சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| எய்தல் | அடைதல் , சேர்தல் ; அம்பைச் செலுத்தல் ; நிகழ்தல் ; சம்பவித்தல் ; பெறுதல் . |
| எய்துதல் | அணுகுதல் ; அடைதல் , சேர்தல் ; பணிதல் ; நீங்குதல் ; பொருந்துதல் ; நிகழ்தல் ; உண்டாதல் ; போதியதாதல் ; பயன் நுகர்தல் . |
| எய்ப்பன்றி | முள்ளம்பன்றி . |
| எய்ப்பாடி | வேடர் ஊர் . |
| எய்ப்பினில்வைப்பு | கேட்டில் உதவும் பொருள் , இளைத்த காலத்தில் உதவுதற்காகச் சேர்த்து வைக்கும் பொருள் சேமநிதி ; தான் தளர்ந்தும் பிறரைத் தாங்குவது . |
| எய்ப்பு | இளைப்பு தளர்ச்சி , ஒடுக்கநிலை ; வறுமைக்காலம் . |
| எய்ப்போத்து | ஆண் முள்ளம்பன்றி . |
| எய்ம்மான் | காண்க : எய்ப்பன்றி . |
| எய்யாமை | அறியாமை . |
| எயில் | மதில் ; ஊர் ; நகரம் . |
| எயில்காத்தல் | அகத்தோன் உள்ளிருந்து கோட்டையைக் காத்து நிற்பக் கூறும் புறத்துறை . |
| எயிற்றம்பு | அலகம்பு . |
| எயிற்றி | எயினச்சாதிப் பெண் , பாலைநிலப் பெண் , வேட்டுவப் பெண் . |
| எயிற்றுவலி | பல்ல¦று வளர்தலால் உண்டாகும் நோவு . |
| எயிறதைப்பு | பல்லின் அடிவீக்கம் . |
| எயிறலைத்தல் | பற்கடிப்பு , பல்லைக் கடித்தல் ; சினத்தால் பல்லைக் கடித்தல் . |
| எயிறிலி | சூரியன் . |
| எயிறு | பல் ; பல்லின் விளிம்பு ; யானைக்கோடு ; பன்றிக்கொம்பு ; கணு . |
| எயிறுதின்றல் | பற்கடித்தல் ; சினத்தால் பல்லைக் கடித்தல் . |
| எயிறுதின்னுதல் | பற்கடித்தல் ; சினத்தால் பல்லைக் கடித்தல் . |
| எயின் | வேடச்சாதி , பாலைநில மக்கள் , மறவர் . |
| எயின்கடன் | பலிக்கடன் . |
| எயின்சேரி | வேடரது ஊர் . |
| எயினன் | வேடன் . |
| எரங்காடு | பாழ்நிலம் ; பருத்தி விளைதற்குரிய செழித்த புன்செய் நிலம் . |
| எரி | நெருப்பு ; வேள்வித் தீ ; தீக்கடைகோல் ; ஒளி ; அக்கினிதேவன் ; நரகம் ; கார்த்திகை ; புனர்பூசம் ; கந்தகம் ; இடபராசி ; கேட்டை ; வால்மீன்வகை . |
| எரி | (வி) எரிஎன் ஏவல் ; ஒளிர் ; அழல் ; பொறாமைகொள் ; சினங்கொள் ; வயிறெரி . |
| எரிக்கொடி | நெருப்பின் கொழுந்து ; முடக்கொற்றான் ; சோதிக்கொடி . |
| எரிகதிர் | சுடுகதிர் ; கதிரவன் , சூரியன் . |
| எரிகரும்பு | விறகு . |
| எரிகறி | சுண்டற்கறி . |
| எரிகாசு | காசுக்கட்டி . |
| எரிகாலி | காட்டாமணக்கு . |
| எப்போழ்தும் | காண்க : எப்பொழுதும் . |
| எம் | ' யாம் ' என்பது பொருள் வேற்றுமைப்பட வரும்பொழுது திரியும் நிலை ; எம்முடைய ; உளப்பாட்டுத் தன்மைப் பன்மை விகுதி . |
| எம்பர் | எவ்விடம் . |
| எம்பரும் | எவ்விடத்தும் . |
| எம்பி | எமக்குப்பின் பிறந்தவன் , எம் தம்பி , இளையவன் . |
| எம்பிராட்டி | எங்கள் தலைவி . |
| எம்பிரான் | எங்கள் தலைவன் ; எங்கள் தேவன் ; கடவுள் . |
| எம்புகம் | நிலக்கடம்பு . |
| எம்பெருமான் | காண்க : எம்பிரான் . |
| எம்பெருமான்வெட்டு | ஒரு பழைய நாணயவகை . |
| எம்பெருமானார் | இராமானுசர் . |
| எம்மர் | எம்முடையோர் , எமது சுற்றத்தார் . |
| எம்மவர் | எம்முடையோர் , எமது சுற்றத்தார் . |
| எம்மனை | எம் தாய் , தாய் |
| எம்மனோர் | எம்மை ஒத்தவர் , எம்மோடொத்தவர் ; நாங்கள் . |
| எம்மான் | எம் தந்தை ; எம் கடவுள் : எம் மகன் . |
| எம்முன் | எம் தமையன் . |
| எம்மை | எப்பிறப்பு ; எம் தலைவன் ; எவ்வுலகு . |
| எம்மையோர் | காண்க : எம்மவர் . |
| எம்மோன் | எம் தலைவன் . |
| எமகணம் | எமனுடைய கூட்டத்தார் . |
| எமகாதகன் | பெருந்திறல் படைத்தவன் . |
| எமகிங்கரன் | எமனுடைய ஏவல் செய்வோன் , எமனுடைய வேலையாள் . |
| எமதங்கி | சமதக்கினி , பரசுராமனின் தந்தை . |
| எமதருமன் | யமன் . |
| எமதூதன் | யமனுடைய தூதன் ; நல்லபாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று . |
| எமதூதி | நாகப்பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று . |
| எமநாகம் | ஊமத்தை ஓமம் . |
| எமநாமம் | ஊமத்தை ஓமம் . |
| எமபாசம் | யமனுடைய கயிறு . |
| எம்புரம் | யமனுடைய தலைநகர் , வைவச்சுத நகரம் . |
| எமர் | எம்மவர் ; எம்போலியர் . |
| எமரங்கள் | எம்மவர்கள் , எம் சுற்றத்தவர்கள் . |
| எமரன் | எம்மைச் சேர்ந்தவன் ; எமன் . |
| எமராசன் | யமன் . |
| எமன் | யமன் , எம்முடையன் , சுற்றத்தான் . |
| எமி | தனிமை ; கூடியிருப்போன்(ள்) . |
| எமுனை | யமுனையாறு . |
| எய் | முள்ளம்பன்றி ; அம்பு ; ஓர் உவமவுருபு . |
| எய் | (வி) எய்என் ஏவல் , அம்பு செலுத்து . |
| எய்த்தல் | இளைத்தல் ; குறைவடைதல் ; மேய் வருந்துதல் ; ஓய்தல் ; வறுமையடைதல் ; காலூன்றி நிற்கும்படி நீர் ஆழமில்லாது இருத்தல் ; அறிதல் . |
| எய்த | நன்றாக ; நிரம்ப . |
|
|
|