உழல்தல் முதல் - உள்வயிரம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
உழுதல் நிலத்தைக் கிளைத்தல் ; கிண்டுதல் ; மயிரைக் கோதுதல் .
உழுதுண்போர் வேளாளருள் தாமே பயிரிட்டு உண்ணும் ஒருவகையார் .
உழுதூண் பயிர்த்தொழில் செய்து வாழ்தல் .
உழுந்து உளுந்து .
உழுநர் உழவர் .
உழுபடை கலப்பை .
உழுவம் எறும்பு .
உழுவல் முறைமை ; குணம் ; இடைவிடாத அனபு , எழமையுந் தொடரும் அன்பு ; புணர்ச்சி .
உழுவலன்பு பல பிறப்புகளில் தொடர்ந்து வந்த அன்பு , எழுமையும் தொடர்ந்த அன்பு .
உழுவளைப்பு தொகுப்பு ; உழவின் சால்வளைவு .
உழுவான் பிள்ளைப்பூச்சி .
உழுவித்துண்போர் வேளாளருள் பிறரைக் கொண்டு பயிர் செய்வித்து வாழ்வோர் .
உழுவை புலி ; ஒரு மீன்வகை ; நன்னீர் உளுவை மீன் ; குண்டலவுழுவை ; தும்பிலி .
உழை இடம் ; பக்கம் ; யாழின் ஒரு நரம்பு ; மான் ; பசு ; பூவிதழ் ; ஏழனுருபு ; உவர்மண் ; விடியற்காலம் ; கதிரவன் மனைவியருள் ஒருத்தி ; வாணாசுரன் மகள் ; இடைச்சுரம் .
உழை (வி) உழை என்னும் ஏவல் , பாடுபடு .
உழைக்கலம் பொன் , வெள்ளி முதலியவற்றால் செய்த ஆளும் பாண்டங்கள் .
உழைச்சுற்றாளன் பக்கத்தில் நின்று ஏவல் கேட்போன் .
உழைச்செல்வான் நோயாளியின் பக்கத்திலிருந்து மருந்து முதலியன கொடுப்போன் ; மருத்துவனோடு உதவிக்குச் செல்பவன் .
உழைத்தல் வருந்தல் ; பாடுபடுதல் ; ஈட்டுதல் ; பேசலால் எழும் ஒலி .
உழைத்துக்கொடுத்தல் பணி செய்து பொருள் ஈட்டிக் கடன் முதலியன தீர்த்தல் ; பெற்றோர் முதலியோரைப் பேணுதல் ; வீணாகப் பாடுபடுதல் .
உழைதல் துன்பமுறல் ; இரைதல் .
உழைப்பறித்தல் சேற்றில் உழலுதல் ; வருந்தி முயலுதல் .
உழைப்பாளி உழைப்பவர் ; முயற்சியுள்ளவர் .
உழைப்பு முயற்சி ; வருந்திப் பாடுபடுகை ; வருந்தியீட்டுகை ; சம்பாத்தியம் .
உழைமண் காண்க : உழமண் .
உழையர் பக்கத்தார் ; ஏவலாளர் ; அமைச்சர் , மந்திரிமார் ; ஒற்றர் .
உழையிருந்தான் உடனிருப்போன் ; அமைச்சன் ; நோயாளிக்கு உதவிபுரிபவன் .
உழையோர் உழையர் ; மந்திரிகளின் நட்பாளர் .
உழைவு யாழின் உள்ளோசை .
உள் உள்ளிடம் ; உள்ளம் ; மனம் ; இடம் ; மறை ; மனவெழுச்சி ; ஒரு குறிப்புவினைப் பகுதி ; தொழிற்பெயர் விகுதி ; ஏழாம வேற்றுமை உருபு ; உள்ளான் என்னும் பறவை .
உள்குதல் உள்ளுதல் , நினைத்தல் ; உள்ளழிதல் ; மடிதல் .
உள்படுதல் மனமொப்பி நடத்தல் ; அறிதல் ; அடங்கியிருத்தல் .
உள்பொருள் உள்ள பொருள் , உலகத்தில் உளவாயிருக்கும் பொருள் .
உள்மருந்து உள்ளுக்கு அருந்தும் மருந்து .
உள்மனை ஊர்க் குடியிருப்பு மனை .
உள்மானம் சிற்றெல்லை .
உள்வட்டம் நாணயமாற்றில் பெறும் ஊதியம் .
உள்வணக்கம் மனவணக்கம் , மானதபூசை ; அந்தரங்க வழிபாடு .
உள்வயிரம் மரங்களின் உட்பக்கத்து வயிரம் , அகக்காழ் ; மனத்தில் நெடுங்காலமாக உள்ள சினம் , உட்பகை , செற்றம் .
உழல்தல் அசைதல் ; அலைதல் ; சுழலுதல் ; சுற்றித்திரிதல் ; நிலைகெடுதல் .
உழலுதல் அசைதல் ; அலைதல் ; சுழலுதல் ; சுற்றித்திரிதல் ; நிலைகெடுதல் .
உழலை தாபம் ; உழலைமரம் ; கதவின் குடுமி ; செக்கினுறுப்பாகிய பிழிமரம் ; குறுக்கு மரம் ; கணையமரம் ; பெருவேட்கை ; ஒரு நோய் .
உழலைமரம் மாட்டின் கழுத்திற் கட்டும் கட்டை ; செக்குலக்கை ; குறுக்குமரம் .
உழலைவேலி வழிநடைப்பட்டுப் போகிறவர்களுக்கு இடங்கொடுத்துப் பின் உழன்று கொண்டு தன் நிலையில் நிற்கும் உழலைமரம் பொருந்திய வழியினையுடைய வேலி .
உழவடை உழவு நிலத்தின் குடியுரிமை ; குடிப்பாத்தியம் .
உழவடைத்தல் உழுவதற்காக நிலத்தை ஒப்படைத்தல் .
உழவன் உழுபவன் ; மருதநிலத்தவன் ; உழவுமாடு ; வீரன் .
உழவாரப்படை புல் செதுக்குங் கருவிவகை .
உழவாரம் புல் செதுக்குங் கருவிவகை .
உழவு நிலத்தை உழும்தொழில் , வேளாண்மை ; உடம்பினால் உழைக்கை .
உழவுகட்டி உழும்போது பெயரும் மண்கட்டி .
உழவுகட்டுதல் முதற்சால் போதல் ; உழுதல் .
உழவுகுண்டை உழவுமாடு , உழவெருது .
உழவுகோல் தாற்றுக்கோல் ; குதிரைச்சம்மட்டி .
உழவுசால் உழவிடும் வளையம் , உழுகலப்பையினால் கீறப்பட்ட பிளவு .
உழவுமழை உழுதற்கு வேண்டிய பருவமழை .
உழவோன் உழவன் .
உழற்சி சுழற்சி ; மனச்சுழற்சி ; சுற்றித்திரிகை ; ஆடுகை ; வருத்தம் .
உழற்றல் நீர்வேட்கை .
உழற்றி சுழற்சி ; மிகுதாகம் ; வருத்தம் .
உழற்று (வி) சுழற்று ; கைகாலுழற்று ; காலத்தை வருத்தத்தோடு கழி ; வருந்திப் புரள் .
உழற்றுதல் உழலச்செய்தல் ; அலையச்செய்தல் ; சுழற்றுதல் ; உடம்பு நோயாற் புரளுதல் ; வருந்துதல் .
உழறுதல் கலங்குதல் ; அளைதல் ; கலக்குதல் ; சுழலுதல் ; உலாவல் ; மோதும்படி தள்ளுதல் ; உருக்காட்டுதல் .
உழன்றறுத்தல் கடினவேலை செய்தல் ; பழகித் தேர்ச்சிபெறல்
உழன்றி மாட்டின் கழத்தில் மாட்டும் கட்டை .
உழால் உழுதல் , கிண்டுதல் .
உழி இடம் ; பக்கம் ; ஏழனுருபு ; பொழுது ; அளவு .
உழிஞ்சில் வாகைமரம் ; உன்னமரம் .
உழிஞை சிறுபூளை ; கொற்றான் ; பகைவரது அரணை வளைப்போர் சூடும் மாலை ; உழிஞைத் திணை .
உழிதரல் அலைதல் , திரிதல் ; சுழலல் .
உழு பிள்ளைப்பூச்சி ; உழவு .
உழு (வி) ஏருழு ; நிலத்தைக் கிளை .
உழுத்தமா உழுந்திலிருந்து எடுத்த மா .
உழுத்தல் பதனழிதல் .
உழுத்து ஓர் அணிகலம் .