உள்வரி முதல் - உள்ளிப்பல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
உள்ளாடுதல் உடன் கலந்து திரிதல் ; உளவு அறிய உள்ளே பயிலல் .
உள்ளாடை மகளிர் அணியும் உள்ளுடை .
உள்ளாதல் உள்ளாகுதல் , உட்படுதல் , வசப்படுதல் ; உடன்படுதல் .
உள்ளாந்தரங்கம் மிகுந்த அந்தரங்கம் .
உள்ளாயுதம் தடிக்குள் அடங்கிய கத்தி .
உள்ளார் இருப்போர் ; உடையவர் ; பகைவர் ; செல்வர் .
உள்ளால் உட்பக்கம் .
உள்ளாலை உட்பக்கம் .
உள்ளாள் உள்ளாகப் பயிலும் ஆள் , உளவறிவோர் .
உள்ளாளம் இசைவகை , ஒற்றின் மாத்திரை தோன்ற உள்ளே இசைக்கும் ஆளத்தி ; கூத்து வேறுபாடு .
உள்ளாளனம் இசைவகை , ஒற்றின் மாத்திரை தோன்ற உள்ளே இசைக்கும் ஆளத்தி ; கூத்து வேறுபாடு .
உள்ளான் உளவறிபவன் ; ஒரு பறவைவகை ; உற்றவன் ; போரடிக்குந் தலைமாடு .
உள்ளி வெள்ளைப்பூண்டு ; வெங்காயம் .
உள்ளிட்டார் கூட்டாளிகள் ; தொகைக்கு உட்பட்டவர் ; முதலானவர் .
உள்ளிடுதல் உட்படுதல் , உள்ளடக்குதல் ; தொகைக்கு உட்படுதல் .
உள்ளிடை உள்ளிடம் ; உட்கருத்து , மறை .
உள்ளிடையானவன் இனத்தான் .
உள்ளித்திரி உள்ளிப்பூண்டின் உள்ளிருக்கும் பகுதி , உள்ளிப்பரல் .
உள்ளிப்பல் உள்ளிப்பூண்டின் உள்ளிருக்கும் பகுதி , உள்ளிப்பரல் .
உள்வாரம் மனவிருப்பம் ; அந்தரங்கச் சார்பு ; மேல்வாரம் ; விளைச்சலில் நிலமுடையானுக்கு வரும் பங்கு .
உள்விழுதல் உள்ளாதல் ; குறைதல் ; சுருங்குதல் ; அடங்குதல் ; உள்ளே போதல் ; காரியத்தின் பொருட்டு நட்புச்செய்தல் ; உள்வீழ்தல் .
உள்வீழ்தல் சுருங்குதல் ; குறைதல் .
உள்வெக்கை உள்ளே பற்றியுள்ள வெப்பம் .
உள்வெட்டு உயர்ந்த மாற்றுப்பொன் ; உரையாணியின் உள்வெட்டுக் குறி ; மரத்தின் உட்பகுதிப் பலகை .
உள்வெண்டயம் அரசர் ஏறும் குதிரைக்குக் காலில் அணியும் பித்தளை வளையம் ; பொதி மாட்டின் முதுகில் வைக்கும் அணை .
உள்வெதுப்பு காண்க : உள்வெக்கை .
உள்ள உண்டாயிருக்கிற ; உண்மையான .
உள்ளக்கருத்து மனத்தினுள்ளம் , உள்நோக்கம் ; உள்ளத்தில் கருதும் எண்ணங்கள் .
உள்ளக்களிப்பு மனமகிழ்ச்சி .
உள்ளக்காட்சி மானதக் காட்சி , எண்ணத்திரையில் காணும் பொருள்கள் .
உள்ளக்குறிப்பு காண்க : உள்ளக்கருத்து .
உள்ளகம் நெஞ்சு , மனம் .
உள்ளங்கால் உள்ளடி , காலடியின் கீழ்ப்பாகம் .
உள்ளங்கை அகங்கை ; கையின் நடுப்பகுதி .
உள்ளங்கைநெல்லிக்கனி பொருள்தெளிவு .
உள்ளடக்கம் எண்ணங்களை வெளிவிடாமை ; உள்ளே மறைத்துவைத்த பொருள் , உட்பொதி பொருள் .
உள்ளடக்குதல் உட்படச்செய்தல் ; மறைத்தல் .
உள்ளடங்குதல் உட்பட்டிருத்தல் .
உள்ளடி உள்ளங்கால் ; அண்மை ; கமுக்கம் ; நெருங்கிய சுற்றம் .
உள்ளடிக்குள் வீட்டில் உள்ளவர்களுக்குள்ளே .
உள்ளடிநிலம் மதகடிநிலம் ; ஏரியை அடுத்துள்ள நிலம் .
உள்ளடை உள்ளீடாக இடப்படும் பொருள் .
உள்ளது உள்பொருள் ; உண்மை ; மெய் ; உண்மைப்பொருள் ; ஆன்மா ; ஏற்பட்டது , விதிக்கப்பட்டது .
உள்ளந்தண்டு கழத்தெலும்பு .
உள்ளந்தாள் உள்ளங்கால் .
உள்ளநாள் வாழ்நாள் , ஆயுட்காலம் ; ஓரிடத்தில் இருக்கும் காலம் .
உள்ளநிகழ்ச்சி மனக்கருத்து .
உள்ளநெறி சம்பவப் பிரமாணம் , பொருளின் இயற்கைக் குணத்தைச் சுட்டிச் சொல்வதாகிய ஓர் அளவை .
உள்ளநோய் மனநோய் , மனக்கவலை .
உள்ளப்புணர்ச்சி தலைவனும் தலைவியும் உள்ளத்தால் கூடும் கூட்டம் , இருவருள்ளமும் ஒன்று படுகை .
உள்ளபசுமை ஐயமற்ற உண்மை ; மெய்வாழ்வு
உள்ளபடி உண்மையாக ; தக்க அளவு , உண்டான அளவு .
உள்ளபிள்ளை செல்வக்குழந்தை .
உள்ளம் மனம் ; உள்ளக்கருத்து ; சொற்றொடரின் கருத்து ; எண்ணம் ; ஞானம் ; அகச்சான்று ; ஆன்மா ; ஊக்கம் ; முயற்சி ; உல்லம் ; உல்லமீன்வகை .
உள்ளமட்டும் இருக்கிறவரையில் .
உள்ளமிகுதி ஊக்கம் , மனவெழுச்சி .
உள்ளமை உண்மை , உளதாயிருக்கும் தன்மை .
உள்ளரங்கம் அந்தரங்கம் , உள்ளிடம் .
உள்ளல் உள்ளான் குருவி ; உள்ளான் மீன் ; உள்ளுதல் ; நினைத்தல் , எண்ணுதல் ; மகிழ்தல் ; கருதல் ; எண்ணியிரங்கல் .
உள்ளலார் பகைவர் .
உள்ளவன் உடையவன் ; பொருளுடையவன் , செல்வன் .
உள்ளழிதல் மனம் அழிதல் .
உள்ளளவும் காண்க : உள்ளமட்டும் .
உள்ளறை உள்வீடு ; பெட்டியின் உள்ளறை ; அந்தரங்க அறை .
உள்ளன் உள்ளேயிருப்பவன் ; உற்ற நட்பினன் ; போரடிக்கும் தலைமாடு .
உள்ளாக்குதல் உட்படச்செய்தல் , வசப்படுத்தல் .
உள்ளாடுசத்துரு உற்றவன்போல நடிக்கும் பகைவன் , உட்பகைஞன் .
உள்வரி வேற்று வடிவம் , மாறுவேடம் ; சிறிய அளவுள்ள வரி ; சிற்றாயம் .
உள்வலிப்பு ஒருவகை நோய் .
உள்வழக்கு உள்ளதை உண்டு என்பது .
உள்வழிகடந்தோன் கடவுள் .
உள்வளைவு உட்கவிவு .
உள்வாங்குதல் உள்ளே மீளுதல் ; உள்ளுக்கு இழுத்தல் ; தோற்றுவித்தல் .
உள்வாசல் முற்றம் .
உள்வாய் உட்பக்கம் ; வாயின் உட்பகுதி ; ஏரியின் உட்பக்கம் .