சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| உபாசகை | பௌத்தருள் இல்லறத்தாள் . |
| உபாசங்கம் | காண்க : அம்பறாத்தணி . |
| உபாசனம் | ஆராதனை வழிபாடு ; வில்வித்தை . |
| உபாசனை | ஆராதனை வழிபாடு ; வில்வித்தை . |
| உபாசி | தெய்வ வழிபாட்டால் அருள் பெற்றவன் . |
| உபாசித்தல் | வழிபடுதல் . |
| உபாஞ்சு | ஏகாந்தம் ; இரகசியம் ; மந்தமாகச் செபித்தல் . |
| உபாத்தி | ஆசிரியன் , கற்பிப்போன் , புரோகிதன் . |
| உபயமாதம் | உபய ராசிக்கு உரிய மாதம் ; அவை : ஆனி , புரட்டாசி , மார்கழி , பங்குனி . |
| உபயர் | இருவர் . |
| உபயராசி | இயக்கம் , நிலை என்னும் இருவகைக்கும் ஏற்ற இராசி ; அவை : மிதுனம் , கன்னி , தனுசு , மீனம் . |
| உபயவாதிகள் | இருபுறத்தாரையுஞ் சார்ந்து நிற்போர் ; வாதஞ்செய்யும் இருதிறத்தார் , வாதிபிரதிவாதிகள் ; தருக்கவாதம் செய்யும் இருதிறத்தார் . |
| உபயவிபூதி | ல¦லாவிபூதி நித்திய விபூதிகள் ; முடிவிலின்ப முத்தி உலகு ; உலகியலின்ப முடைய நிலவுலகு . |
| உபயவேதாந்தம் | வடமொழி , தென்மொழி வேதங்களின் முடிவு . |
| உபயவோசை | ஈரடுக்கு ஒலி . |
| உபயாத்தம் | இரு பொருள் . |
| உபயார்த்தம் | இரு பொருள் . |
| உபயோகம் | உதவி ; உதவிப்பொருள் ; பயன் ; இலக்கினத்திலும் 2 ,3 ,4 ஆம் இடங்களிலும் ஏழு கோள்களும் நிற்பதாகிய ஒரு யோகம் . |
| உபயோகி | பயனுடையது ; பயனுடையவன் . |
| உபயோகித்தல் | காரியத்திற்கு ஏற்பித்தல் ; பயன்படுத்துதல் . |
| உபரசம் | இழிந்த தாது ; கல்லுப்பு . |
| உபரசன் | தம்பி . |
| உபரதம் | வெடியுப்பு . |
| உபரதி | வெறுத்துத் தள்ளுதல் ; குடும்பப் பற்றின்மை ; செயலொழிகை ; பற்றொழிகை ; இறுதி . |
| உபராகம் | கிரகணம் ; இராகு ; நிந்தை . |
| உபராசன் | இளவரசன் . |
| உபரி | மேல் ; அதிகம் ; ஒரு மீன் ; காண்க : உபரிசுரதம் . |
| உபரிகை | காண்க : உப்பரிகை . |
| உபரிசரர் | மேலே திரிவோர் . |
| உபரிசுரதம் | புணர்ச்சிவகை , ஆண் கீழும் பெண் மேலுமாகப் புணர்தல் . |
| உபலக்கணம் | ஒரு சொல் ஒழிந்த தன்னினத்தையுந் தழுவல் ; இலட்சியத்தைப் பக்கவுதவியைக் கொண்டு உணர்த்தும் இலட்சணம் . |
| உபலட்சணம் | ஒரு சொல் ஒழிந்த தன்னினத்தையுந் தழுவல் ; இலட்சியத்தைப் பக்கவுதவியைக் கொண்டு உணர்த்தும் இலட்சணம் . |
| உபலம் | கல் ; சிறுகல் ; பளிங்கு ; |
| உபலம்பம் | தோற்றுகை . |
| உபலாலனை | கொண்டாடுகை . |
| உபலாளனம் | உபலாலனை ; தூய்தாக்குகை . |
| உபலேபனம் | சாணியால் மெழுகுகை . |
| உபலோத்திரம் | விளாம்பிசின் . |
| உபவசித்தல் | பட்டினியிருத்தல் . |
| உபவம் | சீந்திற்கொடி . |
| உபவனம் | நந்தவனம் , பூங்கா , ஊர்சூழ் சோலை ; காஞ்சொறி . |
| உபவாசம் | உண்ணாநோன்பு ; உணவொழிக்கை ; உணவின்றி இருத்தல் . |
| உபவாசி | பட்டினி நோன்பு இருப்பவன் . |
| உபவீதம் | பூணூல் ; இடத்தோளிலிருந்து வலப்பக்கமாய்ப் பூணூல் அணிகை . |
| உபவேட்டனம் | கூத்தின் அங்கக் கிரியைகளுள் ஒன்று . |
| உபவேட்டிதம் | கைவட்டணை நான்கனுள் ஒன்று , அபிநயவகை . |
| உபவேதம் | அப்பிரதான வேதம் ; நான்கு வேதங்களை அடுத்து மதிக்கப்பெறும் ஆயுர்வேதம் முதலிய நான்கு வேதங்கள் ; அவை : ஆயுர்வேதம் , தனுர்வேதம் , காந்தர்வவேதம் , அர்த்தவேதம் . |
| உபாக்கியானம் | கதை சொல்லுகை ; முற்காலத்திலே நிகழ்ந்ததை அறிவிக்கும் கதை ; கிளைக்கதை ; இதிகாசம் . |
| உபாகமம் | மூல ஆகமங்களின்வழித் தோன்றிய சைவ ஆகமங்கள் ; சார்பாகமம் , பழைய ஏற்பாட்டில் ஐந்தாவது புத்தகம் . |
| உபாகிதம் | உற்கை ; எரிகொள்ளி ; நெருப்பினால் வரும் அழிவு . |
| உபாங்கதாளம் | தாளவகை . |
| உபாங்கம் | சார்புறுப்பு ; வேதாகமங்களுக்கு அங்கமாகிய நூல்கள் ; மார்க்கத்துக்குரிய குறி ; ஒருவகைத் தோற்கருவி ; பக்க வாத்தியம் ; உபாங்க தாளம் . |
| உபாங்கராகம் | ஒரு பண்வகை . |
| உபாசகன் | உபாசனை செய்வோன் ; தெய்வ வழிபாடு உடையவன் ; பௌத்தருள் இல்லறத்தான் . |
| உபநிடதம் | வேத நுட்பம் , வேதத்தின் ஞான காண்டம் ; வேதம் ; தருமம் ; மறைபொருள் . |
| உபநிடம் | வேத நுட்பம் , வேதத்தின் ஞான காண்டம் ; வேதம் ; தருமம் ; மறைபொருள் . |
| உபநிதி | தக்கவனிடத்தில் முத்திரையிட்டு அடைக்கலமாக வைக்கும் பொருள் . |
| உபநியாசம் | சொற்பொழிவு ; சொல்லத் தொடங்கல் ; முகவுரை . |
| உபபத்தி | சொல்லும் பொருளை நிறுவக்காட்டும் சான்று ; எடுத்துக்காட்டு ; சாதனம் ; ஏது ; செய்கை ; சேவகம் ; நியாயம் ; சொத்து . |
| உபபதி | இரண்டாம் அதிகாரி ; சோர நாயகன் . |
| உபபலம் | துணைவலி . |
| உபபாதகம் | சிறுபாதகம் . |
| உபபிரமா | பத்துப் பிரமருள் ஒருவர் , தக்கன் . |
| உபபுராணம் | அப்பிரதான புராணம் ; பதினெண் புராணங்களிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்ட பதினெண் சார்பு புராணங்கள் ; மகாபுராணங்களுக்கு அடுத்து வைத்து எண்ணப்படும் சிறு புராணங்கள் 18 . |
| உபபுராணம் 18 | நாரசிங்கம் , சனற்குமாரம் , நாரதீயம் , சிவதன்மம் , துருவாசம் , நந்திகேச்சுரம் , அவுசனம் , காளிகம் , வாருணம் , சாம்பேசம் , பராசரம் , பார்க்கவம் , காபிலம் , வாசிட்டலைங்கம் , சவுரம் , மாரிசம் , ஆங்கிரம் , மானவம் . |
| உபம் | இரண்டு . |
| உபமலம் | மனமாசு . |
| உபமானம் | உவமை , உவமிக்கும் பொருள் ; ஓர் அளவை ; யாதேனும் ஒரு பொருளுக்கு ஒப்புமை கூறுதல் . |
| உபமானரகிதம் | உவமையற்றது ; ஒப்பில்லாதது . |
| உபமிதி | உபமானம் பிரமாணத்தினால் வரும் அறிவு . |
| உபமேயம் | உவமிக்கப்படும் பொருள் , உவமானத்தால் அறிவிக்கப்படும் பொருள் . |
| உபமை | உவமை , |
| உபயகவி | இருமொழிகளில் பாப்புனைய வல்லவன் . |
| உபயகுலம் | இருமரபு ; தாய் தந்தை மரபுகள் . |
| உபயம் | இரண்டு ; கோயில் முதலியவற்றிற்குச் செய்யும் தருமம் ; கோயிற்காணிக்கை ; உதவி ; பழைய சுவர்ணாதாயவகை . |
|
|
|