சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| உலோபன் | கடும்பற்றுள்ளன் , இவறலன் , பேராசையுள்ளவன் , பிசுனன் , ஒருவருக்கும் ஒன்றுங் கொடாதவன் |
| உலோபி | கடும்பற்றுள்ளன் , இவறலன் , பேராசையுள்ளவன் , பிசுனன் , ஒருவருக்கும் ஒன்றுங் கொடாதவன் |
| உலோமசம் | சடாமாஞ்சில் |
| உலோமம் | புறமயிர் ; வால் ; அலைகை |
| உலோலம் | அசைவு ; அலைகை ; ஆசைப்பெருக்கம் , விருப்பம் |
| உலோலிதம் | அசைவு |
| உலோலிதமுகம் | ஆழ்ந்த சிந்தையால் ஒரு தோள் மேல் சாய்ந்து நிற்குமுகம் |
| உலோவுதல் | கொடாது மறுத்தல் , உலோபத்தனம் |
| உவ் | உவை , அஃறிணைப் பன்மைப் படர்க்கைச் சுட்டுப்பெயர் |
| உவ்வி | தலை ; வரிவகை |
| உவ்வு | தவம் |
| உவ | (வி) விரும்பு ; மகிழ் , இன்பமாயிரு |
| உவக்காண் | உங்கே , உவ்விடம் ; உங்கே பார் |
| உவகுருவாணன் | இல்லறம் அடைதற்குரிய நிலையிலுள்ள பிரமசாரி |
| உவகுலம் | திப்பிலி ; திரிபலை |
| உவகை | மகிழ்ச்சி ; களிப்பு ; அன்பு ; காமம் ; இன்பச்சுவை |
| உவகைக்கலுழ்ச்சி | வாளேறுபட்டுப் புண்மிகுந்த கணவனைக் கண்டு மனைவி மகிழ்ந்து கண்ணீர் சொரியும் புறத்துறை |
| உவகைச்சொல் | முகமன் , உபசாரமொழி |
| உவகைப்பறை | மங்கலப்பறை , மகிழ்ச்சியைக் குறிக்கும் பறை . |
| உவச்சக்காணி | கோயிலில் கொட்டூழியத்திற்காக உவச்சனுக்குத் தரும் மானியம் |
| உவச்சன் | பூசாரிச் சாதியான் ; சோனகன் |
| உவட்சி | துவளுகை |
| உவட்டி | அருவருப்பு ; குமட்டுகை ; நீர்ப்பெருக்கு ; கெடு |
| உவட்டு | அருவருப்பு ; குமட்டுகை ; நீர்ப்பெருக்கு ; கெடு |
| உவட்டுதல் | அருவருத்தல் , வெறுப்புறுதல் ; தெவிட்டுதல் ; குமட்டுதல் ; புரளுதல் ; மிகுதல் |
| உவட்டெடுத்தல் | பெருக்கெடுத்தல் |
| உவண் | உவ்விடம் ; மேலிடம் |
| உவணகேதனன் | கருடக்கொடியையுடைய திருமால் |
| உவணம் | உயர்ச்சி ; உயர்வு ; கருடன் ; கழுகு ; பருந்து |
| உவணமுயர்த்தோன் | காண்க : உவணகேதனன் |
| உவணவூர்தி | கருடனை ஊர்தியாகக் கொண்ட திருமால் |
| உவணன் | கருடன் |
| உவணி | வாள் |
| உவணை | தேவருலகம் , துறக்கம் ; உவ்விடம் |
| உவத்தல் | மகிழ்தல் ; விரும்புதல் ; பிரியமாதல் ; அன்புசெய்தல் |
| உவதி | இளம்பெண் ; யுவதி , பதினாறாட்டைப் பருவத்தாள் |
| உவதை | மலையின்வீழ் பேரருவி |
| உவப்பு | மகிழ்ச்சி ; களிப்பு ; பொலிவு ; விருப்பம் ; உயரம் ; விளையாட்டு ; மேடு |
| உவமம் | உவமை , ஒரு பொருளோடு பிறிதொரு பொருளை ஒப்பிட்டுக் காணல் ; ஒப்புமை அளவை |
| உலைக்குறடு | கம்மியர் கருவியுள் ஒன்று , உலைமுகத்தில் இரும்பு எடுக்கும் இடுக்கி |
| உலைச்சல் | அலைவு ; கலக்கம் |
| உலைசல் | கெடுதல் , கேடு |
| உலைத்தண்ணீர் | காண்க : உலைநீர் |
| உலைத்தல் | அலைத்தல் ; அழித்தல் ; கெடுத்தல் ; கலைத்தல் ; முறியடித்தல் ; மனத்தைக் கலக்கல் |
| உலைத்துருத்தி | கொல்லன் உலையில் உள்ள அடுப்பு ஊதும் துருத்தி |
| உலைதல் | அலைதல் ; நிலைகுலைதல் ; அழிதல் ; கெடுதல் ; பலங்குறைதல் ; மனங்கலங்கல் ; வருந்துதல் ; அஞ்சுதல் ; கலைந்துபோதல் . |
| உலைநீர் | சோறு சமைப்பதற்குக் கொதிக்க வைக்கும் நீர் ; காய்ந்த இரும்பைத் தோய்க்கும் நீர் |
| உலைப்பு | அலைப்பு ; முறியடிக்கை ; வருத்துகை ; அழிவு |
| உலைமுகம் | கொல்லன் உலைக்கூடம் . |
| உலைமூக்கு | கொல்லன் உலையில் துருத்தி வைக்கும் தொளை |
| உலைமூடி | உலைப்பானையின் மேல்மூடி |
| உலையாணிக்கோல் | உலைமுகத் திருப்புக்கோல் , சூட்டுக்கோல் |
| உலையேற்றுதல் | உலைவைத்தல் , உலைப்பானையை அடுப்பில் வைத்தல் |
| உலைவு | அழிவு ; நடுக்கம் ; வறுமை ; கலக்கம் ; தோல்வி ; அலைவு ; ஊக்கக்குறைவு |
| உலைவைத்தல் | உலையேற்றுதல் , உலைப்பானையை அடுப்பில் வைத்தல் ; பிறனுக்குக் கேடு சூழ்தல் |
| உலோகக்கட்டி | உலோகங் கலந்த கட்டி ; பஞ்சலோகத்தையுருக்கிக் கூட்டிய கட்டி . |
| உலோகபாலர் | காண்க : உலகபாலர் |
| உலோகம் | உலகம் ; மாழை ; பஞ்சலோகம் ; பொன் முதலிய தாதுப்பொருள் ; கனிப்பொருள் |
| உலோகமணல் | இரும்புமணல் , அயமணல் |
| உலோகரூடம் | உலகவளமை |
| உலோகவாதம் | உலகுரை , ஐதிகப் பிரமாணம் |
| உலோகவிருத்தம் | உலக வழக்கிற்கு மாறுபட்டது . |
| உலோகாயதம் | பொருள்முதல் வாதக்கொள்கை |
| உலோகாயதன் | காண்க : உலகாயதன் |
| உலோகிதம் | சிவந்தது ; சந்தனம் ; சூதாட்டவகை |
| உலோகிதன் | செவ்வாய் |
| உலோச்சு | தன் தலைமயிரைத் தன் கையாற்பறிக்கை |
| உலோசம் | ஒருவகைக் காதணி ; சுட்டியணி |
| உலோசனம் | கண் |
| உலோசி | பேய்ப்பசளைப் பூண்டு |
| உலோசிதம் | சந்தனமரம் |
| உலோட்டம் | இரும்புக்கிட்டம் ; மண்கட்டி ; ஓடு |
| உலோட்டி | தொந்தரவு ; சாராயச் சாரம் |
| உலோத்திரம் | வெள்ளிலோத்திர மரம் |
| உலோபம் | இவறல் , பேராசை , கடும்பற்றுள்ளம் ; அகப்பட்ட பொருளைக் கைவிடாமை ; தானும் நுகராமல் பிறரையும் நுகரச்செய்யாமல் தடுத்தலாகிய குணம் ; ஈயாமை ; குறைவு ; கெடுதல் விகாரம் |
|
|
|