உத்தராயனம் முதல் - உதயராகம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
உத்தியுத்தன் அருவுருவத் திருமேனி கொண்ட சிவன் ; மிகவும் பயன்படுபவன் ; ஊக்கமுள்ளவன் .
உத்தியோகம் முயற்சி : வேலை , தொழில் .
உத்திரதம் விட்டம் ; சிறுவலை ; அச்சுருவாணி .
உத்திரம் காண்க : உத்தரம் ; மஞ்சள் ; மரமஞ்சள் ; பன்னிரண்டாம் நட்சத்திரம் ; சூரிய நாள் ; வீட்டின் உத்தரம் ; விட்டம் .
உத்திராபன்னி சணல்செடி .
உத்திரி அருச்சனை ; தியானம் ; மந்திரம் ; பருத்திச்செடி .
உத்தீபகம் எழுச்சியுண்டாக்கல் ; ஒளிவிடல் ; மலையெறும்பு .
உத்தீபனம் விகாரமூட்டல் ; எழுச்சியுண்டாக்கல் .
உத்தீயம் எழுவகைச் சோமவேள்விகளுள் ஒன்று .
உத்து சான்று , சாட்சி , துப்பு .
உத்துங்கம் உயர்ச்சி ; உயர்ந்தது ; நெடுமை ; மேன்மை ; மிருது .
உத்துவாகிதமுகம் அண்ணாந்து பார்க்கை , தலைநிமிர்ந்து நோக்கல் .
உத்துவாசனம் அனுப்பிவிடுகை ; அகற்றுதல் : கொல்லுதல் .
உத்துவேகம் மிகு விரைவு ; அச்சம் ; திருமணம் ; பாக்கு .
உத்துளம் திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல் .
உத்தூளம் திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல் .
உத்தூளனம் திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல் .
உத்தூளித்தல் திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல் .
உத்தூளிதம் திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல் .
உத்தேசம் நோக்கம் ; மதிப்பு ; பின்னே விளக்கற் பொருட்டு முன் பெயர் மாத்திரையாற் சொல்லுதல் ; விருப்பம் .
உத்தேசித்தல் கருதுதல் ; மதித்தல்
உத்பிரேட்சை தற்குறிப்பேற்ற அணி .
உதக்கு வடக்கு ; பின்னானது ; மேலானது .
உதகுசுத்தி தேற்றாமரம் .
உதகஞ்சிதறி மழை .
உதகம் நீர் ; பூமி .
உதகமூலம் தண்ணீர்விட்டான் கிழங்கு ; பச்சைவேர் .
உதகரணம் உதைத்து அமுக்குகை .
உதகரித்தல் உதாரணங்காட்டி விளக்கல் .
உதகவன் நெருப்பு ; கொடிவேலி .
உதகு புன்கமரம் .
உதகும்பம் நீர்க்குடம் .
உதசம் சாபம் ; நீரிற் பிறந்த பொருள் ; பசுமடி .
உதடு இதழ் ; பானை முதலியவற்றின் விளிம்பு ; வெட்டுவாய் .
உதண் மொட்டம்பு ; கூரற்ற அம்பு .
உதணம் மொட்டம்பு ; கூரற்ற அம்பு .
உததி கடல் ; நீர்க்குடம் ; மேகம் .
உதப்பி தெறிக்குமெச்சில் ; ஈரல் ; செரியாத இரை .
உதப்பிவாயன் எச்சில் தெறிக்கப் பேசுகிறவன் .
உதப்புதல் கடிந்து பேசுதல் ; இகழந்து நீக்குதல் ; குதப்புதல் ; பேசுகையில் எச்சில் தெறித்தல் .
உதம் உதகம் ; நீர் ; ஓமம் ; அழைத்தல் ; கேட்டல் .
உதம்புதல் அதட்டுதல் ; கடந்து கொள்ளல் ; அச்சுறுத்துதல் .
உதயகாலம் சூரிய சந்திர நட்சத்திரங்கள் தோன்றும் காலம் ; சூரியன் உதிக்கும் காலம் .
உதயகாலை சூரிய சந்திர நட்சத்திரங்கள் தோன்றும் காலம் ; சூரியன் உதிக்கும் காலம் .
உதயகிரி சூரியன் உதிப்பதாகக் கருதப்படும் மலை ; செம்பாலையிற் பிறக்கும் ஒரு பண் , குறிஞ்சி யாழ்த்திறவகை .
உதயதாரகை விடிவெள்ளி .
உதயம் தோற்றம் ; நட்சத்திரம் முதலியன கீழ்வானடியில் தோன்றுதல் ; காலை ; பிறப்பு ; சீர்பேறு ; வெளிச்சம் .
உதயராகம் காலைப்பண் .
உத்தராயனம் சூரியன் வடக்கு நோக்கிச் செல்லுங் காலம் ; தை முதல் ஆனிவரையுள்ள ஆறு மாத காலம் , சூரியன் வடக்கில் தைமுதல் ஆனி மட்டும் இயக்குங் காலம் ; தைமாதப் பிறப்பு .
உத்தரார்த்தம் பிற்பாதி
உத்தரி குதிரை ; பாம்பு ; யானை ; பருத்திச்செடி .
உத்தரிக்கும்தலம் இறப்பின்பின் உயிர் தூய்மை பெறும் வேதனையுலகம் .
உத்தரிகம் காண்க : உத்தரி(ரீ)யம் .
உத்தரித்தல் அழுந்தல் ; அனுப்பித்தல் ; ஈடுசெய்தல் ; கடன் செலுத்துதல் ; பொறுத்தல் ; உடன்படல் ; சொற்போரிடல் ; மறுமொழி சொல்லுதல் .
உத்தரியம் மேற்போர்வை , மேலாடை .
உத்தரீயம் மேற்போர்வை , மேலாடை .
உத்தரோத்தரம் மேலும் மேலும் ; மறுமொழிக்கு எதிர்மொழி .
உத்தளம் உத்தூளிதம் , மத்தள பேதம் .
உத்தாபம் மிகு வெப்பம் ; தவிப்பு ; முயற்சி .
உத்தாபலம் இசங்குச் செடி
உத்தாபனம் குழந்தையைப் பிறந்த அறையினின்று வெளிக்கொணருஞ் சடங்கு .
உத்தாபனி தசைவகை .
உத்தாமணி வேலிப்பருத்தி .
உத்தாரணம் தீங்கினின்றும் மீட்கை ; எடுத்து நிறுத்துகை .
உத்தாரம் மறுமொழி ; கட்டளை ; அனுமதி ; ஒழுங்காகக் கொடுக்கும் நிலையான வருவாய் .
உத்தாலகம் ஒருவகைச் சோளம் .
உத்தாலம் நறுவிலிமரம்
உத்தானம் அடுப்பு ; உயிர்த்தெழுகை ; இசைப்பு ; ஊழித் தீ ; படைப்பு ; எழும்புதல் ; நிமிர்ந்து கிடத்தல் ; காண்க : உத்தாபனம் ; அடக்குகை ; இடை ; உயர்ந்தெழுகை .
உத்தானி காண்க : உத்தாபனி .
உத்தி சொல் : சூழ்ச்சி : செல்வம் : சீதேவி உருவம் பொறித்த தலையணி ; தேமல் ; பாம்பின் படப்பொறி : தந்திரவுத்தி : அறிவு : கருதலளவை : சேர்க்கை ; இணக்கம் ; தக்கதன்மை ; ஆபரணத் தொங்கல் ; அபின் .
உத்திட்டம் எதிர்பார்க்கை ; சொல்லுகை சிறப்பிக்கைக் குறிப்பு
உத்தியம் வேள்விவகை ; வேள்வி இருபத் தொன்றனுள் ஒன்று .
உத்தியாபனம் முடித்தல் ; நோன்பு முடிக்கை .
உத்தியானம் சோலை , நந்தவனம் , பூந்தோட்டம் , சிங்காரவனம் , அரசர் விளையாடுங் காவற்சோலை .
உத்தியானவனம் சோலை , நந்தவனம் , பூந்தோட்டம் , சிங்காரவனம் , அரசர் விளையாடுங் காவற்சோலை .