சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| எழுத்துச்சுருக்கம் | சொல்லின் எழுத்துச் சுருங்குவதற்காக இடையிற் சிறு கோடிட்டு முதல் இறுதி எழுத்துகளை மட்டும் எழுதுவது , முழுப்பெயர்களைச் சுட்டும் சுருக்க முதற்குறிப்புகள் , அக்கரச்சுதகம் . |
| எழுத்துநடை | எளிய இனிய நடை . |
| எழுத்துப்படிதல் | கையெழுத்து ஒருநிலைப் படுதல் . |
| எழுத்துப்பானை | ஓவியம் தீட்டப்பெற்ற பானை . |
| எழுத்துப்பிசகு | எழுத்திலக்கண வழு , எழுத்துத் தவறு . |
| எழுத்துப்பிழை | எழுத்திலக்கண வழு , எழுத்துத் தவறு . |
| எழுத்துப்புடைவை | சித்திரச்சேலை . |
| எழுத்துப்பொருத்தம் | ஒரு காப்பியத்தின் தொடக்கச் செய்யுளின் முதல் மொழி ஒற்றெழுத்துட்பட மூன்று , ஐந்து , ஏழு , ஒன்பது என்னும் எழுத்துகள் கொண்ட ஏதேனும் ஒன்றைப் பெற்றுவரும் செய்யுள் முதல் மொழிப் பொருத்தம் ; பிறந்த நட்சத்திரங்களுக்குரிய எழுத்துகளில் ஒன்றோடு தொடங்கப் பெயரிடுதல் . |
| எழுத்துமடக்கு | சொல்லணி மடக்கு வகையுள் ஒன்று ஓரெழுத்தையே பின்னும் மடக்கிக் கூறுதல் . |
| எழுத்துமறைவேளை | மாலைப்பொழுது . |
| எழுத்து வருத்தனம் | ஓரெழுத் தொருமொழியாய்ப் பின் அதனோடு எழுத்துகள் ஒவ்வொன்றாய்ச் சேர வேறு வேறு பொருள் தந்து நிற்கை . |
| எழுத்து வாங்குதல் | அடிமையாவதற்கு அறிகுறியாக ஆண்டான் பெயரை மார்பில் எழுதிக்கொள்ளுதல் ; கையெழுத்து வாங்குதல் . |
| எழுத்துவாசனை | எழுத்துநடை ; எழுதவும் படிக்கவும் அறிதல் . |
| எழுத்துவெட்டுதல் | எழுத்துப்பொறித்தல் ; கல் ; உலோகம் ; பாண்டம் முதலியவற்றில் எழுத்துச் செதுக்குகை . |
| எழுத்துவேலை | இராயசம் ; சீலைச் சித்திரத்தொழில் . |
| எழுத்தூசி | எழுத்தாணி . |
| எழுத்தெண்ணிப்படித்தல் | ஒன்றும் விடாமல் படித்தல் ; நன்றாகப் படித்தல் ; எழுத்துக்கூட்டிப் படித்தல் . |
| எழுதகம் | சிற்ப வேலையில் ஒன்று ; சித்திரவேலை ; தூணின் அடிக்கல் . |
| எழுதம் | சிற்ப வேலையில் ஒன்று ; சித்திரவேலை ; தூணின் அடிக்கல் . |
| எழுதல் | எழுந்திருத்தல் ; மேல் எழும்புதல் ; தோன்றுதல் ; புறப்படுதல் ; தொழிலுறுதல் ; பெயர்தல் ; மனங் கிளர்தல் ; மிகுதல் ; வளர்தல் ; உயிர்பெற்றெழுதல் ; துயிலெழுதல் ; பரவுதல் ; தொடங்குதல் . |
| எழுதாக்கிளவி | மறை ,வேதம் . |
| எழுகூற்றிருக்கை | சித்திரகவி வகையுள் ஒன்று , ஒன்று முதல் ஏழு வரையும் எண்கள் முறையே ஒவ்வொன்றாக ஏறியும் இறங்கியும் வருமாறு கூறப்படும் மிறைக்கவிவகை . |
| எழுச்சி | ஊக்கம் , முயற்சி ; இறுமாப்பு ; எழுகை , எழும்புகை ; பள்ளியெழுச்சிப் பாட்டு ; காதிலெழும்பும் புண் ; கண்ணோயுள் ஒன்று ; புறப்பாடு ; உற்பத்தி ; ஆதி . |
| எழுச்சிக்கண்ணோவு | கண் கூச்சமுண்டாக்கும் நோய் . |
| எழுச்சிக்கொட்டுதல் | புறப்பாட்டுக்கு உரிய வாத்தியம் முழக்குதல் . |
| எழுச்சிக்கொடி | கண்ணோய்வகை , கண்ணிற்படருமொரு நோய் . |
| எழுச்சிபாடுவான் | அரசர் முதலியோருக்கு பள்ளியெழுச்சி பாடுவோன் . |
| எழுச்சிமுரசம் | பள்ளியெழுச்சி முரசம் ; புறப்பாட்டு முரசம் . |
| எழுச்சியிலை | கண்ணோயக்குரிய மருந்திலை . |
| எழுஞாயிறு | கதிரவன் தோற்றம் ; உதயசூரியன் ; ஒருவகைத் தலைநோய் . |
| எழுத்தச்சு | அச்சிட உதவும் எழுத்தமைந்த உரு . |
| எழுத்தடைத்தல் | எழுத்துகளை அறைவகுத்து அடைத்தல் ; மந்திரங்களின் எழுத்துகளை அவ்வவற்றிற்குரிய சக்கரங்களின் அறைக்குள் பொருத்தி எழுதுதல் . |
| எழுத்ததிகாரம் | எழுத்திலக்கணம் கூறும் பகுதி . |
| எழுத்தந்தாதி | ஒரு செய்யுளின் ஈற்றெழுத்து அடுத்த செய்யுளின் முதலெழுத்தாகவோ ஓரடியின் ஈற்றெழுத்து அடுத்த அடியின் முதல் எழுத்தாகவோ வரத் தொடுப்பது . |
| எழுத்தலங்காரம் | எழுத்தணி ; எழுத்தைக் கூட்டல் குறைத்தல் மாற்றங்களால் தோன்றும் அழகு . |
| எழுத்தலிசை | எழுத்தோசையாகாத முற்கு , வீளை , செருமுதல் முதலியவை . |
| எழுத்தறப்படித்தல் | எழுத்தோசை தெளிவாகப் படித்தல் , எழுத்துகள் நன்றாகப் புலப்படும்படி படித்தல் . |
| எழுத்தாணி | ஓலையில் எழுதுதற்குரிய கருவி , ஓலையில் எழுதும் இரும்பாணி ; ஒருவகைப் பூண்டு . |
| எழுத்தாணிக்கள்ளன் | கள்ளக் கணக்கு எழுதுவோன் . |
| எழுத்தாணிக்குருவி | மரங்கொத்திக் குருவி . |
| எழுத்தாணிப்பூச்சி | பூச்சிவகையுள் ஒன்று . |
| எழுத்தாளன் | எழுதுவோன் ; புலவன் . |
| எழுத்தானந்தம் | பாடப்படுவோன் பெயரைச் சார்த்தி எழுத்தளபெழப் பாடுவதாகிய செய்யுட் குற்றம் . |
| எழுத்தியல் | எழுத்திலக்கணம் கூறும் நூற்பிரிவு . |
| எழுத்திலாஓசை | எழுத்தலிசை , தனக்கு அறிகுறியாக எழுத்துகள் அமையப் பெறாத ஒலி . |
| எழுத்தின்கிழத்தி | கலைமகள் . |
| எழுத்து | அக்கரம் ; கல்வி ; எழுதப்பட்ட தாள் , கடிதம் ; கையெழுத்து ; ஆதாரச் சீட்டு ; கைரேகை ; உடன்படிக்கைச் சீட்டு ; இலக்கணம் ; அட்டவணை ; சித்திரம் . |
| எழுத்துக்கிறுக்கு | உடன்படிக்கை எழுதுகை ; உடன்படிக்கைப் பத்திரம் . |
| எழுத்துக்குற்றம் | எழுத்திலக்கண வழு . |
| எழுத்துக்கூட்டுதல் | எழுத்துகளை தனித்தனியே ஒலித்துப் படித்தல் . |
| எழுத்துச்சந்தி | எழுத்துப் புணர்ச்சி . |
| எழுத்துச்சாரியை | எழுத்துகளைச் சொல்லுகின்ற போது சேர்க்கப்படுகிற சாரியைச் சொற்கள் ; கரம் ; காரம் , கான் போன்றவை . |
| எழுத்துச்சிற்றாடை | சித்திரவேலைப்பாடு அமைந்த சிற்றாடைவகை . |
| எழுத்துச்சீலை | சித்திரம் தீட்டிய சீலை . |
| எழுத்துச்சுதகம் | அக்கரச்சுதகம் . |
| எவற்றையும் | எல்லாவற்றையும் . |
| எவன் | யாவன் ; எவ்வண்ணம் ; எப்படி ; யாது ; யாவை ; என்ன ; ஏன் ; வியப்பு இரக்கச் சொல் . |
| எவை | யாவை . |
| எவையும் | யாவையும் . |
| எழல் | எழும்பல் ; கிளர்ச்சி ; தோன்றுதல் ; புறப்படுதல் ; உதித்தல் ; மேற்பட்டு வருதல் ; துயரம் . |
| எழவாங்குதல் | தொலைவிற்போதல் . |
| எழாநிலை | யானை கட்டும் கூடம் . |
| எழால் | புல்லாறு என்னும் பறவை ; யாழ் ; யாழ் எழும் இன்னிசை ; மக்கள் மிடற்றிசை . |
| எழில் | அழகு ; இளமை ; வண்ணம் ; தோற்றப்பொலிவு ; உயர்ச்சி ; பருமை ; குறிப்பு ; சாதுரிய வார்த்தை ; வலி . |
| எழில்காட்டுதல் | காண்க : அழகு காட்டுதல் , நொடித்துக் காட்டுதல் . |
| எழில்சொல்லுதல் | குறிப்பிற் சொல்லுதல் . |
| எழில்நலம் | வடிவழகு . |
| எழில்பிடித்தல் | மணம் பிடித்தல் . |
| எழிலி | மேகம் . |
| எழிலிய | அழகுபொருந்திய . |
| எழிற்கை | அழகுபெறக் காட்டுங்கை . |
| எழினி | இடுதிரை , திரைச்சீலை ; உறை ; கடையேழு வள்ளல்களுள் ஒருவன் . |
| எழு | தூண் ; படைக்கலவகை ; கதவை உள்வாயிற்படியில் தடுக்கும் மரம் . |
| எழுகடல் | உப்பு , நீர் , பால் , தயிர் , நெய் , கருப்பஞ்சாறு , தேன் இவற்றை உடைய ஏழுவகைக் கடல்கள் . |
| எழுகளம் | போர்க்களம் . |
|
|
|