உல்குசெய்தல் முதல் - உலகியல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
உலகநாதன் உலகத் தலைவன் ; அரசன் ; கடவுள் ; பிரமன் .
உலகநீதி உலகநடை ; நன்னெறி ; இயல்பான நீதி , நாட்டியற்கை நீதி ; ஓர் அறநூல் .
உலகநூல் உலக வாழ்க்கைக்கு உகந்த வழிகாட்டி நூல் ; அறிவு நூல் .
உலகநோன்பிகள் துறவாது விரதம் காப்போர் ; சமண பௌத்தருள் இல்லறத்தார் .
உலகநோன்பு துறவாது விரதங்காத்தல் .
உலகப்பற்று உலகப் பொருள்களில் கொண்டுள்ள ஆசை ; உலகியல் நிகழ்ச்சுகளில் வைக்கும் பேரீடுபாடு .
உலகப்பிரசித்தி உலகமெங்கும் பரந்த புகழ் .
உலகப்புரட்டன் மிகு புரளிக்காரன் ; பெருமோசக்காரன் .
உலகபத்ததி உலக நடைமுறை ; உலகத்தார் ஒழுகும் வழி .
உலகபாலர் உலோக பாலர் , திக்குப்பாலகராகிய தேவர் , எட்டுத்திக்கிலும் நின்று உலகைப் புரப்போர் ; இந்திரன் , அக்கினி , யமன் , நிருதி , வருணன் , வாயு , குபேரன் , ஈசானன் என்னும் எண்மர் ; அரசர் .
உலகம் உலகு , உலகப்பொது , பூமி ; நிலப்பகுதி ; உலகுயிர்கள் ; திக்கு ; மக்கள்தொகுதி ; உலகிலுள்ள உயர்ந்தோர் ஒழுக்கம் ; உயர்ந்தோர் ; உயர்குணம் ; வானம்
உலகமரியாதை உலக வழக்கம்
உலகமலையாமை நூலுக்குரிய பத்து அழகினுள் ஒன்று , உயர்ந்தோர் வழக்கத்தோடு மாறுபடாமை
உலகமலைவு நூற்குற்றங்களுள் ஒன்று , உலக ஒழுகலாற்றோடு இசையாமையாகிய குற்றம் ; உலகத்து ஒழுகலாற்றோடு மாறுபட்ட ஒழுக்கம் நிகழ்ந்ததாகக் கூறுதல்
உலகமளந்தான் வாமனாவதாரத்தில் தன்காலால் உலகை அளந்த திருமால்
உலகமாதா உலகத்தின் தாய் ; கலைமகள் ; அலைமகள் ; மலைமகள் ; செம்மணித்தக்காளி
உலகமீன்றாள் பார்வதி
உலகமுண்டோன் ஊழியிறுதியில் உலகை விழுங்கித் தன் வயிற்றில் அடக்கிய திருமால்
உலகர் உலகத்தார் ; பாண்டியர்
உலகவழக்கம் உலக நடைமுறை ; உலகத்தார் ஒழுக்கம்
உலகவழக்கு உலகவழக்கம் ; உலகத்தார் வழங்குவது ; உலக வழக்குச் சொல்
உலகவறவி எல்லா இனத்தாரும் வந்து தங்குவதற்குரிய அறச்சாலை
உலகவறிவு உலகியல் வழக்கம் பற்றிய அறிவு , இலௌகிக அறிவு
உலகவாதம் மரபுவழி வழக்கு
உலகவிடைகழி ஊர்வாயில் ; நகரத்தின் பெருவாயில்
உலகவிருத்தம் உலக வழக்கோடு மாறுபடுகை
உலகவேடணை உலக ஆசை , ஏடணாத்திரயத்தொன்று
உலகளந்தான் காண்க : உலகமளந்தான்
உலகாசாரம் உலக வழக்கம் , உலகவொழுக்கம்
உலகாயதம் உலோகாயத மதம் , கடவுளில்லை என்னும் சமயம் ; உலகவின்பமே மேலானது என்னும் காட்சி வாதம்
உலகாயதன் உலோகயாத சமயத்தோன்
உலகிகம் காண்க : உலகியல்
உலகிதன் காண்க : உலகாயதன் .
உலகியல் உலகநடை ; உலகவழக்கம் ; உலகியற்கை .
உல்குசெய்தல் சுங்கம் கொள்ளுதல் , சுங்கம் வாங்குதல் .
உல்குபொருள் சுங்கப்பொருள் , மரக்கலம் வண்டி முதலியவற்றில் வரும் பண்டங்களுக்கு வாங்கும் இறைப்பொருள் .
உல்லங்கணம் கடக்கை , மீறுகை , அவமதிப்பு , நிந்தை .
உல்லடைப்பு மரத்தால் ஆற்றிற்கிடும் அணை
உல்லம் கடல்மீன்வகை .
உல்லரி தளிர் .
உல்லாகன் திறமையுள்ளவன் ; நோயுற்று நீங்கியவன் .
உல்லாசக்காரன் மகிழ்ச்சிமேல் நாட்டமுடையோன் ; பகட்டுக்காரன் .
உல்லாசத்தலம் மாளிகைகளில் மகிழ்வுடன் பொழுதுபோக்குவதற்குரிய இடம் .
உல்லாசப்படுத்துதல் களிக்கச்செய்தல் ; உபசரித்தல் .
உல்லாசப்பயணம் இன்பச்செலவு .
உல்லாசப்பேச்சு விநோதப் பேச்சு , வேடிக்கைப் பேச்சு .
உல்லாசம் உள்ளக்களிப்பு ; மனமகிழ்ச்சி ; சரசக்களிப்பு ; மேலாடை .
உல்லாசன் காண்க : உல்லாசக்காரன் .
உல்லாடி மெலிந்த ஆள் .
உல்லாபம் நிரம்பா மென்மொழி ; நலிந்த மொழி ; மழலைச் சொல் ; மேற்கட்டி .
உல்லாபன் நோய்நீங்கி நலம்பெற்று வருபவன் .
உல்லி ஒல்லி ; மெலிந்த ஆள் ; மெல்லியது ; வெங்காயப்பூ ; மதில் .
உல்லியம் கிணறு ; இறைகிணறு .
உல்லியர் கூவநூலார் , கிணறு எடுப்பதற்கு உரிய இடம் கண்டு கூறுவார் .
உல்லு காண்க : உல் .
உல்லுகம் கொள்ளி .
உல்லேகம் உச்சரிப்பு ; பலபடப் புனைவணி , புனைந்துரை .
உல்லேற்றுதல் கழுவேற்றுதல் .
உல்லோசம் மேற்கட்டி ; கூடாரம் .
உல்லோலம் கடலலை ; பேரலை ; கூத்தின் உறுப்புச் செயல்களுள் ஒன்று .
உலக்கை உரோங்கல் ; தவசம் முதலியன குற்றும் கருவி ; ஓர் ஆயுதம் ; திருவோணம் ; கடல் ; அழிவு ; வெருகன்கிழங்கு .
உலக்கைக்கழுந்து உலக்கைப்பூண் .
உலக்கைக்கொழுந்து உலக்கை நுனி ; உலக்கை நுனிபோலக் கூர்மையற்றது ; அறிவுக் குறையுள்ளோன் .
உலக்கைத்திங்கள் உலக்கைப் பெயர்கொண்ட திருவோண மீனின் அடிப்படையில் அமைந்த ஆவணித் திங்கள் .
உலக்கைப்பாட்டு வள்ளைப்பாட்டு , தவசம் குற்றும்போது மகளிர் தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு .
உலக்கைப்பாலை பாலைமரவகை .
உலக்கைப்பிடங்கு உலக்கைக் கணை , உலக்கைப் பூண் , தேய்ந்துபோன உலக்கை நுனி .
உலக்கையாணி பூட்டின் நடுவாணி .
உலககர்த்தா உலகைப் படைத்த கடவுள் .
உலகங்காத்தாள் அவுரிச்செடி .
உலகசஞ்சாரம் உலகத்தைச் சுற்றிவருதல் ; உலக வாழ்வு .
உலகசயன் புத்தன் .
உலகஞானம் உலகத்தைப்பற்றிய அறிவு , உலகத்தின் நடைமுறை அறிவு ; கருவி நூலறிவு
உலகத்தார் உலகிலுள்ளோர் , உலக மக்கள் ; உயர்ந்தோர் ; உலகப்பற்றுடையார் .
உலகநடை உலகத்தார் ஒழுகும் ஒழுக்கம் ; அறிவுடையவர் ஒழுக்கம் ; உலக இயற்கை ; உலக வழக்கு .