உறவன் முதல் - உறுமுதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
உறுபு பாலை யாழ்த்திறம் ; செறிவு ; மிகுதி .
உறுபூசல் கை கலந்த போர் .
உறுபொருள் தானே வந்தடையும் பொருள் , உடையர் இல்லாமையால் ஒருவனுக்குக் கிடைக்கும் பொருள் , வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் மறைந்து கிடந்ததும் தாயத்தார் பெறாததுமாகிய பொருள் .
உறும்பு உலர்ந்த கரம்பை ; மண்ணின் கூரிய சிறு கட்டி .
உறும்புதல் உறுமுதல் .
உறுமால் உருமால் , தலைச்சாத்து , தலைச்சீலை , தலைப்பாகை , மேல் வேட்டி .
உறுமாலை உருமால் , தலைச்சாத்து , தலைச்சீலை , தலைப்பாகை , மேல் வேட்டி .
உறுமி ஒருவகைத் தோற்கருவி , பறை .
உறுமுதல் உறுமென்று ஒலித்தல் ; முறுமுறுத்தல் ; குமுறுதல் ; சினத்தல் ; இரைதல் ; முழங்குதல் ; எழும்புதல் .
உறி பண்டங்களை வைக்கத் தொங்கவிடும் கயிறு ; தூக்கு .
உறிக்கா இரு பக்கமும் உறி தொங்கிய காவடி .
உறிச்சமணர் சமணமுனிவருள் ஒரு சாரார் .
உறிஞ்சுதல் வாய்க்குள் இழுத்தல் ; மூக்கால் உறிஞ்சுதல் ; உள்ளிழுத்தல் , உள்ளே வாங்கல் .
உறிதல் உறிஞ்சுதல் , உள்ளே வாங்கல் .
உறியடி கண்ணன் பிள்ளைப் பருவத்தில் உறி வெண்ணெய் எடுத்ததைக் கொண்டாடுந் திருநாள் .
உறு மிகுதி ; மிக்க ; பகை ; போர் .
உறுக்காட்டம் உறுக்குதல் , அதட்டுதல் ; உறுக்கிப் பேசும் முறை ; அதிகாரம் செலுத்துகை .
உறுக்காட்டியம் உறுக்குதல் , அதட்டுதல் ; உறுக்கிப் பேசும் முறை ; அதிகாரம் செலுத்துகை .
உறுக்கு அதட்டுகை , அதட்டு .
உறுக்குதல் அதட்டுதல் ; சினத்தல் ; ஒறுத்தல் ; தாண்டுதல் .
உறுகண் துன்பம் ; நோய் ; வறுமை ; அச்சம் .
உறுகணாளன் வறிஞன் ; தீவினையாளன் .
உறுகோள் நிகழ்ச்சி , சம்பவம் ; பற்றுக்கோடு .
உறுசுவை சாராலங்காரம் , பல இன்கவிகளின் பிழிவாய் ஒரு பொருளை உயர்த்திக் கூறல் .
உறுத்தல் உறுத்துதல் ; மிகுக்கை ; ஒற்றுகை .
உறுத்தருதல் நெருக்குதல் .
உறுத்துதல் உண்டாக்குதல் ; அமைத்தல் ; அடைவித்தல் ; ஒற்றுதல் ; பதித்தல் ; நாட்டுதல் ; அழுத்துதல் ; வருத்துதல் ; மிகுத்தல் ; விரித்தல் ; செலுத்துதல் ; பொருத்துதல் ; சேர்த்தல் ; சீறுதல் .
உறுத்தை அணில் .
உறுதல் உண்டாதல் ; மிகுதல் ; சேர்தல் ; இருத்தல் ; பொருந்தல் ; கூடல் ; நேர்தல் ; பயனுறல் ; கிடைத்தல் ; வருந்தல் ; தங்கல் ; அடைதல் ; நன்மையாதல் ; உறுதியாதல் ; நிகழ்தல் .
உறுதி திடம் ; திரம் ; வலிமை ; நன்மை ; இலாபம் ; கல்வி ; மேன்மை ; சன்மார்க்க உபதேசம் ; உறுதி ; தளராமை ; ஆட்சிப் பத்திரம் ; பிடிவாதம் ; விடாப்பிடி ; பற்றுக்கோடு ; நல்லறிவு ; வழக்கின் திடம் ; பயன் .
உறுதிக்கட்டுரை கழறல் , இடித்துக் கூறுகை .
உறுதிச்சீட்டு உறுதிப்படுத்தி எழுதித்தரும் ஆவணம் .
உறுதிச்சுற்றம் உற்ற துணைவர் .
உறுதிச்சொல் உறுதிமொழி ; நல்லுபதேசம் ; கண்டிப்பு , இடித்துரை .
உறுதிப்படுதல் நிலைப்படுதல் ; பலப்படுதல் ; சாதன முடித்தல் .
உறுதிப்பத்திரம் எழுத்துறுதி ; உறுதிச்சீட்டு ; நம்பிக்கைப் பத்திரம் .
உறுதிப்பாடு திடம் , வல்லமை ; வாக்குறுதி .
உறுதிப்பொருள் கடவுள் ; அறிவு ; உண்மைப் பொருள் ; நன்மை பயக்கும் பொருள் .
உறுதிமொழி உறுதிச்சொல் ; பிரமாணமாகச் சொல்லும் வார்த்தை .
உறுதியோர் தூதர் .
உறுதுணை உற்ற துணை ; பெருந்துணை ; நம்பிக்கையான துணை .
உறுநன் சேர்ந்தவன் .
உறுப்படக்கி ஐந்துறுப்புகளையும் அடக்குகின்ற ஆமை .
உறுப்பணங்கெட்டவன் உறுப்புக் குறையுடையவன் ; மூடன் .
உறுப்பறை உறப்புக் குறைந்தவன் ; உறுப்புக் குறைவு .
உறுப்பா கப்பல் கட்டுதற்குப் பயன்படும் மரவகை .
உறுப்பில்பிண்டம் உறுப்புக்குறை எட்டனுள் ஒன்று , உறுப்பற்ற தசைத்திரள் , கருவில் வடிவுறுமுன் சிதைந்த பிண்டம் .
உறுப்பு சிணை , அவயவம் , உடல் , நெருக்கம் , பங்கு ; மிகுதி ; மரக்கொம்பு ; மேல்வரிச்சட்டம் ; காணியாட்சிப் பத்திரம் ; பாலையாழ்த்திறம் ; உடல் அழகு .
உறுப்பத்தோல் பூணூலிற் கட்டிய மான்தோல் .
உறுப்புள்ளவன் உடல் அழகுள்ளவன் ; ஒழுக்கமுள்ளவன் ; திறமையுடையவன் .
உறவன் உறவுடையவன்
உறவாக்குதல் உறவினனாகச் செய்தல் ; சமாதானப்படுத்துதல் .
உறவாடுதல் உறவு கொண்டாடுதல் ; நட்புச் செய்தல் .
உறவாளி உறவாகக் கொண்டவன் , உறவினன் .
உறவி எறும்பு ; உறவு ; உயிர் ; உலைக்களம் ; நீர் ஊற்று ; கிணறு ; மலைமுருங்கை .
உறவின்முறையார் உறவினர் , சுற்றத்தார் .
உறவு உறுகை ; பொருத்தம் ; சேர்க்கை ; சம்பந்தம் ; சுற்றம் ; நட்பு ; ஒற்றுமை ; விருப்பம் .
உறவுகலத்தல் புதிய உறவு உண்டாதல் ; உறவு பாராட்டுதல் ; இனத்தாருடன் சேர்ந்திருத்தல் .
உறவுமுரிதல் நட்புக் கெடுதல் .
உறவுமுறை ஒருவருக்கொருவர் உள்ள தொடர்பு .
உறழ்கலி கலிப்பாவகை .
உறழ்குறித்தல் வாது செய்யக் கருதல் .
உறழ்ச்சி உறழ்வு , மாறுபாடு ; திரிதல் ; பெருக்கல் .
உறழ்தல் ஒத்தல் ; மாறுபாடு ; விகற்பித்தல் ; செறிதல் ; பெருக்குதல் ; மிகுதல் ; திரிதல் ; இடையிடுதல் ; உவமித்தல் ; வீணையில் ஒரு நரம்பை விட்டு ஒரு நரம்பைத் தெறித்தல் ; எண் கூட்டிப் பெருக்கல் ; எதிராதல் .
உறழ்ப்பு காந்தார பஞ்சமம் ; நெருக்கம் .
உறழ்பொரு உவமையினும் பொருளை மிகுத்துக் கூறும் ஒப்புமைவகை .
உறழ்பொருள் ஒப்பு மாறுபடக் கூறுவது ; ஒப்புமை கூறாது மாறுபடக் கூறப்படும் பொருள் .
உறழ்வு உறழ்ச்சி ; மாறுபாடு , பகை ; போர் ; இடையீடு ; ஒப்பு ; செறிவு ; காலம் ; எண் பெருக்குகை ; உணர்வு .
உறழ ஓர் உவமவுருபு .
உறன்முறை உறவுமுறை , உறவுமுறைத் தன்மை .
உறாதவன் நொதுமலன் , பகையும் நட்பும் இல்லாதவன் .
உறாமை பொருந்தாமை ; விருப்பு வெறுப்பின்மை ; தகாத செய்கை .
உறார் பகைவர் .
உறாவரை முற்றூட்டு ; பிறர் உள்ளே வாராத எல்லையை உடைய நிலம் .
உறாவுதல் சோர்தல் ; வருத்தம் .