உலகியல்வழக்கு முதல் - உலைக்களம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
உலுப்புதல் உதிர்த்தல்
உலுப்பை உணவுப்பண்டம் ; கோயில் முதலியவற்றிற்கு அனுப்பும் காணிக்கை ; பெரியவர்களுக்கு அனுப்பும் ஊண்பண்டம் ; அடைந்தோர்க்கு அளிக்கும் பண்டம் ; சிறுகாய் ; பண்டம் வைக்கும் பை
உலுவம் வெந்தயம்
உலுவா காண்க : உலுவம் ; பெருஞ்சீரகம் .
உலுவாவரிசி தவசவகை
உலூகம் கோட்டான் , கூகை , பேராந்தை ; ஒருவகைப் பரி ; உரல் ; குங்கிலியம்
உலூகலம் உரல் ; மரஉரல் ; குங்கிலியம் ; கல்லாலமரம்
உலூதம் எறும்பு ; சிலந்திப்பூச்சி
உலூதை எறும்பு ; சிலந்திப்பூச்சி
உலை உலைக்களம் , கொல்லனுலை ; நெருப்பு உள்ள அடுப்பு ; பாகங்செய்ய வைக்கும் நீருலை ; கம்மியர் உலை ; உலைப்பாண்டம் ; உலைதல் ; உலைச்சாலை ; அரிசியிடுவதற்கு அடுப்பில் வைக்கும் நீர் ; மனநடுக்கம்
உலை (வி) உலைஎன் ஏவல் ; அழி ; கெடு ; கலை ; வருத்து
உலைக்களம் கொல்லன் உலைக்கூடம் ; உலோகங்கள் உருக்குமிடம்
உலண்டு பட்டுநூலை உண்டாக்குங் கோற்புழு ; கோற்புழு ; பட்டு
உலத்தல் அழிதல் ; காயவைத்தல் ; கழிதல் ; நீங்குதல் ; குறைதல் ; சாதல் ; முடிவு பெறுதல்
உலப்பு அழிவு ; முடிவு ; சாவு ; குறைவு ; அளவு ; உதவுகை
உலப்பேரி திருத்தப்பட்ட நிலம்
உலபம் நெருங்கிப் படர்ந்த கொடித் திரள் ; விழற்புல்
உலம் திரண்ட கல் ; திரட்சி ; வலிமை ; துன்பம் ; பிணம் ; பட்டாடை ; வாசல் ; நீர் ; காற்று ; அகற்சி
உலம்பல் ஒலித்தல் ; பேரொலி செய்தல் ; ஆரவாரம் ; அலப்புதல்
உலம்புதல் ஒலித்தல் ; பேரொலி செய்தல் ; ஆரவாரம் ; அலப்புதல்
உலம்வருதல் நெஞ்சு உழலுதல்
உலமரல் அலமரல் , சுழற்சி ; துன்பம் ; வருத்தம் ; அச்சக்குறி காட்டுதல்
உலமருதல் காண்க : உலம்வருதல்
உலர்ச்சி காய்வு ; வாட்டம்
உலர்த்தி காய்வு ; வாட்டம்
உலர்த்து சூலை சூலைநோய்வகை
உலர்த்துதல் காயச்செய்தல் ; வாட்டல்
உலர்தல் காய்தல் ; வாடுதல் ; அழிதல்
உலர்ந்தம் தண்டு
உலர்ப்பெலி ஓர் எலிவகை
உலரி ஒலரி , சிறுமீன்வகை .
உலவம் அயலார் முன்பு மனக்கூச்சம் ; இவறல்
உலவாக்கிழி எடுக்க எடுக்கக் குறைவுபடாத பொன்முடிப்பு
உலவுதல் இயங்குதல் ; பரத்தல் ; சூழ்தல் ; பவனிவருதல் ; திரிதல்
உலாவுதல் இயங்குதல் ; பரத்தல் ; சூழ்தல் ; பவனிவருதல் ; திரிதல்
உலவை காற்று ; மரக்கொம்பு ; தழை ; விலங்கின் கொம்பு ; முல்லைநிலக் கான்யாறு ; விறகு ; வள்ளிக்கொடி ; உடைமரம் ; கிலுகிலுப்பை ; மரப்பொந்து ; மரச்செறிவு ; குடைவேல் ; ஓடை ; ஆசை
உலவையான் காற்றுக் கடவுள் , வாயுதேவன் .
உலவைராசி திப்பிலி
உலறுதல் காய்தல் ; வற்றுதல் ; சிதைதல் ; பொலிவழிதல் ; சினத்தல் ; உரை தடுமாறல் ; வருந்துதல்
உலா ஊர்வலம் , பவனி ; உலா வருவதைப்பாடும் நேரிசைக் கலிவெண்பாவாலாய ஒரு சிற்றிலக்கியவகை
உலாங்கம் உலாகுமம் , மனோசிலை
உலாங்கிலி காவட்டம்புல் ; கிலுகிலுப்பை
உலாங்கு காவட்டம்புல் ; கிலுகிலுப்பை
உலாஞ்சுதல் அசைந்தாடுதல் ; தலைசுற்றுதல்
உலாத்து உலாவுகை .
உலாத்துக்கட்டை கதவு நின்றாடும் சுழியாணி , முளையாணி , கதவின் குடுமி
உலாத்துக்கதவு பிணையல் கதவு
உலாத்துதல் உலாவுதல் ; உலாவச்செய்தல் ; பரவச்செய்தல்
உலாப்போதல் ஊர்வலம் வருதல்
உலாம் ஓர் உவமச்சொல்
உலாமடல் ஒரு சிற்றிலக்கியவகை , ஒரு பெண்ணைக் கனவில் கூடியவன் விழித்தபின் அவள் பொருட்டு மடலூர்வதாகக் கலிவெண்பாவினால் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை
உலாவருதல் சஞ்சரித்தல் ; ஊர்வலம் வருதல் ; இயங்குதல் ; ஓடிப்பரவுதல் ; சூழ்தல் ; சாரிபோதல் ; மெல்ல நடத்தல் ; அசைதல்
உலாவுதல் சஞ்சரித்தல் ; ஊர்வலம் வருதல் ; இயங்குதல் ; ஓடிப்பரவுதல் ; சூழ்தல் ; சாரிபோதல் ; மெல்ல நடத்தல் ; அசைதல்
உலிமணி நாயுருவி
உலிற்கள் வெண்கலம்
உலு தினை முதலியவற்றின் பதர்
உலுக்குதல் குலுக்குதல் ; அசைத்தல் ; நடுங்குதல் .
உலுக்குமரம் மிண்டிமரம் ; நெம்புகட்டை .
உலுங்குதல் கணீர்' என்று ஒலித்தல்
உலுத்தத்தனம் கடும்பற்றுள்ளம் , உலோபகுணம்
உலுத்தம் கடும்பற்றுள்ளம் , உலோபகுணம்
உலுத்தன் பொருளாசைக்காரன் , உலோபி ; புல்லன் ; வேடன்
உலுத்துதல் உதிர்த்தல்
உலகியல்வழக்கு உலக வழக்கம் .
உலகியற்கை காண்க : உலகியல் .
உலகியற்சொல் உலக வழக்குச்சொல் , செய்யுள் வழக்கில் இல்லாது உலக வழக்கிலே வழங்கும் சொல்
உலகு உலகம் , பூமி ; நாடு ; உலகத்தார் (இடவாகு பெயர்) , உயர்ந்தோர் , சான்றோர் ; திசை ; மங்கலச் சொற்களுள் ஒன்று
உலகுடையபெருமாள் அரசன்
உலகுரை உலக வாதம் , உலக வழக்கம் , ஐதிகம்
உலகேடணை உலகப் பொருள்களில் கொள்ளும் பற்று
உலகோர் உலகர் ; பெரியோர்
உலங்கலம் கற்பாண்டம்
உலங்காரணை அவுரிச்செடி
உலங்கு உலம் , திரண்ட கல் ; கொசு ; புழு
உலண்டம் பட்டுநூலை உண்டாக்குங் கோற்புழு ; கோற்புழு ; பட்டு