சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| எருத்துப்பூட்டு | ஏர்ப்பூட்டு ; நல்ல நாளில் ஏர் பூட்டி உழத் தொடங்குதல் . |
| எருத்துமாடு | எருது , காளை ; பொதிமாடு . |
| எருத்துவாலன் | நீண்ட வாலுள்ள ஒரு குருவிவகை ; கோரைக்கிழங்கு . |
| எருதடித்தல் | உழுதல் ; சூடடித்தல் , நெற்கதிரைக் கடாவிட்டுத் துவைத்தல் . |
| எருது | இடபம் , காளைமாடு ; இடபராசி . |
| எருதுகட்டி | சல்லிக்கட்டில் காளையை மடக்குவோன் . |
| எரிப்பு | கார்ப்புச் சுவை ; பொறாமை ; நெஞ்செரிப்பு ; எரிக்கை . |
| எரிப்புறம் | நரகம் . |
| எரிப்பூ | எரிபோலும் நிறமுள்ள பூ . |
| எரிபடுவன் | பிளவை நோய்வகை . |
| எரிபந்தம் | தீவட்டி ; உடலெரிச்சல் . |
| எரிபரல்வட்டம் | ஏழு நரகத்துள் ஒன்று . |
| எரிபிடாரி | எரிச்சலுடையவள் ; உக்கிரமாகாளி , கொற்றவை . |
| எரிபுழு | தொட்டால் எரிச்சலுண்டாக்கும் புழு கம்பளிப்பூச்சி . |
| எரிபொத்துதல் | நெருப்பு மூட்டுதல் . |
| எரிபொழுது | மாலைவேளை ; செவ்வானப் பொழுது . |
| எரிமணி | ஒளியுள்ள மணி , மாணிக்கம் . |
| எரிமருந்து | எரித்தெடுக்கும் மருந்து ; உறைப்பான மருந்து ; வெடிமருந்து |
| எரிமலர் | முருக்கமலர் ; செந்தாமரை . |
| எரிமலை | நெருப்பைக் கக்கும் மலை . |
| எரிமுகி | சேங்கொட்டை மரம் . |
| எரியல் | எரிவு ; ஒளிவிடுகை ; எரிந்தது . |
| எரியவிட்ட மருந்து | நீற்றின பற்பம் . |
| எரியவிழித்தல் | சினத்தோடு நோக்குதல் . |
| எரியாடி | ஊழித்தீயில் நின்று ஆடுவோன் , அழலைக் கையிலேந்தி ஆடுபவன் , சிவன் . |
| எரியூட்டுதல் | தீக்கொளுத்துதல் , நெருப்புக்கு இரையாக்குதல் ; வேள்வித் தீ வளர்த்து வழிபடல் . |
| எரியோம்புதல் | வேள்வி செய்தல் . |
| எரியோன் | அக்கினிதேவன் , தீக்கடவுள் . |
| எரிவட்டம் | காண்க : எரிபரல்வட்டம் . |
| எரிவண்டு | எரிச்சலுண்டாக்கும் வண்டு , பட்ட இடம் எரியும் வண்டு ; கண்ணில் அடிக்கும் வண்டு . |
| எரிவந்தம் | எரிச்சல் ; சினம் . |
| எரிவளர்ப்போர் | வேள்வித்தீ வளர்ப்போர் . |
| எரிவனம் | சுடுகாடு |
| எரிவிரியன் | எரிச்சலை உண்டாக்கும் விரியன் பாம்புவகை . |
| எரிவிழித்தல் | தீக்கண்ணாற் பார்த்தல் , சினந்து நோக்குதல் . |
| எரிவிளக்குறுத்தல் | நடைவிளக்கெரித்துத் தண்டித்தல் , குற்றவாளியின் தலைமேல் எரியும் விளக்கை வைத்து நகரைச் சுற்றிவரச் செய்யும் தண்டனை . |
| எரிவு | எரிகை , உடலெரிச்சல் ; பொறாமை ; சினம் . |
| எரு | உரம் ; சாணி ; வறட்டி ; பசளை ; மலம் . |
| எருக்கட்டுதல் | பயிரிடும் நிலத்தில் எருவிடும் பொருட்டு ஆடு மாடு முதலியவற்றைக் கிடைவைத்தல் . |
| எருக்கட்டு | கிடைவைத்த கொல்லை . |
| எருக்கட்டுதல் | கிடைவைத்தல் ; சாணம் சேர்த்தல் . |
| எருக்கம் | எருக்கஞ்செடி ; எருக்கம்பூமாலை . |
| எருக்கழித்துக் கொடுத்தல் | வைக்கோலில் சாணியிட்டுக் கொடுத்து மாட்டின் விற்பனையை உறுதிப்படுத்துதல் . |
| எருக்களம் | எருவிருக்குமிடம் , எருச் சேமிக்கும் இடம் . |
| எருக்கு | எருக்கஞ்செடி ; வெள்ளெருக்கு ; துன்பம் . |
| எருக்குதல் | வருத்துதல் ; கொல்லுதல் ; வெட்டுதல் ; தாக்குதல் , அடித்தல் ; அழித்தல் ; சுமத்துதல் ; தாக்கி ஒலியெழச் ; செய்தல் . |
| எருக்குரல் | தாக்குதலால் ஏற்பாடும் ஒலி . |
| எருக்கொடுத்தல் | காண்க : எருக்கழித்துக் கொடுத்தல் . |
| எருச்சாட்டி | எருவிட்ட நிலம் . |
| எருத்தடி | செய்யுளின் ஈற்றயலடி . |
| எருத்தம் | கழுத்து ; பிடர் ; தோள் , கலிப்பாவின் உறுப்புகளுள் ஒன்றாகிய தரவு ; செய்யுளின் ஈற்றயலடி . |
| எருத்தன் | காளைபோன்ற வலிமையுடையவன் . |
| எருத்து | கழுத்து ; தரவு என்னும் கலிப்பாவின் முதலுறுப்பு ; செய்யுளின் ஈற்றயலடி . |
| எருத்துக்காளை | இளவெருது . |
| எருத்துத்திமில் | மாட்டுக்கொண்டை , விடையின் முரிப்பு ; மாட்டின் முசுப்பு . |
| எருத்துப்புரை | மாட்டுக்கொட்டில் . |
| எரிகுஞ்சி | செம்மயிர் . |
| எரிகுட்டம் | குட்டநோய்வகை . |
| எரிகுடல் | எரிவயிறு , மிகு பசி . |
| எரிகுடலன் | மிகுந்த பசியுடையவன் . |
| எரிகும்பவாயு | வயிற்றுநோய்வகை . |
| எரிகுன்மம் | குன்மநோய்வகை . |
| எரிகொள்ளி | கொள்ளிக்கட்டை , கடைக்கொள்ளி . |
| எரிச்சல் | எரிவு ; அழற்சி ; உறைப்பு ; சினம் ; பொறாமை ; பெருங்காயம் ; வெறுப்பு . |
| எரிசனம் | நரகர் , நிரயத்திருப்போர் . |
| எரிசாலை | மருந்துப் பூண்டுவகை . |
| எரிசுடர் | எரியும் நெருப்பு ; மிக்க ஒளி ; செவ்வொளி ; தீ ; விளக்கு . |
| எரித்தல் | தீயில் வேகச்செய்தல் ; அழற்றுதல் ; செரிக்கச் செய்தல் ; விளக்கை எரியச்செய்தல் ; மருந்து முதலியன புடமிடுதல் . |
| எரிதல் | சுடருண்டாதல் ; ஒளிவிடுதல் ; எரிச்சலுண்டாதல் ; பொறாமை கொள்ளுதல் ; சினத்தல் ; துயரமடைதல் . |
| எரிதுரும்பு | காண்க : எரிகரும்பு . |
| எரிதூவுதல் | தீப்பற்றுதல் . |
| எரிதைலம் | கடைச்சரக்கிட்டுக் காய்ச்சிய எண்ணெய் . |
| எரிந்துவிழுதல் | சினமாகப் பேசுதல் ; மூர்க்கங் காட்டுதல் . |
| எரிநகை | வெட்சிமலர் . |
| எரிநரகம் | காண்க : எரிபரல்வட்டம் . |
|
|
|