சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஊர்ப்புகைச்சல் | ஊரில் கெட்ட நிமித்தமாகத் தோன்றும் புகை நிறம் ; ஊர் வதந்தி . |
ஊர்ப்புரட்டு | பெரும்பொய் . |
ஊர்ப்புரளி | ஊர்க்குழப்பம் ; ஊர்ப்புரட்டு , பெரும்பொய் . |
ஊர்ப்புல் | கோரைவகை . |
ஊர்ப்புலம் | ஆமணக்கு . |
ஊர்ப்புள் | காண்க : ஊர்க்குருவி . |
ஊர்ப்பொருத்தம் | ஊர்ப்பெயரின் முதலெழுத்துக்கும் குறிகேட்போன் பெயரின் முதலெழுத்துக்கும் அமையும் பொருத்தம் . |
ஊர்மச்சி | காண்க : ஊமைச்சி . |
ஊர்மணியம் | ஊர் மேற்பார்வை ; ஊரை மேற்பார்ப்பவன் . |
ஊமைத்தேங்காய் | நீராடாத தேங்காய் , உள்ளே ஒன்றுமில்லாத தேங்காய் . |
ஊமைமணி | நாக்கில்லாத மணி . |
ஊமையடி | அரத்தக் காயமுண்டாக்காத அடி . |
ஊமையன் | பேச இயலாதவன் , மூங்கையன் . |
ஊமையெழுத்து | ஒலியற்ற எழுத்து , மெய்யெழுத்து ; 'ஓம்' என்னும் பிரணவம் . |
ஊமை விளையாட்டு | குழந்தைபோலச் சைகை செய்து விளையாடுகை . |
ஊமைவீக்கம் | காண்க : ஊமைக்காயம் . |
ஊமைவெயில் | மேகமூட்டகாலத்தில் உறைக்கும் வெயில் . |
ஊய்தல் | பதனழிதல் , ஊசுதல் . |
ஊர் | கிராமம் , மக்கள் சேர்ந்து வாழும் இடம் ; இடம் ; ஊரிலுள்ளோர் ; சந்திரசூரியரைச் சூழ்ந்த பரிவேடம் . |
ஊர் | (வி) தவழ் ; பரவு ; தினவுறு ; ஏறு ; செலுத்து . |
ஊர்க்கலாபம் | மக்களுக்குள் உண்டாகும் கலகம் . |
ஊர்க்கற்செம்மை | புடமிட்ட நிலை . |
ஊர்க்காரியம் | ஊர்ப் பொதுச்செயல் . |
ஊர்க்காறுபாறு | ஊர்க்காரியம் ; ஊர் விசாரணை , ஊர் விசாரிப்பு ; அயலாருடைய காரிய விசாரிப்பு . |
ஊர்க்குருவி | காண்க : அடைக்கலக்(ங்) குருவி . |
ஊர்க்கொள்ளை | ஊரில் நடக்கும் கொள்ளை ; அதிகாரிகளின் கொடுமை ; ஊரில் பரவும் கொள்ளைநோய் . |
ஊர்காவல் | தலையாரி . |
ஊர்கூடுதல் | ஊரவர் திரளுதல் . |
ஊர்கொலை | பகைமேற் செல்வோர் நிரை கொள்ளுமுன் நிரைகாக்கும் காவலரைக் கொல்லும் புறத்துறை . |
ஊர்கொள்ளுதல் | பரந்து ஒளிர்தல் , பரிவேடித்தல் . |
ஊர்கோலம் | காண்க : ஊர்வலம் . |
ஊர்கோள் | பரிவேடம் , சந்திர சூரியரைச் சூழ்ந்த ஒளிவட்டம் . |
ஊர்ச்சம் | ஊக்கம் ; மூச்சு ; வல்லமை ; கார்த்திகை மாதம் . |
ஊர்ச்சிதம் | உறுதி ; நிலைபேறு , நிலைப்படுதல் ; ஐயத்திற்கிடமில்லாத முடிவு . |
ஊர்ச்சுற்று | நகச்சுற்று ; ஊருக்குப் புறம்பான வெளியிடம் ; ஊரின் சுற்றுப்புறம் . |
ஊர்சுற்றி | ஊரைச் சுற்றித் திரியும் இயல்புடையது , கழுதை ; பல ஊர்களுக்கும் சென்று வருபவன் . |
ஊர்ணநாபி | சிலந்திப்பூச்சி . |
ஊர்ணம் | ஆடு முதலியவற்றின் மயிர் ; நூலிழை ; புருவநடுவிலுள்ள சுழி . |
ஊர்த்தம் | காண்க : ஊர்த்துவம் . |
ஊர்த்தலைமை | நாட்டாண்மை . |
ஊர்த்துவகதி | மேனோக்கிச் செல்லுகை . |
ஊர்த்துவ கலிகை | கூத்தின் உறுப்புச் செய்கைகளுள் ஒன்று . |
ஊர்த்துவ காமினி | மேல்நோக்கிச் செல்லும் குதிரை . |
ஊர்த்துவ சுவாசம் | மேல்மூச்சு . |
ஊர்த்துவ தாண்டவம் | ஒரு காலை மேலே தூக்கியாடும் நடனம் . |
ஊர்த்துவம் | மேல் ; மேல்நோக்கம் ; மேற்புறம் ; சைவபேதம் பதினாறனுள் ஒன்று . |
ஊரத்துவலோகம் | மேலுலகம் . |
ஊர்த்துவாங்கம் | அரைக்கு மேற்பட்ட உறுப்பு . |
ஊர்தருதல் | ஊர்தல் ; வீசுதல் ; மிகுதல் . |
ஊர்தல் | நகருதல் ; பரவுதல் ; தினவுறுதல் ; நெருங்குதல் ; வடிதல் ; ஏறிச் செல்லுதல் ; கழலுதல் ; ஏறுதல் . |
ஊர்தி | ஏறிச் செலுத்தப்படுவது , வாகனம் ; எருது , குதிரை , சிவிகை , வண்டி முதலிய வாகனங்கள் ; விமானம் ; ஆரூடம் . |
ஊர்நத்தம் | ஊரில் வீடுகள் கட்டுவதற்காக விடப்பட்டுள்ள இடம் ; குடியிருப்பு ; ஊர் . |
ஊர்நேரிசை | பாட்டுடைத் தலைவனது ஊரைச் சிறப்பித்து நேரிசை வெண்பாவினால் பாடப்படும் சிற்றிலக்கியவகை . |
ஊர்ப்பட்டது | மிகுந்தது . |
ஊர்ப்பன்றி | நாட்டுப்பன்றி . |
ஊர்ப்பாக்கு | திருமண அழைப்புக்காக வைக்கும் தாம்பூலம் . |
ஊர்ப்பாடு | பிறருடைய வேலை . |
ஊமத்தை | செடிவகையில் ஒன்று ; வெள்ளூமத்தை ; கருவூமத்தை ; உன்மத்தம் . |
ஊமல் | கிழங்கு கழிந்த பனங்கொட்டை ; பனங்கொட்டையின் புறவோடு . |
ஊமற்கச்சி | உலர்ந்த பனங்கொட்டையின் பாதி . |
ஊமற்கரி | பனங்கொட்டைக் கரி . |
ஊமன் | ஊமையன் ; பேசத் தெரியாதவன் ; கூகை , கோட்டான் . |
ஊமாண்டி | பூச்சாண்டி ; பிள்ளைகள் விளையாட்டுள் ஒன்று ; ஊமை ; பிச்சையெடுக்கும் ஊமை எனப் பொருள்படும் ஒரு வசவுச்சொல் . |
ஊமாண்டிகாட்டுதல் | பிள்ளைகளை அச்சுறுத்துதல் . |
ஊமிள் | சிறுபூனை . |
ஊமை | மூங்கைத்தன்மை , பேச இயலாமை ; ஒலிக்குறைவு ; ஒலியின்மை ; ஒரு வாத்தியம் ; கீரி ; உறுப்புக்குறை எட்டனுள் ஒன்று . |
ஊமைக்கட்டி | முகங்கொள்ளாத சிலந்திக்கட்டி ; பொன்னுக்குவீங்கி . |
ஊமைக்காய் | உள்ளீடில்லாத காய் , பருப்பற்ற காய் . |
ஊமைக்காயம் | முரட்டடியால் வெளியில் காயம் தெரியாது உண்டாகும் உள்வீக்கம் . |
ஊமைக்கிளாத்தி | கடல்மீன்வகை . |
ஊமைக்கூறன் | ஊமையின் பேச்சு . |
ஊமைக்கோட்டான் | கோட்டான் ; பேசத்தெரியாமல் விழிப்பவர் . |
ஊமைக்கோட்டான்வெயில் | காண்க : ஊமைவெயில் . |
ஊமைச்சி | காண்க : ஊமச்சி ; கடல்மீன்வகை . |
ஊமைத்தசும்பு | வாயில்லாத குடம் . |
![]() |
![]() |
![]() |