமம் | எல்லாவற்றுள்ளும் சிறந்தது ; முதன்மை , மேன்மை ; உயர்வு ; நன்மை ; அரத்தை . |
உத்தமர்ணன் | கடன் கொடுப்பவன் . |
உத்தமன் | காண்க : உத்தமபுருடன் . |
உத்தமாகாணி | காண்க : உத்தமதானி . |
உத்தமாங்கம் | தலை ; ஆண்குறி ; பெண்குறி ; கருடன் ; வீடு . |
உத்தமி | உயர்ந்தவள் ; கற்புடையவள் ; பார்வதி . |
உத்தமை | உத்தமி ; சிறந்தவள் ; பதுமினி சாதிப்பெண் ; ஊசிப்பாலை . |
உத்தரக் கற்கவி | கதவுநிலைக்குமேல் சித்திரம் எழுதப்பட்ட பலகை . |
உத்தரகமனம் | மகாப்பிரஸ்தானம் , உயிரை மாய்க்க வடதிசை நோக்கிச் செல்லுகை , வடக்கிருத்தல் . |
உத்தரகன்மம் | இறுதிக்கடன் , உத்தரகிரியை . |
உத்தரகாலம் | எதிர்காலம் . |
உத்தரகிரியை | பின்செயல் ; இறந்தபின் செய்யும் சடங்கு ; அந்தியேட்டி முதலிய அபரக்கிரியை . |
உத்தரகுடுமி | முன்குடுமி . |
உத்தரகுரு | போகபூமி ; போகபூமி ஆறனுள் ஒன்று ; அருந்ததி ; பாண்டவர் . |
உத்தரகுருக்கள் | போக பூமியில் வாழ்பவர் . |
உத்தரகுருவம் | காண்க : உத்தரகுரு . |
உத்தரகோளார்த்தம் | நிலவுருண்டையின் வடபாதி . |
உத்தரசைவம் | சித்தாந்த சைவம் . |
உத்தரட்டாதி | இருபத்தாறாம் நட்சத்திரம் . |
உத்தரணி | பஞ்சபாத்திரக் கரண்டி , தீர்த்தம் எடுத்தற்குரிய சிறுகரண்டி , சுருவை . |
உத்தரத்திரயம் | உத்தரம் எனத் தொடங்கும் மூன்று நட்சத்திரம் ; உத்தரம் , உத்தராடம் , உத்தரட்டாதி என்பன . |
உத்தரபற்குனி | உத்தரம் , பன்னிரண்டாம் நட்சத்திரம் . |
உத்தரபாகம் | பிற்பாகம் . |
உத்தரபூமி | வடசீதள பூமி . |
உத்தரபூருவம் | வடகிழக்கு . |
உணர்ச்சி | உணர்வு ; அறிவு ; மனம் . |
உணர்த்தல் | அறிவித்தல் ; துயிலெழுப்புதல் ; ஊடல் தீர்த்தல் ; நினைப்பூட்டுதல் ; கற்பித்தல் . |
உணர்த்தி | உணர்ச்சி ; நினைவு . |
உணர்த்துதல் | காண்க : உணர்த்தல் . |
உணர்தல் | அறிதல் ; நினைதல் , கருதுதல் ; ஆராய்தல் ; இயல்புணர்தல் ; ஊடல் நீங்குதல் ; தெளிதல் ; துயிலெழுதல் ; பகுத்தறிதல் ; நுகர்தல் ; தொட்டறிதல் ; பாவித்தல் . |
உணர்ந்ததையுணர்தல் | ஓரளவை ; முன் அறிந்துள்ள ஒன்றைப் பின்னும் அறிதல் . |
உணர்ப்பு | தெளிவிக்கப்படுகை ; ஊடல் தீர்த்தல் . |
உணர்வு | அறிவு ; தெளிவு ; துயில் நீங்குகை ; கற்றுணர்கை ; ஒழிவு ; ஆன்மா ; புலன் . |
![]() |
![]() |
![]() |