உதயராசி முதல் - உதிரமண்டலி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
உதானன் தசவாயுவுள் ஒன்று , நாபியில் நிற்கும் வாயு .
உதி காண்க : ஒதி ; வித்தை ; உலைத்துருத்தி .
உதி (வி) பிற , உதித்தலைச் செய் ; உதயமாகு ; அவதரி ; காலந்தொடங்கு .
உதிட்டிரன் போர்த்திறமுள்ளவன் ; தருமபுத்திரன் .
உதித்தல் உதயமாதல் , தோன்றுதல் , பிறத்தல் , பருத்தல் .
உதிதன் தோன்றினவன் ; பாண்டிய மன்னன் .
உதிப்பு தோற்றம் ; பிறப்பு ; அறிவு .
உதியன் சேரன் ; பாண்டியன் .
உதிர் கோரைக்கிழங்கு ; துகள் .
உதிர்த்தல் உதிரச் செய்தல் ; வீழ்த்துதல் ; பொடியாக்கல் ; உதறுதல் .
உதிர்தல் கீழ்விழுதல் ; சிந்துதல் ; சொரிதல் ; பிதிர்தல் ; அழிதல் ; சாதல் ; குலைதல் .
உதிரக்கட்டு இரத்தத்தை நிறுத்துகை ; பூப்புப்படாமை .
உதிரக்கல் மாணிக்கவகை .
உதிரக்குடோரி கருடன்கிழங்கு .
உதிரங்களைதல் இரத்தம் வடிதல் ; இரத்தம் நீக்குதல் .
உதிரசூலை கருப்ப நோய்வகை .
உதிரபந்தம் மாதுளை .
உதிரம் இரத்தம் .
உதிரமண்டலி நச்சுயிரிவகை .
உதயராசி குழந்தை பிறக்கும்போது உதயமாயுள்ள ராசி .
உதயலக்கினம் குழந்தை பிறக்கும்போது உதயமாயுள்ள ராசி .
உதயன் சூரியன் .
உதயனம் உதித்தல் ; தோன்றல் .
உதயாத்தமனம் சூரியன் முதலியவற்றின் தோற்றமும் மறைவும் ; காலை மாலைகள் .
உதயாதிபன் சூரியன் ; உதயராசியை ஆளும் கோள் .
உதரக்கொதி மிகு பசி ; வயிற்றுத் துடிப்பு .
உதரகம் சோறு .
உதரகோமதம் பாலடைப் பூண்டு .
உதரத்துடிப்பு மிகு பசி .
உதரப் பிரிவினர் ஒருகுடிப் பிறந்தார் .
உதரபந்தம் அரைப்பட்டிகை ; ஒட்டியாணம் .
உதரபந்தனம் அரைப்பட்டிகை ; ஒட்டியாணம் .
உதரம் வயிறு ; கருப்பம் ; கீழ்வயிறு .
உதரவணி கண்டங்கத்தரிச் செடி .
உதராக்கினி பசித் தீ , பசி .
உதவகன் காண்க : உதகவன் .
உதவடுத்தல் உதவிசெய்தல் .
உதவரக்கெட்டது மிகவும் இழந்தது ; முற்றும் கெட்டது .
உதவரங்கெட்டது மிகவும் இழந்தது ; முற்றும் கெட்டது .
உதவல் காரியத்திற்கு ஆதல் ; உதவி செய்தல் , ஈதல்
உதவாக்கட்டை பயனற்றவன் .
உதவாக்கடை பயனற்றவன் .
உதவாக்கரை பயனற்றவன் .
உதவாப்பட்சம் தவறினால் .
உதவி துணை ; கொடை .
உதவு கூரைவேயுங் கழி .
உதவுதல் கொடுத்தல் ; துணைசெய்தல் ; தடுத்து நிற்றல் ; சொல்லுதல் ; கூடியதாதல் ; பயன்படுதல் .
உதள் ஆட்டுக்கடா ; ஆடு ; வெள்ளாட்டுக்கடா ; மேடராசி .
உதளிப்பனை காண்க : கூந்தற்பனை .
உதளை காட்டலரிவகை ; ஆற்றரளிச் செடி .
உதறிமுறிப்பான் விஷ்ணுகரந்தைச் செடி .
உதறுகாலி உதைநாற் பசு ; காலையிழுத்து நடப்பவள் .
உதறுதல் சிதற வீசுதல் ; விதிர்த்தல் ; நடுங்குதல் ; விலக்குதல் ; இடங்கொடாமல் தள்ளுதல் .
உதறுவலி நடுக்குவாதம் .
உதறுவாதம் நடுக்குவாதம் .
உதனம் சிறிது .
உதாகரணம் எடுத்துக்காட்டு , உதாரணம் .
உதாகரிகன் எடுத்துக்காட்டாக உள்ளவன் .
உதாகரித்தல் உதாரணங்காட்டி விளக்கல் .
உதாசனன் அக்கினி ; அக்கினிதேவன் ; கண் குத்திப் பாம்பு ; இகழ்பவன் ; நிந்திப்பவன் .
உதாசனி கொடியவள் .
உதாசனித்தல் இகழ்தல் ; நிந்தித்தல் .
உதாசினம் பொருட்படுத்தாமை ; நிந்தை ; விருப்பு வெறுப்பில்லா நடுநிலை ; இகழ்வு .
உதாசீனம் பொருட்படுத்தாமை ; நிந்தை ; விருப்பு வெறுப்பில்லா நடுநிலை ; இகழ்வு .
உதாசீனன் விருப்பு வெறுப்பின்றிப் பொதுமையாயிருப்பவன் ; இல்லறக் கடனை முடித்து உவர்ப்புப் பிறந்த நிலையுடையான் .
உதாத்தம் செல்வவுயர்ச்சியையோ மனப்பெருமையையோ உயர்த்திக் கூறும் ஓர் அணி ; எடுத்தலோசை ; பெருமை ; உதவிக்கொடை .
உதாத்தன் சிறந்தவன் ; வள்ளல் .
உதாரகுணம் வள்ளன்மை ; பெருங்கொடைத்தன்மை .
உதாரணம் எடுத்துக்காட்டு , மேற்கோள் ; எதிர்நியாயம் ; துணைக் காரணம் .
உதாரத்துவம் கொடுக்குங் குணம் ; பெருங்கொடைத்தன்மை .
உதாரதை உதாரத் தன்மை ; பெருங்கொடை , காண்க : உதாத்தம் .
உதாரம் தருமம் , ஈகை , கொடை ; மேம்பாடு , பெருமை ; குறிப்பினால் ஒரு பொருள் சிறப்புப் படத் தோன்றுவதாகிய குணம் ; தாராளம் ; மேட்டிமை .
உதாரன் கொடையாளி ; பேச்சுத்திறமை உள்ளவன் .
உதாரி கொடையாளி ; பேச்சுத்திறமை உள்ளவன் .
உதாவணி கண்டங்கத்தரிச்செடி .