சொல்
|
அருஞ்சொற்பொருள் |
உந்துதல் | தள்ளுதல் ; வீசியெறிதல் ; அம்பு முதலியன செலுத்துதல் ; வீழவித்தல் ; யாழ் நரம்பு தெறித்தல் ; கடைதல் ; நகர்தல் ; ஒளிவீசல் ; பொருந்துதல் ; நீங்குதல் ; அனுப்புதல் . |
உந்துரு | பெருச்சாளி ; எலி . |
உந்தூழ் | பெருமூங்கில் , மலைமூங்கில் . |
உந்தை | உம் தந்தை ; உம் அப்பன் . |
உப்பக்கம் | உந்தப்பக்கம் ; புறப்பக்கம் ; முதுகு , பின்பக்கம் . |
உப்பங்கழி | காயல் ; உப்பளம் . |
உப்பங்காற்று | கடற்காற்று . |
உப்பசம் | காண்க : உப்புசம் . |
உப்பட்டி | அரிக்கட்டு . |
உப்பர் | உப்பு அமைப்போர் , உமணர் , உப்பு வாணிகர் . |
உப்பரம் | வயிற்றுப் பொருமல் . |
உப்பரவர் | குளம் முதலியன அகழ்வோர் ; குறவரில் ஒரு வகுப்பார் . |
உப்பரிகை | மேல்மாடம் ; மேல்மாடி . |
உப்பல் | உப்புதல் ; ஊதிப்பருத்தல் . |
உப்பளம் | உப்பு விளைநிலம் ; கழிநிலம் . |
உப்பளவன் | உப்பு விளைப்போன் . |
உப்பளறு | களிமண்ணும் மணலும் கலந்த களர்நிலம் . |
உப்பறுகு | உவர்நிலத்திலுள்ள ஒருவகை அறுகு . |
உப்பாணி | உப்புச் சுமப்பவன் , விளையாட்டில் தோல்வியடைந்து வென்றவனைச் சுமப்பவன் . |
உப்பாரக்காரன் | சுண்ணாம்பு பூசும் வேலைக்காரன் . |
உப்பால் | உப்பக்கம் ; மேலிடம் ; புறம்பு ; முதுகு . |
உப்பிசம் | காண்க : உப்புசம் . |
உப்பில்லாப்பேச்சு | பயனற்ற பேச்சு . |
உப்பிலி | இண்டங்கொடி ; ஈர்கொல்லிக் கொடி ; காண்க : புலிதொடக்கி ; உப்பில்லாதது . |
உப்பு | உவர்ப்பு ; உவர்ப்புள்ள பொருள் ; உவர்க்கடல் ; இனிமை ; பெண்கள் விளையாட்டு ; மணற்குவியல் ; அன்பு . |
உப்பு | (வி) வீங்கு ; பொங்கு ; ஊது ; பொருமு . |
உப்புக்கண்டம் | உப்புச் சேர்த்துக் காயவைத்த இறைச்சித் துண்டம் ; உலர்த்திய இறைச்சி . |
உப்புக்கரித்தல் | உப்பு மிகுதல் . |
உப்புக்காகிதம் | மரங்களை மெருகிடும் ஒருவகைத் தாள் . |
உப்புக்கீரை | ஒருவகைக் கீரை . |
உப்புக்குத்தி | பறவைவகை , ஒரு குருவி . |
உப்புக்கொள்ளுதல் | ஒரு விளையாட்டுவகை . |
உப்புக்கோடு | கிளித்தட்டு விளையாட்டு . |
உப்புச்சீடை | ஒரு பலகாரம் . |
உப்புச்சுமத்தல் | ஒருவகை விளையாட்டில் வென்றவனைத் தோற்றவன் முதுகில் தூக்கல் ; உப்புத் தூக்குகை . |
உப்புசம் | வயிற்று வீக்கம் ; வயிற்றுப் பொருமல் ; வயிற்றில் வாயு நிரம்பல் ; நுரையீரல் நோய் . |
உப்புத்திரி | மலங்கழிக்க ஏற்றுந் திரி ; முள் தைத்த இடத்தில் சுடுவதற்கு உப்பிட்டுப் பயன்படுத்தும் திரி . |
உப்புதல் | பருத்தல் ; பொங்குதல் ; ஊதுதல் ; வீங்குதல் . |
உப்புப்பால் | ஈன்றணிமையுள்ள தாயின் பால் . |
உப்புப்பூத்தல் | உப்புப் பற்றுதல் ; உடம்பில் உப்புப் படர்தல் ; உப்பங்காற்றால் இற்றுப்போதல் . |
உதிரல் | உதிர்ந்த பூ . |
உதிரன் | செவ்வாய் . |
உதிரி | உதிர்ந்தது ; கதிரிலிருந்து உதிர்ந்த நெல் ; பெரியம்மை நோய் ; பிட்டு ; சிறுகீரை ; செவ்வாழை . |
உதிரிக்குத்து | பெரியம்மையால் உண்டாகும் நோவு . |
உதிரித்தழும்பு | அம்மைவடு . |
உதீசம் | குறுவேர் . |
உதீசி | வடக்கு . |
உது | உஃது , சேய்மைக்கும் அண்மைக்கும் நடுவிலுள்ளதைக் குறிக்கும் ஒரு சுட்டுப்பெயர் ; முன்னிலையானிடமுள்ள பொருள் . |
உதும்பரம் | அத்திமரம் ; எருக்கஞ்செடி ; செம்பு ; நெற்களம் ; வாயிற்படி ; செங்குட்ட நோய் . |
உதூகலம் | உரல் . |
உதை | அடி ; முட்டுக்கால் . |
உதைகால் | தாங்கு ; முட்டுக்கால் ; உதைக்குங்கால் ; முட்டுக்கால் . |
உதைகாலி | உதைக்கும் குணமுள்ள மாடு . |
உதைகொடுத்தல் | உதைத்தல் ; முட்டுக்கொடுத்தல் ; ஊஞ்சலை ஆட்டிக்கொள்ளுதல் . |
உதைசுவர் | முட்டுச்சுவர் , அணைசுவர் . |
உதைத்தல் | காலாலெறிதல் ; தாக்கல் ; பொருட்படுத்தாமை ; செலுத்துதல் ; அடித்தல் ; மாறுபடுதல் ; நடுங்குதல் . |
உதைப்பளவு | கைந்நொடிப் பொழுதளவு . |
உதைப்பான் | தள்ளுகருவி . |
உதைப்பு | உதைக்கை ; தாக்குகை ; அச்சம் ; திகில் . |
உதைபு | கதவு ; புதவு . |
உதைமானம் | முட்டு ; உதைகால் . |
உதோள் | உவ்விடம் , மத்திமம் . |
உதோளி | உவ்விடம் , மத்திமம் . |
உந்த | உங்கேயுள்ள . |
உந்தரம் | வழி ; எலி . |
உந்தல் | உயர்ச்சி ; யாழ்நரம்பு தடவுகை . |
உந்தி | கொப்பூழ் ; வயிறு ; நீர்ச்சுழி ; உயர்ச்சி ; யாற்றிடைக்குறை ; கடல் ; தேருருளை ; மகளிர் விளையாட்டுவகை ; யாழினுறுப்பு ; நீர் ; ஆன்கோட்டம் ; பரப்பு ; யாழ்ப் பத்தர் ; நடு ; ஆறு ; துணை ; பறப்பன . |
உந்திச்சுழி | கொப்பூழ்ச்சுழி ; நீர்ச்சுழி . |
உந்திடம் | உவ்விடம் , |
உந்திநாளம் | கொப்பூழ்க் கொடி . |
உந்திபறத்தல் | உந்தி விளையாட்டு ஆடுதல் , மகளிர் கூடிக் குதித்துப் பாடி விளையாடுதல் . |
உந்திபூத்தோன் | உந்தியில் தாமரையுடையான் ; திருமால் ; பிரமன் . |
உந்தியில் வந்தோன் | திருமாலின் கொப்பூழ்த் தாமரையில் தோன்றியவன் , பிரமன் . |
உந்தியிலுதித்தோன் | திருமாலின் கொப்பூழ்த் தாமரையில் தோன்றியவன் , பிரமன் . |
உந்து | பசுவையழைக்கும் ஒரு குறிப்புச் சொல் ; கச்சோலம் ; ஒரு விகுதி ; உம்மின் திரிபு ; ஏலக்காய்த்தோல் . |
![]() |
![]() |
![]() |