சொல்
|
அருஞ்சொற்பொருள் |
உமம் | கப்பற் சரக்குகளை இறக்குமிடம் , நகரம் . |
உமர் | உம்மவர் ; குதிர் ; இகழ்ச்சிச்சொல் . |
உமரி | ஒரு பூண்டு ; பவளப் பூண்டு ; நத்தை . |
உமரிக்காசு | பலகறை ; தூரி . |
உமரிக்கீரை | கோழிப்பசளை . |
உமல் | ஓலைப் பை , மீன் பிடிக்கிறவர்களின் ஓலைப் பை . |
உமலகம் | அரிதாரம் . |
உமற்கடம் | தருப்பைப் புல் . |
உமா | குன்றிக்கொடி . |
உமாகடம் | சணற்கொத்து . |
உமாதசி | சணல் . |
உமாபட்சி | ஒருவகைப் பறவை . |
உமாபதி | சிவன் . |
உமாமகேசன் | உமையோடு கூடிவிளங்கும் ஈசனாகிய சிவன் . |
உமாமகேசுவரன் | உமையோடு கூடிவிளங்கும் ஈசனாகிய சிவன் . |
உமி | தவசங்களின் மேல்தோல் . |
உமிக்கரப்பான் | குழந்தைகட்கு வருஞ் சிரங்கு . |
உமிக்கரி | உமி எரிந்ததனாலாகிய கரி . |
உமிக்காந்தல் | உமியினால் உண்டாகும் தழல் , உமி எரிந்த துகள் . |
உமிக்கூர் | உமிமூக்கு . |
உமிச்சிரங்கு | சிறுசிரங்கு . |
உமித்தல் | பதராதல் ; சாரமறுத்தல் ; கொப்புளங் கொள்ளுதல் ; அழிதல் . |
உமித்தேக்கு | பெருங்குமிழ் . |
உமிதல் | கொப்புளித்து உமிழ்தல் ; துப்புதல் ; உறிஞ்சுதல் . |
உமிநகம் | மெல்லிய நகம் . |
உமியல் | வசம்பு . |
உமிரி | உமரிப் பூண்டு , உமரிச் செடி ; நத்தை . |
உமிவு | உமிழ்நீர் ; துப்புகை . |
உமிழ்தல் | கொப்புளித்தல் ; துப்புதல் ; கக்கல் ; சத்திபண்ணுதல் ; வெளிப்படுத்துதல் ; சொரிதல் ; தெவிட்டுதல் ; காறுதல் . |
உமிழ்நீர் | வாயில் ஊறும் நீர் ; துப்பல் . |
உமிழ்வு | உமிழப்படுவது ; துப்புகை . |
உமேசன் | சிவன் . |
உமேதுவார் | சம்பளமின்றி வேலை பழகுவோன் ; விண்ணப்பதாரன் . |
உமை | பார்வதி ; மஞ்சள் ; புகழ் ; காந்தி ; நெல்வகை ; சணல் . |
உபாத்தியாயன் | ஆசிரியன் , கற்பிப்போன் , புரோகிதன் . |
உபாத்தியாயினி | ஆசிரியை , கற்பிப்பவள் . |
உபாதாயம் | பற்றப்படுவது . |
உபாதாயவுரு | வலி , இரதம் , வன்னம் , சந்தம் என்னும் நால்வகைப்பட்ட உருவவகை |
உபாதானகாரணம் | முதற்காரணம் . |
உபாதானம் | முதற்காரணம் ; அரிசிப்பிச்சை ; அன்னதானம் ; ஐம்புலனடக்குகை ; பற்று . |
உபாதி | கடமை ; வேதனை ; வாதை ; நோய் ; இடையூறு ; வருத்தம் ; தடை ; பாதை . |
உபாதேயம் | ஏற்றுக்கொள்ளத்தக்கது . |
உபாந்தியம் | கடைக்கண் ; ஈற்றயல் ; அண்மை . |
உபாம்சு | ஏகாந்தம் ; மந்தமாகச் செபித்தல் ; தனது செவி கேட்க வாய்க்குட் செபிக்கை . |
உபாயம் | வழி ; சூழ்ச்சி ; சொற்பம் ; அரசர்க்குரிய உபாயம் . அவை : இன்சொற் கூறல் , வேறுபடுத்தல் , ஈதல் , ஒறுத்தல் (சாமம் , பேதம் , தானம் , தண்டம் ) முறைகளால் செயல் முடித்தல் . |
உபாயி | சூழ்ச்சியுள்ளவன் . |
உபாலம்பனம் | இகழ்தல் , நிந்திக்கை . |
உபானம் | கோபுரத்தின் அடிச் சித்திர வரிசை ; மிதியடி . |
உபானவரி | கோபுரத்தின் அடிச் சித்திர வரிசை ; மிதியடி . |
உபுக்குதல் | பெருகுதல் . |
உபேட்சித்தல் | பொருட்படுத்தாமை ; வெறுத்துவிடுதல் ; கைவிடல் . |
உபேட்சை | புறக்கணிப்பு ; அசட்டை ; அருவருப்பு . |
உபேந்திரன் | இந்திரனுக்குத் தம்பி ,திருமால் . |
உபோதம் | பேய்ப்பசளைக்கீரை , பேய்ப்பசளை . |
உபோற்காதம் | தொடக்கம் , ஆரம்பம் ; பாயிரம் ; நூன்முகம் . |
உம் | ஓரிடைச்சொல் , அசைநிலை ; விகுதி . |
உம்கொட்டுதல் | உடன்படல் ; ஒப்புக்கொள்ளல் ; ' உம் 'மொலி எழுப்பிப் பிறர் கூறுவதைக் கேட்டல் . |
உம்பர் | மேலிடம் ; வானம் ; தேவர் ; வானோர் ; தேவலோகம் ; உயர்ச்சி ; பார்ப்பார் . |
உம்பரான் | உயர்ந்தோன் ; உயர்நிலையிருப்பவன் ; காமதேனு . |
உம்பல் | வழித்தோன்றல் ; குலம் ; குடி ; ஆண்விலங்கு ; யானை ; எழுச்சி ; ஆணாடு ; வலிமை ; புதல்வன் ; முறைமை . |
உம்பளம் | உப்பளம் ; மன்னனால் கிடைத்த பொருள் ; உதவி ; கொடை ; முற்றூட்டு ; மானியநிலம் . |
உம்பன் | உயர்ந்தோன் ; கடவுள் . |
உம்பி | உன் தம்பி . |
உம்பிடிக்கோல் | நில அளவுகோல்வகை . |
உம்பிளிக்கை | மானியம் , அரசனாற் கொடுக்கப்பட்ட இறையிலி நிலம் ; இலவசப் பொருள் . |
உம்மச்சு | கம்பியிழுக்கும் சட்டம் . |
உம்மாண்டி | பூச்சாண்டி ; வெருட்டுஞ்சொல் . |
உம்மெனல் | சம்மதத்தைக் காட்டும் ஒலிக்குறிப்பு ; சினக்குறிப்பு ; ஓர் அனுகரண ஓசை . |
உம்மை | ' உம் ' என்னும் இடைச்சொல் ; முற்பிறப்பு ; வருபிறப்பு ; உங்களை ; மறுமை . |
உம்மைத்தொகை | ' உம் ' என்னும் இடைச்சொல் தொக்குவருந் தொடர் . |
உமட்டியர் | நுளைச்சியர் , உப்பு விற்கும் மகளிர் , உமணச் சாதிப் பெண்மக்கள் . |
உமண் | உமணர் , உப்பு விளைக்கும் சாதியர் . |
உமண்பகடு | உப்பு வாணிகரது மூட்டை சுமந்து செல்லும் எருது . |
உமணத்தி | உமணப்பெண் , உப்பு விற்கும் மகள் . |
உமணன் | உப்பமைப்போன் , உப்பு விற்கும் ஆடவன் , உப்பு வாணிகன் . |
![]() |
![]() |
![]() |