உளைவு முதல் - உறல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
உற்றிடம் உற்ற சமயம் ; துன்பம் நேர்ந்த காலம் ; அடைக்கலம் .
உற்றுக்கேட்டல் கூர்ந்து கேட்டல் ; கருத்துடன் கேட்டல் .
உற்றுநோக்குதல் குறித்து நோக்குதல் , கவனமாய்க் காணுதல் .
உற்றுப்பார்த்தல் குறித்து நோக்குதல் , கவனமாய்க் காணுதல் .
உற்றுழி துன்பம் நேர்ந்த காலம் ; துன்புற்ற இடம் .
உற்றோர் காண்க : உற்றார் .
உற கிட்ட ; ஓர் உவமவுருபு .
உறக்கம் தூக்கம் ; ஒடுக்கம் ; இறப்பு ; சோர்வு .
உறக்கு உறக்கம் .
உறக்குதல் தூங்கச் செய்தல் ; இமையை மூடச் செய்தல் ; நாசப்படுத்துதல் ; கிள்ளுதல் ; விரலால் பிதுக்கியெடுத்தல் .
உறகுதல் உறங்குதல் .
உறங்காவில்லி தூக்கமின்றி விற்பிடித்துக் காப்போன் , இலக்குமணன் .
உறங்குதல் தூங்குதல் ; ஒடுங்குதல் ; சோர்தல் ; தங்குதல் ; மயக்கமுறுதல் .
உறட்டலன் வறண்டவன் , உடல் மெலிந்தவன் .
உறட்டு கரட்டுநிலம் .
உறட்டுதல் வறட்டுதல் .
உறட்டை தீ நாற்றம் .
உறட்டையடித்தல் தீ நாற்றம் வீசுதல் .
உறண்டுதல் வறளுதல் .
உறண்டை முருட்டுத்தனம் ; தொந்தரவு செய்கை ; கெட்ட நாற்றம் .
உறத்தல் கிள்ளியெடுத்தல் ; பிளத்தல் ; அழுத்துதல் ; உறிஞ்சுதல் ; சிறிதாதல் ; செறிதல் ; ஒட்டக் கறத்தல் ; முற்றுங்கவர்தல் .
உறந்தை உறையூர் .
உறப்பு செறிவு .
உறமுறையார் காண்க : உறவின் முறையார் .
உறல் அடைகை ; உறவு ; பரிசம் உறுதல் ; பொருந்தல் ; கிட்டல் ; வருதல் ; அடைதல் ; அணைதல் .
உளைவு வருத்தம் ; வலிப்பு ; வயிற்றுளைவு ; குடைவு , குடைச்சல் நோவு .
உளைவெடுத்தல் நோவுண்டாதல் .
உற்கட்டிதம் ஓர் இருக்கைவகை .
உற்கடம் செருக்கு ; கடுமை ; மதயானை ; நன்னாரி ; இலவங்கம் .
உற்கடிதம் ஐவகைத் தாளத்துள் ஒன்று ; ஐவகை நிருத்த பாதங்களுள் ஒன்று .
உற்கம் கடைக்கொள்ளி ; தீத்திரள் ; விண்வீழ் கொள்ளி ; ஊழித் தீ .
உற்கரி (வி) சினத்தோடு பேசு .
உற்கரிகை பாலும் நெய்யும் சேர்த்துச் செய்யப்பட்ட ஒருவகைப் பலகாரம் .
உற்கரித்தல் சினத்து ஆர்த்தல் , சினத்தோடு பேசுதல் .
உற்காதா சாமவேத கீதம் பாடுபவன் ; வேள்வி செய்யும் ஆசிரியருள் ஒருவன் .
உற்காரம் கக்குதல் ; ஏப்பமிடுதல் ; அதிர்ச்சி ; தூற்றுந் தவசம் .
உற்கிருட்டம் மேன்மை ; மிகுதி .
உற்கிருதி வடமொழிச் சந்தவகை , அடி ஒன்றுக்கு இருபத்தாறு அசைகளைக் கொண்ட நான்கு அடிகளையுடையது .
உற்குரோசம் நீர்வாழ் பறவை ; சத்தம் .
உற்கை கடைக்கொள்ளி ; விண்வீழ்கொள்ளி ; விண்மீன் .
உற்சங்கம் இணைக்கைவகை ; உற்சங்கக் கை .
உற்சர்ப்பிணி வாழ்நாள் ; போகம் முதலியன பெருகுங் காலம் .
உற்சவம் திருவிழா ; விருப்பம் , ஆசைப்பெருக்கம் ; கொண்டாட்டம் ; திருமணம் .
உற்சவமூர்த்தி திருவிழாவில் எழுந்தருளப் பண்ணும் தெய்வத்திருமேனி .
உற்சவர் திருவிழாவில் எழுந்தருளப் பண்ணும் தெய்வத்திருமேனி .
உற்சாகப்பிழை ஊக்கமின்மை .
உற்சாகபங்கம் ஊக்கக்கேடு .
உற்சாகம் முயற்சி , ஊக்கம் , மகிழ்ச்சி ; மனப்பூரிப்பு .
உற்சாகமருந்து களிப்புண்டாக்கும் மருந்து .
உற்பத்தி பிறப்பு ; கருவுண்டாகுகை ; தோற்றம் .
உற்பலசாசனன் பெருங்காயம் .
உற்பலசானன் பெருங்காயம் .
உற்பலம் கருங்குவளைப்பூ ; கருநெய்தல் ; செங்குவளை ; செங்கழுநீர்ப்பூ .
உற்பலவரை திருத்தணிகை மலை
உற்பவம் காண்க : உற்பத்தி .
உற்பவித்தல் தோன்றுதல் , உற்பத்தியாதல் ; பிறப்பித்தல் .
உற்பன்னம் தோன்றியது , தோற்றம் ; பிறப்பு ; உண்மை ; உயர்வு ; கல்வி ; நிமித்தம் .
உற்பனம் தோன்றியது , தோற்றம் ; பிறப்பு ; உண்மை ; உயர்வு ; கல்வி ; நிமித்தம் .
உற்பாதபிண்டம் கருவில் திருவுடையவர் , மேதாவி .
உற்பாதம் கொடுமை ; தீ நிமித்தம் , பின்வரும் தீமைகளை முன் அறிவிக்குங் குறி ; விண்வீழ் கொள்ளி , நிலநடுக்கம் முதலியன ; நுண்ணறிவு .
உற்பிச்சம் நால்வகைத் தோற்றத்துள் ஒன்று , வித்து வேர் முதலியவற்றினின்றும் தோன்றுவன .
உற்பிரேட்சை தற்குறிப்பேற்ற அணி .
உற்பீசம் காண்க : உற்பிச்சம் .
உற்றது நேர்ந்தது , நிகழ்ந்த செயல் ; உண்மை ; இடுக்கண் .
உற்றதுரைத்தல் எண்வகை விடைகளுள் ஒன்று , தனக்கு நேர்ந்துள்ளதைக் கூறும்முகத்தால் மறுப்பதைத் தெரிவிக்கும் விடை .
உற்றபடி நிகழ்ந்தவாறு .
உற்றவன் சுற்றத்தான் ; நண்பன் ; நோயாளி .
உற்றவிடம் கேடுகாலம் ; நட்பான இடம் .
உற்றளவு சரியளவு ; உள்ளளவு ; உண்மைச் செய்தி .
உற்றறிதல் தொட்டறிதல் , பயின்றறிதல் .
உற்றறிவு தொட்டுப்£ர்த்து அறிகை , தொடுவுணர்ச்சி .
உற்றாண்மை நெருங்கிய உரிமை .
உற்றாண்மை பேசுதல் பரிந்து பேசுதல் .
உற்றார் உறவினர் , சுற்றத்தார் ; நண்பர் .
உற்றான் கணவன் .