உள்ளிப்பூண்டு முதல் - உளைமாந்தை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
உளங்கு உளகு ; ஊர்நிலத்தின் கணக்கு வழக்கு .
உளதாதல் உண்டாதல் , தோன்றியிருத்தல் ; இருத்தல் .
உளது இருப்பது , உண்மை .
உளப்படுத்துதல் உட்படுத்துதல் ; மனங்கொள்ளுதல் .
உளப்படுதல் உள்ளடங்குதல் ; உட்படுத்தல் ; உரியதாதல் ; உடன்படல் ; ஒப்புக்கொள்ளுதல் .
உளப்பாட்டுத்தன்மை முன்னிலையாரையும் படர்க்கையாரையும் தனித்தேனும் சேர்த்தேனும் தன்னுடன் கூட்டியுரைக்கும் தன்மையிடம் .
உளப்பாட்டுமுன்னிலை படர்க்கையாரை உடன்கூட்யுரைக்கும் முன்னிலை .
உளப்பாடு உட்படுகை ; உட்படுத்துகை ; எண்ணம் ; உளம் படும் பாடு , மனத்துன்பம் ; உண்மைநிலை ; சம்மதம் , உடன்படுகை .
உளப்பு நடுக்கம் .
உளம் மனம் ; மார்பு ; உட்பக்கம் ; ஆதன் , ஆன்மா .
உளம்புதல் அலைத்தல் ; ஓலமிடுதல் .
உளமை உண்மை .
உளர் உடந்தை ; உடையவர் ; வாழ்கின்றோர் .
உளர்தல் கிண்டுதல் ; கோதுதல் ; மயிர்கோதல் ; அசைத்தல் ; சிதறுதல் ; சிந்துதல் ; தடவுதல் ; யாழ் முதலியன மீட்டுதல் ; கலக்குதல் ; பூசுதல் ; காலந்தாழ்த்தல் ; சுழலுதல் ; பரப்புதல் ; உறுதியற்றாடுதல் .
உளர்ப்பு உதிர்ப்பு ; அலைக்கை .
உளர்வு அசைகை ; யாழ் மீட்டுகை ; சுழலுகை .
உளவன் உளவு அறிபவன் , துப்பாள் .
உளவாடம் முன்பணம் , அச்சாரம் .
உளவு கமுக்கம் , இரகசியச் செய்தி ; உட்செயல் ; வேவு ; ஒற்றன் ; உபாயம் ; உள்ள தன்மை .
உளவுகாரன் உளவன் .
உளறல் பேச்சு , குளறுபடியான பேச்சு ; தடுமாறிப் பேசுதல் ; பேரோலி .
உளறுதல் உளறல் , தடுமாறிப் பேசுதல் ; ஆரவாரித்தல் ; பிதற்றல் , குழறுபடையான மொழி ; கனாக்கண்டு பிதற்றுதல் .
உளறுபடி குழறுகை ; கலக்கம் ; பேச்சிலுண்டான குழப்பம் .
உளறுபடை உளறப்பட்டது ; பேச்சிற்குழறுகை .
உளறுவாயன் விடாது பேசுவோன் ; பிதற்றுவோன் .
உளி தச்சுக் கருவிகளுள் ஒன்று ; நகஞ்சீவி ; கணிச்சி ; சித்திரிக்குங் கருவி ; இடம் ; ஓரிடைச்சொல் ; ஏழாம் வேற்றுமையுருபு ; ஒரு பகுதிப்பொருள் விகுதி .
உளிக்குத்து கை முட்டியால் குத்தும் குத்து .
உளித்தலைக்கோல் இருப்புப்பாரை .
உளியம் கரடி .
உளிவைத்தல் மரத்தை உளிவைத்துப் பிளத்தல் .
உளு மரத்தை அரிக்கும் புழுவகை ; உளுத்தது .
உளுக்கு சுளுக்கு .
உளுக்குதல் சுளுக்குதல் ; மெருகிடுதல் ; நெளிதல் .
உளுத்தல் மரம் முதலியன புழுவால் அரிக்கப்பட்டுக் கெடுதல் ; சிதைந்துபோதல் .
உளுந்து காண்க : உழுந்து .
உளுப்புத்தாவுதல் உளுக்கத்தொடங்குதல் .
உளுவை ஒரு மீன்வகை ; ஆற்று மீன்வகை ; கடல் மீன்வகை .
உளை குதிரை , சிங்கம் முதலியவற்றின் பிடரிமயிர் ; குதிரைத் தலையாட்டம் என்னும் அணி ; தலை ; ஆண் மயிர் ; சேறு ; பேசலால் எழும் ஒலி ; அழுகை ; எடுத்தலோசை .
உளை (வி) உளைஎன் ஏவல் ; அழுகை .
உளைக்கால் மயிர்க்கால் .
உளைத்தல் வருத்துதல் ; வெறுத்தல் ; அழைத்தல் ; ஊளையிடுதல் .
உளைதல் மனம் வருந்தல் ; வயிறு உளைதல் ; குடைச்சல் நோவடைதல் ; பிரசவ வேதனைப்படுதல் ; சிதறிப்போதல் ; அழிதல் ; தோற்றல் ; ஊளையிடுதல் .
உளைந்து பேசுதல் மனம்நொந்து பேசுதல் .
உளைப்பு வயிற்றுவலி ; உடம்புக் குடைச்சல் ; வருத்தம் ; அழைப்பு ; ஒலிப்பு .
உளைமயிர் பிடரிமயிர் .
உளைமாந்தை கடுநோய் ; உட்புண் .
உள்ளிப்பூண்டு பூண்டுவகை , வெள்ளைப்பூண்டு ; வெங்காயம் .
உள்ளிருப்பு வைத்திருக்கும் செல்வம் ; வைப்பு நிதி ; சேமிப்பு நிதி .
உள்ளிவிழா பண்டைக்காலத்திலே கருவூரில் நிகழ்ந்த திருவிழா .
உள்ளீடு உள்ளிருக்கும் சத்துப்பொருள் ; உள்ளே இடப்பட்டது ; உட்கருத்து ; உறுதியான உட்பக்கம் ; அறிவு ; உடன்படிக்கை ; கமுக்கம் ; உள்ளே இடுவது .
உள்ளு உள்ளான் பறவை .
உள்ளுக்குக்கொடுத்தல் உண்ணும்படி மருந்து கொடுத்தல் .
உள்ளுக்குள்ளே உள்ளே , மனத்துக்குள் .
உள்ளுச்செல்லுதல் நினைவோடுதல் .
உள்ளுடன் உள்ளே கிடப்பது ; பணியாரத்தின் உள்ளீடு .
உள்ளுடை மேலே அணியும் ஆடைக்கு உள்ளாகக் கட்டும் உடை ; உள்வேட்டி ; கோவணம் .
உள்ளுடைதல் மனம் முரிதல் ; முழுதும்சிதைதல் .
உள்ளுதல் நினைதல் ; ஆராய்தல் ; நன்கு மதித்தல் ; மீண்டும் நினைத்தல் ; இடைவிடாது நினைத்தல் .
உள்ளுயிர் உள்ளே கலந்திருக்கும் ஆன்மா ஆகிய கடவுள் .
உள்ளுயிர்க்குன்று நத்தை .
உள்ளுருக்கி கணைநோய் .
உள்ளுருகுதல் மனங்கரைதல் .
உள்ளுளவு உடந்தை .
உள்ளுறுத்தல் உட்செலுத்துதல் ; உட்கருதுதல் ; உள்ளிடுதல் , உட்புகுதல் , நினைக்கச் செய்தல் .
உள்ளுறுதல் உட்படுதல் , உள்ளாதல் .
உள்ளுறை உட்பொருள் ; உட்கருத்து ; உள்ளெண்ணம் ; உள்ளிருக்கும் பொருள் ; மறைபொருள் ; உள்ளுறையுவமம் ; பொருளடக்கம் .
உள்ளுறையுவமம் வெளிப்படையல்லாத உவமம் , வெளிப்படையாகக் கூறாமல் குறிப்பாகக் கருப்பொருண்மேல் ஏற்றிக் கூறும் உவமம் .
உள்ளூர் ஊர்நடு ; சொந்த ஊர் .
உள்ளூர்ச்சரக்கு சொந்த ஊரில் விளையும் பொருள் .
உள்ளெரிச்சல் பொறாமை .
உள்ளேபோடுதல் தன்வசப்படுத்தல் .
உள்ளொடுக்கம் தன்னடக்கம் .
உள்ளொற்றுதல் உள்நிகழ்வை உய்த்துணர்தல் .
உள்ளோசை உள்ளொலி , அகவொலி ; நுணுக்கம் ; மெல்லோசை .
உளகு யாழின் ஓர் உறுப்பு , யாழின் தண்டு ; ஊர் ஒழுகு ; ஊர்நிலத்தின் கணக்கு வழக்கு .