ஊடாடுதல் முதல் - ஊமத்து வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஊதாரிபடுதல் கேடுறுதல் .
ஊதிகை முல்லைக்கொடி .
ஊதிப்பார்த்தல் மந்திரித்தல் ; புடமிட்டுச் சோதித்தல் .
ஊதிப்போடுதல் எளிதில் வெல்லுதல் .
ஊதியம் இலாபம் ; கல்வி ; பயன் .
ஊதிலி பாம்பாட்டிகள் ஊதும் மகுடிக் குழல் ; குழந்தைகள் ஊதும் கருவி .
ஊது ஊதுகுழல் ; வண்டு .
ஊது (வி) வாயால் ஊது ; வீங்கு ; வீசு .
ஊதுகட்டி சொக்கவெள்ளி , தூய வெள்ளி .
ஊதுகணை கணைநோய்வகை , குழந்தைகள் நோய்வகை .
ஊதுகரப்பாண் குழந்தைகளுக்கு வரும் ஒருவகைக் கரப்பான் நோய் .
ஊதுகாமாலை காமாலை நோய்வகை .
ஊதுகுழல் ஊதும் இசைக்குழல் ; நெருப்பூதுங் குழாய் .
ஊதுகொம்பு ஊதிடு கொம்பு ; கொம்பு வாத்தியவகை .
ஊதுதல் குழாய் முதலியவற்றை ஊதுதல் ; தீயெரிய ஊதுதல் ; புடம்போடுதல் ; விளக்கு முதலியன அணைய ஊதுதல் ; காற்று நொய்தாய் வீசுதல் ; நோவு தீர ஊதுதல் ; வண்டு முதலியன ஒலித்தல் ; துருத்தியால் காற்றை எழுப்புதல் ; பொருமுதல் ; வீங்கல் ; பொருத்தல் ; துளைத்தல் ; நுகர்தல் .
ஊதுமாக்கூழ் ஓர் இனிப்புக் கூழ் .
ஊதுமாந்தம் குழந்தைகளுக்கு மாந்தத்தால் வயிறு விம்மும் நோய் .
ஊதுவத்தி மணப் பொருளாகிய குச்சி ; சாம்பிராணித் திரி .
ஊதுவழலை ஒரு பாம்புவகை .
ஊதுவாரம் வெள்ளி .
ஊதுவிரியன் தீண்டுவதனால் உடம்பை வீங்கச் செய்யும் ஒருவகை விரியன் பாம்பு .
ஊதை காற்று ; குளிர்காற்று , வாடைக்காற்று ; வாதநோய் .
ஊந்து கச்சோலம் , ஒருவகை மணப்பண்டம் .
ஊபம் போரின் அணி ; குறைத்தலையுடல் .
ஊம் ஊமை ; மவுனம் .
ஊம்புதல் சூப்புதல் , சப்புதல் .
ஊமச்சி ஊமைப்பெண் ; ஒருவகை நத்தை .
ஊமணை பேசுந்திறனற்றவர் ; அழகற்றது .
ஊமணைச்சட்டி சூளையில் நன்றாக வேகாத சட்டி .
ஊமணைச்சி அழகில்லாதவள் .
ஊமத்தங்கூகை ஊமைக்கோட்டான் .
ஊமத்தம் செடிவகையில் ஒன்று ; வெள்ளூமத்தை ; கருவூமத்தை ; உன்மத்தம் .
ஊமத்து செடிவகையில் ஒன்று ; வெள்ளூமத்தை ; கருவூமத்தை ; உன்மத்தம் .
ஊடாடுதல் நடுவே திரிதல் ; பலகாற் பயிலுதல் ; கலத்தல் ; கலந்து பழகுதல் ; பெருமுயற்சி செய்தல் .
ஊடான் கடல்மீன்வகையுள் ஒன்று .
ஊடு உள் ; நடு , இடை ; நெசவின் தார்நூல் ; ஏழனுருபு ; குறுவையும் ஒட்டடையும் கலந்து விதைத்துச் செய்யும் சாகுபடி .
ஊடு (வி) பிணங்கு ; பிரி ; பகைகொள் ; வெறு .
ஊடு சாகுபடி இருவகைத் தவசங்களைக் கலந்து பயிரிடுகை .
ஊடுசெல்லுதல் நடுவில் போதல் , இடையே போதல் .
ஊடுதட்டு இருவர் வேலையினிடையே இடையிற் புகுந்து பெறும் ஊதியம் .
ஊடுதல் புலத்தல் ; வெறுத்தல் ; பிணங்குதல் ; ஊடுருவுதல் .
ஊடுதாக்குதல் பின்னிடாமல் எதிர்நிற்றல் ; ஆற்றலை ஆராய்ந்து பார்த்தல் ; இரண்டு பொருள்களின் வலியை ஓப்பிடுதல் .
ஊடுபற்றுதல் உள்ளே பற்றியெரிதல் , விளக்கினுள் படர்ந்து எரிதல் .
ஊடுபோக்குதல் ஊடுருவச் செய்தல் , இடையே போகச் செய்தல் ; நடுவறுத்தல் ; வழக்குத் தீர்த்தல் .
ஊடுருவுதல் ஊடறுத்தல் ; நுழைதல் ; துளைத்தல் ; இடையிற் புகுந்து செல்லுதல் .
ஊடூடே இடையிடையே ; அடிக்கடி ; இங்குமங்கும் ; அப்போதைக்கப்போது .
ஊடை தார்நூல் ; ஆடையின் குறுக்கிழை ; மணமான இளம்பெண் .
ஊடையம் நீரரண் .
ஊண் உண்கை ; உணவு ; ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு .
ஊண்சாலை அன்ன சாலை .
ஊண்டழல் வயிற்றுத் தீ .
ஊண்பாக்கு உணவுண்டபின் தின்னும் வெற்றிலை பாக்கு .
ஊணம் ஒரு நாடு .
ஊணன் மிகவுண்போன் ; ஊண நாட்டான் ; மிலேச்சன் .
ஊணா சடைச்சிமரம் .
ஊணி உணவு கொள்பவன் (ள்) ; நட்டுவைக்கும் சிறு கோல் ; மாடு முதலியன கட்டும் சிறு தறி .
ஊணிக்கம்பு கட்டை வண்டியின் இரு பக்கத்தும் ஊன்றப்படும் கம்புகள் .
ஊணுதல் ஊன்றுதல் , நடுதல் , உணவு கொடுத்துப் பேணுதல் .
ஊத்தங்காய் புதைத்துப் பழுக்கவைத்த காய் .
ஊத்தப்பம் அப்பவகை .
ஊத்தம் வீக்கம் ; காய்களைப் பழுக்க வைக்கப் புதைத்தல் .
ஊத்து ஊதுவகை ; காகளத் தொனி ; குழந்தைகள் ஊதும் விளையாட்டுப் பொருள் ; உடம்பு ஊதுதல் .
ஊத்தை அழுக்கு , உடம்பில் சேரும் அழுக்கு ; பல்லில் சேரும் அழுக்கு ; நாற்றம் ; புலால் .
ஊத்தைக்குடியன் ஒரு பிசாசு .
ஊத்தைநாறி தீநாற்றமுடையவன் ( ள் ) ; பீநாறி மரம் .
ஊத்தைப்பிணம் நாறிய பிணம் .
ஊதம் யானைக் கூட்டம் ; போர் செய்ய அழைத்தல் , போருக்கு வருமாறு கேட்டல் .
ஊதல் குளிர்காற்று ; வீக்கம் ; வாதரோகம் ; ஆரவாரம் ; மிகுதி ; ஊதுகருவி .
ஊதல்போடுகை புகைபோட்டுப் பழுக்கச் செய்தல் ; பெருச்சாளி போன்றவை பொந்தினின்றும் வெளியேறப் புகைமூட்டுதல் .
ஊதல்போடுதல் புகைபோட்டுப் பழுக்கச் செய்தல் ; பெருச்சாளி போன்றவை பொந்தினின்றும் வெளியேறப் புகைமூட்டுதல் .
ஊதற்காற்று ஊதைக் காற்று , பனிக்காலத்துக் குளிர்காற்று .
ஊதா செம்மை கலந்த நீலநிறம் , மங்கல் நிறம் .
ஊதாங்குழல் நெருப்பூதுங் குழாய் .
ஊதாம்பை காற்றூதல் , பலூன் .
ஊதாரி வீண்செலவுக்காரன் , செல்வத்தை வீணாய் அழிப்போன் ; பயனிலி .