ஊர்மன்றம் முதல் - ஊழிக்காய்ச்சல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஊரெறிதல் ஊரைக் கொள்ளையிடுதல் .
ஊரெறிபறை பாலைநிலத்துப் பறை .
ஊரேறு ஊர்ப்பன்றி ; பட்டிமாடு .
ஊரை மலைநெல் .
ஊரோசம் ஊரில் பரந்த புகழ் .
ஊலுகம் காண்க : உலூகம் .
ஊழ் பழைமை ; பழவினை ; தலைவிதி , பழவினைப்பயன் ; முறைமை ; குணம் ; தடவை ; முதிர்ச்சி ; மலர்ச்சி ; முடிவு ; வெயில் ; சூரியன் ; பகை .
ஊழ்குதல் எண்ணுதல் , நினைத்தல் ; தியானித்தல் .
ஊழ்த்தசை புலால் .
ஊழ்த்தல் இறைச்சி ; முடைநாற்றம் ; நரகம் ; பருவம் ; முதிர்தல் ; பதங்கெடல் ; நினைத்தல் ; உதிர்தல் ; மூடுதல் ; சிந்துதல் .
ஊழ்த்துணை மனைவி .
ஊழ்தல் முதிர்தல் .
ஊழ்பாடு முடிவுபடுகை .
ஊழ்முறை நியதி , வினைப்பயன்முறை .
ஊழ்மை முறைமை .
ஊழ்விதி பழவினைப் பயன் .
ஊழ்விணை பழவினை ; உழுவலன்பு .
ஊழ்வினைப்பயன் கருமபலன் .
ஊழகம் வைகறை .
ஊழம் வைகறை .
ஊழல் அருவருப்பானது , ஆகாதது ; நரகம் ; தாறுமாறு ; கெட்டது ; குழப்படி செய்கை ; பணமோசடி செய்கை .
ஊழலத்தி ஒரு மரவகை .
ஊழலாற்றி ஒரு மரவகை .
ஊழலித்தல் பதனழிதல் ; அருவருத்தல் ; இளைத்தல் ; மெலிதல் ; சோர்தல் ; நாற்றமடைந்து கெடுதல் .
ஊழற்சதை பெருகித் தளர்ந்த சதை .
ஊழனிலம் சேற்றுநிலம் .
ஊழி முடிவுகாலம் ; யுகமுடிவு , கடல் பெருகி உலகம் அழியும் காலம் ; நெடுங்காலம் ; பூமி ; விதி ; முறைமை ; வாழ்நாள் .
ஊழிக்காய்ச்சல் தொற்றுக்காய்ச்சல் .
ஊர்மன்றம் ஊரிலேயுள்ள மன்றம் , ஊர்ப் பொதுவிடம் .
ஊர்மன்று ஊரிலேயுள்ள மன்றம் , ஊர்ப் பொதுவிடம் .
ஊர்மாணியம் ஊர்ப் பொது ஊழியத்துக்காக விடப்பட்ட நிலம் .
ஊர்மி அலை .
ஊர்முகம் படைகள் போர் செய்யுமிடம் .
ஊர்வசி காண்க : உருப்பசி .
ஊர்வரப்பன் வெள்ளரி .
ஊர்வரை யானை .
ஊர்வலம் ஊரை வலப்பக்கமாகச் சுற்றி வருதல் ; உலாவருதல் .
ஊர்வன எழுவகைப் பிறப்புள் ஒன்று , ஊர்ந்து செல்லும் இயல்புடைய உயிரிகள் .
ஊர்வாரி ஊர்ச் சலதாரை .
ஊர்வாரியம் சிற்றூர்ச் சபை , கிராம சபை .
ஊர்வெண்பா பாட்டுடைத் தலைவனது ஊரிணைப் பத்து வெண்பாவினால் சிறப்பித் துரைக்கும் சிற்றிலக்கியவகை .
ஊரண்டினார் கள்ளி .
ஊரணி காண்க : ஊருணி .
ஊரதிசயங்காட்டி ஊரிலுள்ள அரிய பொருள்களைப் புதியோர்க்கு காட்டுபவன் , வழிகாட்டி .
ஊரமை ஊர்ப் பொதுச்செயல்களை நிருவகிக்கை .
ஊரல் ஊர்வது ; கிளிஞ்சில் ; குளுவை என்னும் ஒரு நீர்ப்பறவை ; தினவு ; ஊறுதல் ; தேமல் வகை ; படர்தாமரை நோய் ; ஈரம் ; பசுமை ; காய்ந்து வருகிற புண் ; உரிஞ்சல் ; ஊர்தல் .
ஊரவர் ஊரார் .
ஊரற்புண் ஆறாப்புண் ; காய்ந்துவரும் புண் .
ஊரறுகு அறுகுவகை .
ஊரன் மருதநிலைத் தலைவன் ; சுந்தரமூர்த்தி நாயனார் .
ஊரா ஊர்ப்பசு .
ஊராட்சி ஊர் ஆளுகை ; ஒரு பழைய வரி .
ஊராண்மை ஊரை ஆளும் தன்மை ; உபகாரியாந் தன்மை , ஒப்புரவு ; மிக்க செயல் ; ஊரின்கண் மேம்பாடுடைமை ; பகைமேற் செல்லுகை .
ஊராநற்றேர் வானவூர்தி , ஆகாயவிமானம் .
ஊரார் ஊரவர் ; அயலார் .
ஊராளன் ஊராட்சி செய்யும் ஒர் அதிகாரி .
ஊராளி ஊரதிகாரி ; உழவுத் தொழில் புரிவோன் ; ஒரு மலைச்சாதி ; வரிக்கூத்து வகை .
ஊரி புல்லுருவி ; சங்கு ; இளமை ; மேகம் ; நத்தைவகை .
ஊரிடுவரிப்பாடு ஊரார் விதித்துக்கொண்ட நிலவரி .
ஊரிலிகம்பலை ஊர்கலிகம்பலை ; ஊர்க்கலகம் .
ஊரின்னிசை தலைவனுடைய ஊரை இன்னிசை வெண்பாவினால் சிறப்பித்துரைக்கும் சிற்றிலக்கியவகை .
ஊரு தொடை .
ஊருகட்டி ஊரவை கூடுவதற்கு மரத்தைச் சுற்றி அமைக்கும் திண்ணை .
ஊருகால் நத்தை ; சங்கு .
ஊருசன் வைசியன் .
ஊருடை முருங்கைமரம் .
ஊருடைமுதலியார் முருங்கைமரம் .
ஊருடைமூலி முருங்கைமரம் .
ஊருடையான் ஊருக்கு உரிமையுடைய தலைவன் ; ஊர்க்கணக்கன் .
ஊருணி ஊரினருக்கு உண்ணும் நீர் உதவும் நீர் நிலை ; ஊரையடுத்த குளம் ; ஊரார் நீர் முகக்கும் குளம் .
ஊருணை புருவநடுச் சுழி .
ஊருத்தம்பம் தொடையில் உண்டாகும் ஒரு வகை வாதநோய் .
ஊருத்தம்பை வாழைமரம் .
ஊருவாரக்கொடி வெள்ளரி .
ஊரெழுச்சி ஊரார் திரண்டெழுகை ; ஊர்க்கலகம் .