உயிர்தருமருந்து முதல் - உரவன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
உயிருதவி கேட்டில் உதவுகை , பெருந்துன்பமடைந்தபொழுது செய்யும் உதவி ; உயிர் கொடுத்து உதவுகை .
உயிரெடுத்தல் உயிரை வாங்கிவிடுதல் ; துன்புறுத்துதல் .
உயிரெழுத்து உயிர்போல் தனித்து இயங்கக் கூடிய எழுத்து ; 'அ ' முதல் ' ஔ ' வரை ஈறான 12 உயிரெழுத்துகள் .
உயிரைவாங்குதல் கொலை செய்தல் ; துன்பப்படுத்தல் .
உயிரொடுங்குதல் உயிராற்றல் குறைதல் ; சாதல் .
உயில் சாவு முறி ; மரண சாசனம் .
உயிறு இலாமிச்சம்புல் .
உரககேதனன் பாம்புக் கொடியையுடையவனாகிய துரியோதனன் .
உரககேது பாம்புக் கொடியையுடையவனாகிய துரியோதனன் .
உரகடல் கொந்தளிக்கும் கடல் .
உரகதம் பாம்பு .
உரகம் பாம்பு ; நாகமல்லிகை .
உரகமல்லி நாகமல்லிகை .
உரகர் நாகர் ; நாக சாதியார் ; சமணர் .
உரகவல்லி வெற்றிலைக்கொடி .
உரகன் பாம்பு ; ஆதிசேடன் .
உரகாதிபன் ஆதிசேடன் .
உரகாரி கருடன் ; மயில் .
உரகேந்திரன் காண்க : உரகாதிபன் .
உரங்காட்டுதல் அன்பு பாராட்டல் ; வலிகாட்டல் .
உரங்குத்துதல் மரத்தைச் சுற்றி மண் கெட்டித்தல் .
உரங்கொள்ளுதல் கெட்டியாதல் , பலமாதல் , மிகுதல் , கடினமாதல் .
உரசுதல் உராய்தல் , தேய்த்தல் , துடைத்தல் .
உரஞ்சுதல் உராய்தல் , தேய்த்தல் , துடைத்தல் .
உரஞ்செய்தல் உறுதிகொள்ளுதல் ; வலியுறுதல் .
உரஞ்சொல்லுதல் உறுதி கூறுதல் .
உரண்டம் காகம் .
உரண்டை காகம் .
உரணம் ஆட்டுக்கடா ; முகில் .
உரத்தல் இறுகுதல் , பலத்தல் , வலியுறல் , கொந்தளித்தல் , மிகுதல் , முருடாதல் , கடுமையாதல் , எடுப்பாதல் .
உரப்பம் பெருங்காயம் .
உரப்பல் உரப்புதல் ; சத்தமிட்டு அதட்டுதல் , அடரொலி ; திரட்டோசை .
உரப்பித்தல் பலமுறச் செய்தல் .
உரப்பியடித்தல் பேச்சால் வெல்லுதல் .
உரப்பிரம் வெள்ளாடு .
உரப்பு பேரொலி ; அதட்டு ; கடினம் ; முருடு ; வலி ; மனத்திண்மை .
உரபடி உரப்பு , திடம் .
உரபிடி உரப்பு , திடம் .
உரம் வலிமை ; திண்மை ; திடம் ; மரவயிரம் ; எரு ; மார்பு ; அறிவு ; ஊக்கம் ; படைவகுப்பின் முன்னணி ; குழந்தைகளுக்கு விழும் சுளுக்கு வகை ; மதில் ; உள்ளத்தின் மிகுதித் தன்மை ; விரைவு .
உரம்போடுதல் எருப்போடுதல் ; பலப்படுத்தல் ; திடப்படுத்தல் .
உரம்விழுதல் கைக்குழந்தை தரையில் புரளுவதனால் உண்டாகும் ஒரு பிடிப்புநோய் ; கவனமின்றிக் குழந்தையைத் தூக்குவதால் குழந்தைக்கு உண்டாகும் சுளுக்கு .
உரமடித்தல் பயிரிடும் நிலத்திற்கு வேண்டும் உரங்களைக் கொண்டுசேர்த்தல் .
உரமெடுத்தல் குழந்தையின் சுளுக்கைப் போக்குதல் .
உரல் நெல் முதலியன குற்றும் உரல் ; இடிப்பதற்குரிய கருவி ; இடியப்பம் , தேன்குழல் முதலிய பணிகாரம் பிழியும் அச்சு .
உரலடி யானை .
உரலாணி உரலின் அடிக்கிடும் மரவாணி , உரலின் அடிக்கிடும் மரத்துண்டு ; உலக்கை .
உரவக்காடு மலைப்பயிர் .
உரவம் வலிமை ; அறிவு .
உரவர் வலியுடையோர் ; அறிவுடையோர் ; சமணர் .
உரவன் வலியோன் ; அறிஞன் ; அருகன் .
உயிர்தருமருந்து இறப்பைப் போக்கும் மருந்து .
உயிர்நிலை உடல் , உயிர்தங்கும் இடம் ; உயிரின் உண்மை வடிவம் ; பிராணாயாமம் , உட்கருத்து .
உயிர்ப்பலி உயிர்களைத் தெய்வங்களின் பொருட்டுப் பலிகொடுக்கை ; சீவபலி ; வீரன் தன் தலையைக் கொற்றவைக்கு கொடுக்கும் பலி ; உயிர்ப்பிச்சை .
உயிர்ப்பழி உயிர்க் கொலை ; உயிர்க் கொலை செய்த குற்றம் ; கொலை செய்தவனைத் தொடரும் பழி , பிரமகத்தி .
உயிர்ப்பனவு உயிரின் தன்மை ; செழிப்பு ; பச்சென்றிருக்கும் தன்மை .
உயிர்ப்பாங்கி விட்டு நீங்காத தோழி ; அணுக்கமாகப் பழகும் தோழி .
உயிர்ப்பித்தல் பிழைப்பித்தல் .
உயிர்ப்பு உயிர்த்தெழுதல் ; புதுவன்மையடைதல் ; தெய்வத்திருமேனியினுள் தெய்வ ஆற்றலை வருவிக்கை ; மூச்சு ; காற்று ; நறுமணம் ; இளைப்பாறுகை .
உயிர்ப்புவீங்குதல் நெட்டுயிர்ப்பு ; பெருமூச்சு விடுதல் .
உயிர்ப்புனல் குருதி , இரத்தம் .
உயிர்ப்பொறை உடம்பு .
உயிர்மருந்து சோறு , உணவு .
உயிர்மெய் ஒற்று முன்னும் உயிர் பின்னுமாய் இணைந்து ஒலிக்கும் எழுத்து . 'க' முதல் 'னௌ' ஈறான 216 எழுத்து .
உயிர்வாழ்க்கை உயிரோடு கூடிவாழும் வாழ்க்கை , சீவனம் .
உயிர்வாழ்தல் உயிரோடு கூடியிருத்தல் , சீவித்தல் .
உயிர்விடுதல் ஒருவருக்காகவோ ஒரு நற்செயலுக்காகவோ ஒருவன் தன் உயிரைத் தானே விடுதல் ; மிகப் பாடுபடுதல் .
உயிர்விளக்கம் ஆன்ம வடிவத்தை அறிகை .
உயிர்வேதனை உயிருக்குத் துன்பம் விளைவிப்பவை ; அவை பன்னிரண்டு ஏதுக்களால் நேரும் ; அனல் , குளிர்ச்சி , இடி , புனல் , காற்று , ஆயுதம் , நஞ்சு , நச்சுமருந்து , பசி , நீர்வேட்கை , பிணி , முனிவு அறாமை .
உயிர்வைத்தல் இறத்தல்
உயிரடங்குதல் மூச்சு ஒடுங்குதல் ; இறத்தல்
உயிரவை உயிர்த் தொகுதி ; உயிர்களின் கூட்டம்
உயிரளபு தனக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கும் நெட்டுயிரெழுத்து .
உயிரளபெடை தனக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கும் நெட்டுயிரெழுத்து .
உயிரிலங்கி உயிர்த் தீ .
உயிருண்ணுதல் உயிரைப் போக்குதல் ; பரவசப்படுதல் .