ஊழிக்காரம் முதல் - ஊன்றிக்கொள் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஊற்றால் மீன் பிடிக்கும் கூடு ; கோழிக்குஞ்சுகளை அடைக்கும் கூடை ; உரோகிணி நாள் .
ஊற்று சுரக்கை ; கசிவு ; நீரூற்று ; ஊன்றுகோல் ; பற்றுக்கோடு , ஆதரவு .
ஊற்று (வி) ஊற்றுஎன் ஏவல் ; சிந்து ; எண்ணெயூற்று ; வார் ; சுர .
ஊற்றுக்கண் ஊற்றுத்துளை ; நிலத்தடியில் நீர் ஊற்றுள்ள இடம் ; கண்களிலிருந்து எப்போதும் நீர் வடிந்துகொண்டிருக்கும் மாட்டு நோய் வகை .
ஊற்றுக்களம் பலரும் வந்துசேரும் இடம் .
ஊற்றுக்குழி ஊற்றுப் பள்ளம் , நீர் ஊறுதலையுடைய குழி .
ஊற்றுக்கோல் காண்க : ஊன்றுகோல் .
ஊற்றுண்ணுதல் நீர் ஒழுகி வடிதல் .
ஊற்றுத்துளை நீர்நிலை ; நீர் இறைக்கும் துரவு .
ஊற்றுத் தோண்டுதல் ஊற்று உண்டாவதற்காகத் தோண்டுகை .
ஊற்றுதல் வார்த்தல் ; வடித்தல் ; வெளியே விடுதல் .
ஊற்றுப்பட்டை நீர் இறைக்கும் பட்டை .
ஊற்றுப்பறி மடு முதலியவற்றில் மீன்பிடிக்கும் கருவி .
ஊற்றுப்பூ தேங்காய்ப் பிண்ணாக்கு .
ஊற்றுப்பெட்டி எண்ணெய் ஊற்றுதற்குக் கருவியான பெட்டி , எண்ணெய் ஊற்றும் கூடை .
ஊற்றுப் பெயர்தல் ஊற்றுத் திரும்புதல் .
ஊற்றுப்போடுதல் ஆற்றில் ஊற்றுக்குழி தோண்டுதல் .
ஊற்றுமரம் எண்ணெயூற்று மரம் , செக்குலக்கை .
ஊற்றெடுத்தல் ஊற்றுத் தோன்றுதல் ; ஊற்றுத் தோண்டுதல் .
ஊற்றெண்ணெய் வடித்தெடுக்கும் எண்ணெய் .
ஊற்றெழுதல் ஊற்றுப் பெயர்தல் .
ஊறணி ஊற்று ; கசிவுநிலம் ; சேற்றுநிலம் ; வருவாய் .
ஊறல் ஊறுதல் ; நீரூற்று ; சாறு ; பால் முதலியன சுரத்தல் ; மருந்திலூறல் ; மருந்தின் சாரம் ; பஞ்சலோகக்கலப்பு ; களிம்பு ; வருவாய் ; நீர்வற்றாப் பசுமை ; தோலின் மீதுண்டாகும் ஒரு நோய் .
ஊறவைத்தல் ஊறும்படி வைத்தல் ; நீரில் பதம் பெறச் செய்தல் .
ஊறற்பதம் பச்சைப் பதம் .
ஊறற்பாக்கு நீரில் ஊறிய பாக்கு .
ஊறு உறுகை ; தொடுஉணர்வு ; இடையூறு ; கொலை ; உடம்பு ; காயம் ; வல்லூறு ; நாசம் .
ஊறுகறி உப்பு முதலியன சேர்த்து ஊற வைக்கும் காய் ; உப்பு , காரம் இவற்றில் பதப்படுத்தும் உணவுவகை ; அடைகாய் .
ஊறுகாய் உப்பு முதலியன சேர்த்து ஊற வைக்கும் காய் ; உப்பு , காரம் இவற்றில் பதப்படுத்தும் உணவுவகை ; அடைகாய் .
ஊறுகோள் காயம் , புண் , கொலை .
ஊறுதல் நீரூறுதல் ; கசிதல் ; செவ்வியுறுதல் ; சுரத்தல் ; பெருகுதல் ; தேறுதல் ; சாரமேறுதல் ; பால் முதலியன சுரத்தல் ; நீர் பெருகுதல் ; மெலிந்தவுடல் தேறுதல் ; வாய் ஊறுதல் ; பலவழியினும் பொருள் வந்தடைதல் ; உள்ளிறங்கல் ; நனைதல் ; இடைவிடாது சுரத்தல் ; ஊறுகாய்ப் பதமாதல் .
ஊறுபாடு துன்பம் ; தீமை ; புண்படுகை ; காயம் ; சேதம் .
ஊறுபுண் ஆறிவரும் புண் .
ஊறெண்ணெய் உச்சியில் ஊறும் எண்ணெய் .
ஊறை சவ்வரிசி .
ஊன் தசை , இறைச்சி ; கொழுப்பு ; உடம்பு .
ஊன்கணார் மாந்தர் ; அறிவில்லாதவர் .
ஊன்செய்கோட்டம் உடல் .
ஊன்றக்கட்டுதல் பலப்படுத்தல் .
ஊன்றி ஒரு பாம்புவகை .
ஊன்றிக்கேட்டல் உன்னிப்பாய்க் கேட்டல் , கருத்தாய்ச் செவிகொடுத்தல் , மிகக் கருத்தாகக் கேட்டல் ; உற்றுக்கேட்டல் ; அழுத்தி வினாதல் .
ஊன்றிக்கொள் (வி) நிலைபெறு ; சார்ந்திரு .
ஊழிக்காரம் இதள் , பாதரசம் .
ஊழிக்கால் ஊழிக்காற்று , உலகமுடிவுக் காலத்தில் தோன்றும் காற்று .
ஊழிக்காலம் உலகம் அழியும் காலம் .
ஊழிக்காற்று உலகம் அழியும் காலத்துத் தோன்றும் பெருங்காற்று ; நச்சுக்காற்று .
ஊழித்தீ வடவையனல் , உலக முடிவுக் காலத்தில் தோன்றும் நெருப்பு .
ஊழிநாயகன் உலகை அழிக்கும் கடவுள் ; ஊழிக்காலத்தும் அழியாது இருக்கும் இறைவன் .
ஊழிநோய் பெருவாரிநோய் , தொற்றுநோய் .
ஊழிமுதல்வன் கடவுள் .
ஊழியக்காரன் வேலைக்காரன் ; அடியான் .
ஊழியம் தொண்டு ; சிறைப்பட்டோர் செய்யும் வேலை .
ஊழியமறியல் கடுங்காவல் .
ஊழிய மானியம் பொதுப்பணி செய்வார்க்காக விடப்படும் நிலம் .
ஊழியன் அடிமை ; பணியாள் .
ஊழியான் நெடுங்கால வாழ்க்கையுடையான் ; கடவுள் .
ஊழில் அருவருப்பைக் கொடுக்கும் சேறு .
ஊழிலை இலைச்சருகு .
ஊழுறுதல் குடைதல் .
ஊழை பித்தம் .
ஊழைக்குருத்து துளசிப்பூண்டு .
ஊளன் நரி ; ஆண் நரி .
ஊளா நெடுவாய்மீன் .
ஊளான் நரி ; கடல்மீன்வகை .
ஊளி நெடுவாய்மீன் ; சத்தம் ; நாய் நரி முதலியன கத்தும் ஒலி ; பசி .
ஊளை நரி முதலியவற்றின் கூப்பீடு ; தீ நாற்றம் ; ஊத்தை .
ஊளைக்காது சீழ்வடியும் காது .
ஊளையிடுதல் நாய் நரி முதலியவை கூக்குரலிடுதல் .
ஊற்காரம் கக்குதல் , வாயாலெடுத்தல் .
ஊற்றங்கால் வயல் , தோட்டம் முதலியவற்றில் நீர் வடியும்படி இடும் சிறு கால்வாய் .
ஊற்றங்கோல் காண்க : ஊன்றுகோல் .
ஊற்றம் பற்றுக்கோடு ; அசைவின்றி நிற்றல் ; வலிமை ; மனவெழுச்சி ; மேம்பாடு ; பழக்கம் ; இடையூறு ; கேடு ; தொடுவுணர்ச்சி ; புகழ் ; அறிவு .
ஊற்றருகி நீர் .
ஊற்றாணி கலப்பையுறுப்புள் ஒன்று .
ஊற்றாம்பெட்டி காண்க : ஊற்றுப்பெட்டி .