உவமவாசகம் முதல் - உழமண் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
உழக்குதல் கலக்குதல் ; மிதித்தல் ; உழுதல் ; விளையாடுதல் ; கொன்று திரிதல் ; வெல்லுதல் .
உழக்குருட்டுதல் சூதாடுதல் .
உழக்கோல் உழவுக்கம்பு , தாற்றுக்கோல் .
உழத்தல் செய்தல் ; பயிலுதல் ; பழகுதல் ; முயலுதல் ; வெல்லுதல் ; வருந்துதல் ; பட்டனுபவித்தல் ; துவைத்தல் .
உழத்தி உழவர்சாதிப் பெண் , மருதநிலப் பெண் .
உழத்திப்பாட்டு உழவுபற்றிய செய்திகளைக் கூறும் ஒருவகைச் சிற்றிலக்கியவகை .
உழப்பன் கள்ள நியாயம் பேசுகிறவன் .
உழப்பு முயற்சி , ஊக்கம் ; வருத்தம் ; பழக்கம் ; வலிமை .
உழப்புதல் மழுப்புதல் ; குழப்பிப் பேசுதல் ; போலிவாதஞ் செய்தல் ; காலங்கடத்துதல் .
உழம்புதல் பல ஒலிகள் கலந்தொலித்தல் ; குழும்புதல் .
உழமண் உவர்மண் , அழுக்கெடுக்கும் மண் .
உவர் உப்பு ; உப்புச்சுவை ; களர்நிலம் ; உழைமண் ; கடல் ; இனிமை ; உயர்திணைப் பலர்பாலில் வரும் ஒரு சுட்டுப்பெயர் .
உவர்க்கடல் உப்புநீர்க் கடல் .
உவர்க்கம் கடற்கரை .
உவர்க்களம் காண்க : உவர்நிலம் .
உவர்க்காரம் சவர்க்காரம் .
உவர்ச்சங்கம் முட்சங்குப்பூண்டு .
உவர்த்தரை காண்க : உவர்நிலம் .
உவர்த்தல் உப்புக்கரித்தல் ; துவர்த்தல் ; அருவருத்தல் ; வெறுத்தல் .
உவர்நிலம் களர்நிலம் ; உப்பளம் .
உவர்நீர் உப்புநீர் , உப்புச்சுவையுள்ள நீர் .
உவர்ப்பு உப்புச்சுவை ; துவர்ப்பு ; இகழ்ச்சி ; வெறுப்பு ; அவாவின்மை ; உயிரால் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளுள் இனி நுகரக் கிடக்கும் வினையின் பயன்கள் .
உவர்மண் உப்புச்சேர்ந்த மண் , உழைமண் ; களர்நிலம் .
உவரகம் உப்புச்சேர்ந்த மண் , உழைமண் ; களர்நிலம் .
உவராகம் மறைப்பு , கிரகணம் ; மறைப்புக் காலம் .
உவரி உவர்நீர் , உப்புநீர் ; கடல் ; சிறுநீர் .
உவருண்டான் களர்நிலத்தில் பயிரிடப்படும் ஒருவகை நெல் .
உவரோதம் உவர்க்கடல் ; இடையூறு .
உவல் தழை ; சருகு
உவலை தழை ; சருகு ; மரக்கொம்பு ; இழிவு ; துன்பம் ; வம்புச்சொல் .
உவவனம் உபவனம் , சோலை , உய்யானம் , பூந்தோட்டம் .
உவவு உவப்பு ; நிறைமதி ; மறைமதி .
உவள் உயர்திணைப் பெண்பாலில் வரும் ஒரு சுட்டுப்பெயர் ; அவளுக்கும் இவளுக்கும் இடையில் உள்ளவள் ; முன் நிற்பவள் .
உவளகம் அந்தப்புரம் ; சிறைச்சாலை ; காவற்கூடம் ; மதில் ; ஒருபக்கம் ; அகழி ; பள்ளம் ; வாயில் ; குளம் ; உப்பளம் ; இடைச்சேரி ; விரிவு ; நீர்நிலை ; பிரித்தல் .
உவளித்தல் தூய்மை செய்தல் ; துப்புரவாக்கல் .
உவளுதல் துவளுதல் ; நடுங்குதல் ; பரத்தல் .
உவற்றுதல் சுரக்கச் செயதல் .
உவறுதல் ஊறுதல் , சுரத்தல் .
உவன் உயர்திணை ஆண்பாலில் வரும் ஒரு சுட்டுப்பெயர் ; அவனுக்கும் இவனுக்கும் இடையில் உள்ளவன் ; முன் நிற்பவன் ; பின்புறத்துள்ளவன் .
உவன்றி நீர்நிலை .
உவனாயம் துவைத்துக் கட்டும் மருந்து .
உவனித்தல் அம்பெய்யத் தொடங்குதல் ; தூய்மை செய்தல் ; ஈரமாதல் .
உவனிப்பு ஈரம் .
உவா வெள்ளுவா , முழுமதிநாள் ; காருவா , அமாவாசை ; கடல் ; உகாமரம் .
உவாத்தி கற்பிப்போன் , ஆசிரியன் , உபாத்தியாயன் ; வேதமோதுவிப்போன் .
உவாத்திகன் கற்பிப்போன் , ஆசிரியன் , உபாத்தியாயன் ; வேதமோதுவிப்போன் .
உவாத்திமை கற்பிக்கும் தொழில் .
உவாத்தியாயன் காண்க : உவாத்தி .
உவாத்தியாயனி ஆசிரியை .
உவாத்து காண்க : உவாத்தி .
உவாதி எல்லை ; கடுந்துன்பம் , பெருந்துன்பம் .
உவாந்தம் காருவா , அமாவாசை ; வெள்ளுவா , பௌர்ணிமை .
உவாய் ஒரு மரம் , உவாத்தேக்கு .
உவாலம்பம் பழிப்பு , தூடணை .
உவாலம்பனம் பழிப்பு , தூடணை .
உவாவுதல் நிறைதல் .
உவாளி பூட்டை ; அறுகு .
உவித்தல் அவித்தல் .
உவிதல் சாதல் ; அவிதல் , நீர்வற்றி யவிதல் ; காற்றில்லாமல் புழுங்கல் .
உவியல் சமைத்த கறி .
உவை அஃறிணைப் பன்மைப் படர்க்கைச் சுட்டுப் பெயர் ; உங்குள்ளவை , உவ்விடத்துள்ளவை .
உழக்கு காற்படி ; மிதிப்பு ; கவறு உருட்டும் உழக்கு ; சிலம்பம் .
உழுக்கு (வி) கலக்கு ; மிதி ; சிலம்பம் பழகு .
உவமவாசகம் உவமவுருபு
உவமவுருபு உவமானத்தைச் சார்ந்து ஒப்புமை விளக்கவரும் இடைச்சொல் ; அன்ன , ஒப்ப , ஏய்ப்ப என்றாற்போல வருபவை
உவமன் ஊமன் ; உவமை
உவமாநிலம் சுவர்
உவமானம் உபமானம் , ஒப்பு , சமானம் ; ஒரு பொருளுக்கு ஒப்பாக உரைக்கத்தக்க உயர் பொருள்
உவமித்தல் உவமைப்படுத்தல் , ஒப்புமை காட்டிக் கூறுதல்
உவமேயம் உபமேயம் , உவமிக்கப்படும் பொருள்
உவமை உவமம் ; ஒப்புமை ; உவமையணி ; வினை , பயன் , மெய் , உரு என்பவை காரணமாக ஒரு பொருளோடு மற்றொரு பொருளை ஒப்புமை புலப்படப் பேசுகை
உவமைத்தொகை உவமையுருபுதொக்கதொடர்மொழி ; மதிமுகம் , கயற்கண் என்றாற்போல வருவது .
உவமையாகுபெயர் உவமையான பொருளின் பெயர் உவமேயத்திற்கு ஆகிவருவது ; 'பாவை வந்தாள்' என்பதுபோல வருவது .
உவமையின்மை ஒப்பின்மை , இறைவன் எண் குணங்களுள் ஒன்று .
உவமையுருபு காண்க : உவமவுருபு .