சொல்
|
அருஞ்சொற்பொருள் |
உபதாளம் | ஐந்து சிறுதாளங்கள் ; ஆதி தாளம் : பார்வதி லோசனம் , குடுக்கம் , சிங்கநந்தம் , திரிமாத்திரை . |
உபதானம் | துணைக் காரணம் ; அடிப்படை ; கடமை ; தலையணை ; நோன்பு . |
உபதி | சக்கரத்தின் ஆரம் ; அச்சம் ; வஞ்சனை . |
உபதிருட்டன் | உடனிருந்து பார்ப்பவன் ; புரோகிதன் . |
உபதேசகலை | ஆகமவளவைவகை மூன்றனுள் ஒன்று , மத தத்துவ போதனைமுறை . |
உபதேசம் | கடவுளின் தன்மையைக் கூறுதல் , சமயபோதகம் , ஞான போதனை ; சமயாசார உபதேசம் : மந்திரோபதேசம் : நன்மை கூறல் ; புத்தி புகட்டல் , |
உபதேசி | போதகன் , குரு . |
உபதேசித்தல் | போதித்தல் ; மந்திரத்தை அறிவுறுத்தல் . |
உபதேசியார் | உபபோதகர் . |
உபதை | அமைச்சர் முதலியோரை அமர்த்துவதற்குமுன் அரசன் செய்யுஞ் சோதனை ; அறவுபதை , பொருளுபதை , இன்பவுபதை , அச்சவுபதை ; ஒருவன் மன இயல்பை ஆராய்ந்து தெளிதல் ; தணிக்கை ; ஈற்றயலெழுத்து ; பரிதானம் ; காணிக்கை . |
உபநதி | பேராற்றில் வந்துவிழும் சிற்றாறு . |
உபநயம் | அடைதல் ; அனுமான உறுப்புகள் ஐந்தனுள் ஒன்று ; கொண்டுவருதல் ; பூணூல் தரிக்கும் சடங்கு . |
உபநயனம் | பூணூல் தரிக்கும் சடங்கு , பூணூல் கலியாணம் ; மூக்குக்கண்ணாடி ; வழிநடத்துதல் . |
உபநாகம் | புண்ணுக்கிடும் மருந்து ; புண்கட்டிகளில் வைத்துக் கட்டும் மா முதலியன . |
உபநாயம் | புண்ணுக்கிடும் மருந்து ; புண்கட்டிகளில் வைத்துக் கட்டும் மா முதலியன . |
உபநிட்கிராமணம் | பிறந்த நான்காமாதம் பிள்ளையை முதன்முதல் வெளிக்கொண்டு செல்லும் சடங்கு . |
உபகற்பம் | திருநீறு , காட்டுத்தீ முதலியவற்றால் வெந்த சாம்பலைக் கொண்டு முறைப்படி அமைத்த திருநீறு . |
உபகாரகன் | உதவிசெய்வோன் . |
உபகாரம் | ஈகை ; உதவி ; காணிக்கை ; மகிழ்ச்சி . |
உபகிரகம் | பெருங்கோளைச் சுற்றியோடுஞ் சிறுகோள் ; சிறை . |
உபகிரமணிகை | முகவுரை ; பாயிரம் . |
உபகிரமம் | தொடக்கம் : முயற்சி செய்தல் ; ஆராய்ந்து தெளிதல் ; அணுகுதல் ; விக்கிரமம் . |
உபகிருதம் | உதவி . |
உபகிருதன் | உதவி செய்யப் பெற்றவன் ; தானாகவே ஒருவனிடம் தத்துப் புகுந்தவன் . |
உபகிருதி | காண்க : உபகிருதம் . |
உபகுஞ்சிகை | கருஞ்சீரகம் ; ஏலம் . |
உபகுல்லம் | சுக்கு . |
உபகுல்லியை | திப்பிலி ; அகழி ; கிளை வாய்க்கால் . |
உபசங்காரம் | முடிவு ; அழிவு ; ஒடுக்கம் ; சுருக்கம் ; மீட்டுக்கொள்ளுதல் ; விலக்குதல் ; அத்திரத்தைத் தடுக்கும் மந்திரம் . |
உபசத்தி | ஒன்றாந்தன்மை , ஐக்கியம் ; உதவி ; ஈகை ; ஊழியம் . |
உபசந்தி | சந்தி வேளைக்குச் சற்று முந்தின காலம் . |
உபசம்மாரம் | காண்க : உபசங்காரம் . |
உபசமனம் | அமைதி . |
உபசமித்தல் | உபசாந்தமடைதல் . |
உபசயசரீரம் | பருவுடல் . |
உபசர்க்கம் | காண்க : உபசருக்கம் ; நோய்வகை ; துன்பம் . |
உபசரணை | உபசாரம் ; வழிபாடு . |
உபசரித்தல் | வழிபாடு செய்தல் ; மரியாதை செய்தல் . |
உபசருக்கம் | வடமொழி முதனிலையடை ; ஆரிய மொழிகளின் அடையுருபு , பெயர் வினைகளுக்கு முன்வரும் இடைச்சொல் . |
உபசல்லியம் | ஊரின் அண்மை ; புலைச்சேரி , பறையர் சேரி . |
உபசாகை | கிளையிலுள்ள கிளை , சிறு கிளை : உட்பிரிவு . |
உபசாந்தம் | மனவமைதி ; தணிகை ; ஓய்வு ; அருள் . |
உபசாந்தி | மனவமைதி ; தணிகை ; ஓய்வு ; அருள் . |
உபசாபம் | வேறுபாடு ; துரோகம் ; ஒற்றுமையின்மை . |
உபசாரக்கை | இரண்டு கைகளையுங் குவித்து மார்போடணைத்து உபசாரமாகக் காட்டும் இணைக்கைவகை . |
உபசாரகன் | மரியாதை செய்வோன் . |
உபசாரஞ் சொல்லுதல் | முகமன் கூறுதல் ; துக்கம் விசாரித்தல் . |
உபசாரபத்திரம் | ஒருவரைப் போற்றிப் படித்துக் கொடுக்கும் பாராட்டு இதழ் . |
உபசாரம் | மரியாதை ; புகழ்மொழி ; வாழ்த்து ; உபசார வழக்கு ; ஊழியம் ; வழிபாடு ; காண்க : உபசாரவழக்கு ; போற்றுகை ; உதவி ; சேவை ; காணிக்கை . |
உபசாரம்கேட்டல் | துக்கம் வினாவல் . |
உபசாரவசனம் | புகழ்மொழி . |
உபசாரவழக்கு | ஒன்றன் தன்மையை மற்றொன்றன்மேல் ஏற்றிக் கூறுவது . |
உபசாரன் | காண்க : உபசாரகன் . |
உபசாரி | காண்க : உபசாரகன் . |
உபசாரிகம் | காண்க : உபசாரவழக்கு . |
உபசீவனம் | பிறரைக் சார்ந்து வாழ்கை ; வாழ்க்கைக்குரிய பொருள் . |
உபசீவித்தல் | உயிர் பிழைத்தல் ; பிறரையோ பிறிதொன்றையோ சார்ந்திருத்தல் . |
உபசுருதி | இரவிலே கேட்கும் வானொலி . |
உபத்தம் | பிறப்புறுப்பு ; பெண்குறி . |
உபத்தாயம் | உபாயம் ; தவறு ; துன்பம் . |
உபத்தானம் | சந்தியாவந்தன முடிவில் செய்யும் மந்திரத் துதி . |
உபத்திரம் | இடுக்கண் , துன்பம் , வேதனை ; கொடுமை ; தொந்தரவு ; வருத்தம் ; வலுக்கட்டாயம் . |
உபத்திரவம் | இடுக்கண் , துன்பம் , வேதனை ; கொடுமை ; தொந்தரவு ; வருத்தம் ; வலுக்கட்டாயம் . |
உபதாது | பொன் முதலிய உலோகங்களைப் போலப் தோற்றமளிக்கும் தாழ்ந்த ஏழு உலோகங்கள் : சுவர்ணமாட்சிகம் : தாரமாட்சிகம் , துத்தம் , காஞ்சியம் , ரீதி , சிந்தூரம் , சிலாசத்து . |
உப்புமண் | உவர்மண் ; உவர்நிலம் . |
உப்புமா | ஒருவகைச் சிற்றுண்டி ; உடம்பில் பூக்கும் உப்பு . |
உப்புமாறுதல் | உப்பு விற்றல் ; வஞ்சித்தல் . |
உப்புவாடி | உப்புக் கொட்டும் மேடை . |
உப்பேறி | ஒருவகைக் கறி ; பொரியல்வகை . |
உப | ஒரு வடமொழி முன்னொட்டு ; இரண்டு . |
உபக்கிரமணம் | தொடக்கம் ; அணுகுகை ; முயலுகை . |
உபகதை | கிளைக்கதை ; சிறிய கதை ; கட்டுக்கதை . |
உபகமம் | ஏற்பு ; அணுகுகை . |
உபகரணம் | துணைக்கருவி ; துணைப்பொருள் ; துணைக்காரணம் . |
உபகரித்தல் | உதவுதல் . |
![]() |
![]() |
![]() |